மழைக்காலத்தில் ஆடைகளிலிருந்து துர்நாற்றத்தை அகற்ற
பொதுவாக மழை காலம் தொடங்கிவிட்டால் பெரும்பாலான இல்லத்தரசிகளின் பிரச்சனையாக இருப்பது துணிகளை காய வைப்பது தான். காரணம் மழைக்காலங்களில் குளிரும் மழையும் இருக்கும் வெயில் இருக்காது. துவைத்த துணிகளை காய வைக்க முடியாது. அதனால் துணிகளில் துர்நாற்றம் வரும். வீட்டிற்குள் காய வைப்பதால் வீடுகளிலும் துர்நாற்றம் இருக்கும். இதனால் மழைக்காலங்களில் வீடுகள் வாசிக்கவே நமக்கு கஷ்டமாக இருக்கும். இதன் பயன்படுத்தும் துணிகளின் தேவை அதிகரிக்கும். இந்த பிரச்சனைகளை தீர்க்க மழைக்காலங்களில் துணிகளில் துர்நாற்றம் இல்லாமல் என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
ways to Remove Musty Smell From Clothes in Monsoon :
Tips 1:
வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை நீங்கள் துணிகளை துவைக்கும் பொது சலவை சோப்பு உடன் பயன்படுத்தி துவைக்கும் போது, துணிகளில் இருந்து துர்நாற்றங்களை அகற்றும்.
வினிகர் துணிகளில் உள்ள கறைகளை நீக்குவதுடன் மழைக்காலங்களில் துணிகளில் இருக்கும் பாக்டீரியாவை எதிர்த்து போராடும். இதனால் துணிகளில் துர்நாற்றங்கள் இருக்காது.
Tips 2:
எலுமிச்சை பழத்தில் அமில தன்மை இருப்பதால் அவை மழைக்காலங்களில் உருவாகும் பூஞ்சைகளை பல வீட்டுத் தேவைகளை சரிசெய்கிறது. இயற்கையில் அமிலத்தன்மை இருப்பதால், எலுமிச்சை வாசனையை ஏற்படுத்தும் பூஞ்சைகளை அழிக்கும். எலுமிச்சை மற்றும் ரோஜாவைக் கொண்ட சவர்க்காரத்தைப் பயன்படுத்துங்கள், இதனால் உங்கள் ஆடைகள் புதிய வாசனையுடன் இருக்கும். துணிகளை துவைக்கும் போது சவர்க்காரத்துடன் சிறிது எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |