10 நாளில் உடல் எடை குறைய டயட் உணவு அட்டவணை – Diet Food for Weight Loss in Tamil
உடல் எடையை குறைக்க நினைக்கும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெறும் இரண்டு வாரத்தில் உடல் எடையை குறைக்க டயட் சார்ட் பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். இந்த டயட் அட்டவணை அனைவரும் பயன்படும் வகையில் தான் இருக்கும். ஆக ஆண்கள், பெண்கள், சிறியவர்கள் என்று அனைவருமே இந்த டயட் உணவு அட்டவணையை மேற்கொள்ளலாம்.
இந்த டயட்டுடன் நீங்கள் மேலும் செய்யவேண்டிய விஷயம் என்னவென்றால் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகாசன இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து செய்து வருவது மிகவும் சிறந்தது. அப்பொழுது தான் மிக விரைவாக உங்கள் உடல் எடையை குறைக்க முடியும். வெறும் டயட் மட்டும் பாலோ செய்தால் குறைந்தது உங்களுக்கு இரண்டு மூன்று மாதங்களாவது தேவைப்படும். சரி வாங்க 10 நாளில் உடல் எடை குறைய டயட் உணவு அட்டவணை என்ன உள்ளது என்று இப்பொழுது பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
1500 Calorie Diet Plan Tamil:
டயட் உணவு அட்டவணை – Diet Food for Weight Loss in Tamil |
1 அதிகாலை (7:00 முதல் 8:00 வரை) |
2 காலை உணவு (காலை 9:00 முதல் 10:00 வரை) |
3 மத்தியானம் (காலை 11 – 12 மணி) |
4 மதிய உணவு (மதியம் 1:00 – 2:00 மணி) |
5 மதிய உணவுக்குப் பிறகு (பிற்பகல் 3:00 – மாலை 4:00) |
6 மாலை சிற்றுண்டி (மாலை 5:00 – மாலை 6:00) |
7 இரவு உணவு (இரவு 8:00 – இரவு 9:00) |
8 உறக்க நேர சிற்றுண்டி (இரவு 10:00 – இரவு 11:00 வரை) |
ஒரு சீரான உணவை உண்பது என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுப்பதுடன், உடல் எடையையும் சீராக வைத்துக்கொள்ளும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கலோரிகள் குறைந்த உணவுகளை தேர்வு செய்வது மிகவும் சிறந்தது. சரி இப்பொழுது கலோரிகள் குறைந்த டயட் உணவு அட்டவணையை பார்க்கலாம் வாங்க.
அதிகாலை (7:00 முதல் 8:00 வரை):
அதிகாலை எழுந்தவுடன் ஒரு கப் பிளாக் காபி அல்லது ஒரு கிளாஸ் மஞ்சள் பால் தினமும் அருந்திவருவது மிகச்சிறப்பு.
காலை உணவு (காலை 9:00 முதல் 10:00 வரை):
ஒரு கப் அவல் உப்புமா அல்லது ரவை உப்புமா காய்கறி சாண்ட்விச் எடுத்துக்கொள்ளலாம். அல்லது சப்பாத்தியில் செய்த இரண்டு அடை தோசை. அல்லது கார்ன் ஃப்ளேக்ஸ் ஒரு கிண்ணம். அல்லது கிரீம் இல்லாமல் ஒரு கிளாஸ் பால் மற்றும் பழம் 100 கிராம். இவற்றில் எதாவது ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம்.
மத்தியானம் (காலை 11 – 12 மணி):
வேகவைத்த முட்டை ஒன்று அல்லது ஒரு கப் கிரீன் டீ அல்லது பழச்சாறு ஒருகிளாஸ் இவற்றில் ஏதாவது ஒன்றை காலை 11 மணி முதல் 12 மணிக்குள் எடுத்துக்கொள்ளலாம்.
மதிய உணவு (மதியம் 1:00 – 2:00 மணி):
2 சப்பாத்தி + 1 கப் பருப்பு + சென்னா + தயிர் ஆகியவற்றை மதியம் உணவாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது 1 கப் அரிசி + 1 கிண்ணம் பருப்பு + 1 கிண்ணம் உலர் காய்கறி + அரை தட்டு பச்சை காய்கறி சாலட் இவற்றை எடுத்துக்கொள்ளவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உடல் எடை 10 நாளில் கிடுகிடுவென குறைய புரதம் நிறைந்த உணவுகள்..!
மதிய உணவுக்குப் பிறகு (பிற்பகல் 3:00 – மாலை 4:00):
பழச்சாறு – ஒரு கிளாஸ், எதாவது ஒரு பழத்தை மதியம் உணவருந்திய பிறகு ஒரு 3 மணி முதல் 4 மணிக்குள் சாப்பிடலாம்.
மாலை சிற்றுண்டி (மாலை 5:00 – மாலை 6:00):
ஒரு கப் கிரீன் டீ அதனுடன் சர்க்கரை இல்லாத 2 பிஸ்கெட் எடுத்துக்கொள்ளலாம்.
இரவு உணவு (இரவு 8:00 – இரவு 9:00):
காய்கறி சூப் ஒரு கிளாஸ்.
2 சப்பாத்தி + 1 சிறிய கிண்ணம் பருப்பு + 1 சிறிய கிண்ணம் உலர் காய்கறி.
சாலட் ஒரு கிண்ணம்.
உறக்க நேர சிற்றுண்டி (இரவு 10:00 – இரவு 11:00 வரை):
உறங்க செல்வதற்கு முன் 10 முதல் 11 மணிக்குள் ஒரு கையளவு வேகவைத்த கொண்டைக்கடலை அல்லது ஏதாவது நட்ஸ் வகைகளை சாப்பிடலாம்.
மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Life style |