Why Not To Pick Pimples in Tamil
நமக்கு வரக்கூடிய சரும பிரச்சனைகளில் அதிகமாகவும் அடிக்கடியும் வரக்கூடியதும் முக பருக்கள் தான். முக பருக்கள் வந்தால் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. பொதுவாக முகப்பரு வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது, முகத்தில் அழுக்கு சேர்த்தால், அதிகப்படியான எண்ணெய் சுரப்பு, முறையற்ற உணவு பழக்கங்கள், தண்ணீர் குறைவாக குடிப்பது, தலையில் பொடுகு இருப்பது, ஹார்மோன் மாற்றம் இதுபோன்ற பல காரணங்கள் உள்ளது. ஆகையால் முகப்பரு வருவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், அதனை சரிசெய்வதர்க்கான வேலையை பார்க்காமல், பெரும்பாலானவர்கள் முகப்பருவை கிள்ளி விடுவார்கள். கிள்ளி விட்டால் முகப்பரு போய்விடும் என்று கிள்ளி விடுவார்கள்.
ஆனால், இது மிகவும் தவறான செயல். பருவை கிள்ளிவிடுவதால் முகத்தில் பல விளைவுகள் உண்டாகும். ஆகவே, முகப்பருவை கிள்ளி விடுவதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
What Happens When You Pinch Your Pimples in Tamil:
வீக்கம் ஏற்படுகிறது:
பருக்கள் சருமத்தில் ஆழமான இடத்தில் இருந்து தோன்றி இருக்கும். அவ்வாறு இருக்கும்போது அதனை நாம் கிள்ளி விடுவதன் மூலம், அந்த இடம் முழுவது வீக்கம் அடைந்து சிவப்பு நிறமாக மாறும். அதுமட்டுமில்லாமல், அதன் அருகிலேயே புதிதாக மீண்டும் ஒரு பரு உண்டாகக்கூடும்.
மற்ற இடத்திலும் பரவுகிறது:
முகத்தில் உள்ள பருக்களை அழுத்துவதாலோ, கிள்ளுவதாலோ அல்லது பிய்த்து எடுப்பதாலோ அதில் உள்ள சீழ் ஆனது மற்ற இடங்களில் படிந்து மீண்டும் ஒரு பருவாக தோன்றும். இதேபோன்று அடுத்த அடுத்த இடங்களில் தோன்றும்.
உங்களின் அழகை கெடுக்கும் முகப்பருக்கள் நீங்கி சருமம் பொழிவு பெற
தழும்பு தோன்றுகிறது:
பருக்களை கிள்ளுவதால் சருமம் காயப்படுவதோடு அந்த இடத்தில குழி போன்ற தழும்புகளை ஏற்படுத்தும். மேலும், அந்த இடத்தில உள்ள சில திசுக்களை இழக்கவும் செய்கிறது.
பெரிய கட்டிகளாக மாறுகிறது:
பருக்களை அடிக்கடி கை வைத்து அழுத்திக்கொண்டே இருப்பதால், சிறிய பரு ஆனது, ஆழமாக படிந்து பெரிய கட்டியாக மாற தொடங்கும்.
எனவே, முகத்தில் பருக்கள் தோன்றினால், அதனை கை வைத்து கிள்ளி விடாமல் அதற்கான மருந்துகளை போடுவது நல்லது.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |