100% நரைமுடி கருமையாக இயற்கை ஹேர் டை செய்முறை..!

Advertisement

ஒரே நாளில் நரைமுடியை கருமையாக்கும் இயற்கை ஹேர் டை – White Hair to Black Hair in 1 Day 

White Hair to Black Hair in 1 Day  – சின்ன வயசுல இருக்குறவுங்களுக்கே இப்போல்லாம் நரைமுடி என்பது மிக சுலபமாகவே வந்துவிடுகிறது. இந்த நரைமுடி வருவதற்கு நிறைய வகையான காரணங்கள் இருக்கிறது என்றும் சொல்லாம். குறிப்பாக நிறைய கெமிக்கல் நிறைந்த ஷாம்பு மற்றும் ஹேர் ஆயிலை பயன்படுத்துவதினால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்று சொல்லலாம்.  அதேபோல் இளநரையை மறைப்பதற்காக அதிகளவு கெமிக்கல் நிறைந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்தும் போது அது பலவகையான பக்கவிளைவுகளை தருவது மட்டுமல்லாமல், நரைமுடியை அதிகப்படுத்திவிடுகிறது. ஆக இயற்கையான முறையில் நரைமுடியை கருமையாக ஹேர் டை தயார் செய்யும் முறையை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

கீழ் கூறப்பட்டுள்ள இரண்டு செய்முறையையும் கண்டிப்பாக செய்ய வேண்டும் அப்பொழுது தான் நரைமுடி முழுமையாக கருமையாகும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. மருதாணி பவுடர் – 1/2 கப்
  2. இரும்பு பவுல் – ஒன்று
  3. சுடுதண்ணி – ஒரு கப்
  4. காபி பவுடர் – 2 ஸ்பூன்
  5. கருவேப்பிலை பவுடர் -1 டேபிள் ஸ்பூன்
  6. பீட்ரூட் பவுடர் – 1 டீஸ்பூன்
  7. 1/2 எலுமிச்சை பழம் ஜூஸ்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டிலேயே இயற்கை ஹேர் டை தயாரிப்பு முறை.. மாதம் 2 முறை போதும் முடி கருப்பாகவே இருக்கும்

செய்முறை 1:

ஒரு இரும்பு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு கப் நன்கு சூடான நீரை ஊற்றவும்.

பின் அதில் 1/2 மருதாணி பவுடர், 1 டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை பவுடர், ஒரு டீஸ்பூன் பீட்ருட் பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.

பின் கலந்து வைத்த மருதாணி கலவையை ஒரு பாலிதீன் கவரால் மூடி இரவு முழுவதும் நமக்கு ஊறவைக்கவும்.

பிறகு மறுநாள் காலை இந்த மருதாணி கலவையுடன் 1/2 எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்யவும் அவ்வளவு தான் ஹேர் டை தயார்.

பயன்படுத்தும் முறை:

இந்த ஹேர் டையை எண்ணெய் தடவைத்த சுத்தமான தலையில் தான் அப்ளை செய்ய வேண்டும். ஆக முதல் நாளே தலை அலசிவிடவும். பின் தயார் செய்த ஹேர் டையை தலையில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் காத்திருக்கவும்.

பின்பு தலைக்கு ஷாம்பு பயன்படுத்தாமல் தலை அலசவும்.

தேவையான பொருட்கள்:

  1. இண்டிகோ பவுடர் – 1/2 கப்
  2. வெந்நீர் – தேவையான அளவு
  3. உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை 2:

ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் இண்டிகோ பவுடர் 1/2 கப் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக கலந்து மூடிவைக்கவும்.

பத்து நிமிடம் வரை காத்திருக்கவும், பின்பு தலையில் அப்ளை செய்து 2 மணி நேரம் வரை காத்திருக்கவும்.

பின் தலை அலசவும், இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வந்தாலே போதும் நரைமுடி கருமையாக மாறிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு காசு கொடுத்து ஹேர் டை வாங்காதீங்க.! இந்த மாதிரி ஹேர் டை பயன்படுத்துங்க..!

குறிப்பு:

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டாம்.

டையை தலைக்கு அப்ளை செய்யும் போது கைகளில் கிளவுஸ் அணிந்துகொள்வது மிகவும் சிறந்தது.

பீட்ருட் பவுடரை பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை, உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் பயன்படுத்தினால் போதும். பீட்ருட் பவுடர் தலைமுடிக்கு ஒரு சைனிங்கை கொடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

தலையில் டை அப்ளை செய்த பிறகு தலையை பாலிதீன் கவரால் மூடி வைப்பது மிகவும் சிறந்து.

இந்த இரண்டு முறையை ஒரே நாளிலும் செய்யலாம் அல்லது ஒருநாள் மருதாணி டை அப்ளை செய்து குளித்துவிட்டு, மறுத்தால் இண்டிகா பவுடரை பயன்படுத்தலாம் உங்களுடைய விருப்பம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement