நரைமுடியை கருமையாக்கும் டைக்கு குட் பாய் சொல்லுங்க..

Advertisement

White Hair to Black Hair Naturally at Home

முன்னோர்களின் காலத்தில் வயதானால் கூட நரைமுடி பிரச்சனை இல்லாமல் இருந்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் இளம் வயதினருக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மன அழுத்தம், தூக்கமின்மை, உணவு முறை போன்றவற்றால் நரை முடி பிரச்சனை ஏற்படுகின்றது. இதனை சரி செய்வதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த டையை வாங்கி பயப்படுத்துகின்றனர். இதனால் அவ்வப்போது வேண்டுமானால் முடி கருமையாக காட்சியளிக்கும். ஆனால் நாளடைவில் நரை முடி மீண்டும் ஏற்படும். அதனால் தான் இந்த பதிவில் நரை முடியை கருமையாக மாற்றுவதற்கு இயற்கையான பேக்குகளை பற்றி பார்ப்போம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நரை முடியை கருப்பாக மாற்ற:

நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்:

நரை முடியை கருப்பாக மாற்ற

இரும்பு கடாய் எடுத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளவும். அதில் 6 நெல்லிக்காய்களை நறுக்கி விட்டு அத்தனையும் சேர்த்து கொள்ளவும். அதனுடன் 1 தேக்கரண்டி வெந்தய பொடி சேர்த்து மிக்ஸ் செய்து நன்றாக கொதிக்க விடவும். இந்த பேக் ஆறியதும் தலையில் அப்ளை செய்து இரவு முழுவதும் அப்படியே இருக்க வேண்டும். காலையில் எழுத்து நீங்கள் எப்பொழுதும் ஷாம்பை கொண்டு அலச வேண்டும்.

தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை கலந்து தலையில் தடவி பாருங்க..

நெல்லிக்காய் மற்றும் வெந்தயம் நரை முடிக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் நரைமுடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.

மருதாணி: 

நரை முடியை கருப்பாக மாற்ற

2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அவை கொதிக்கும் போது காபி தூளை சேர்த்து கொதிக்க விடவும். காபி தூளின் சாயம் இறங்கியதும் மருதாணி தூள் 3 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விடவும். இதனை இரவு முழுவதும் அப்படியே விடவும். மறுநாள் காலையில் எழுந்து தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தலையை அலச வேண்டும்.

இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து செய்து வந்தால் நரை முடியை கருப்பாக மாற்றலாம்.

ஒரே வாரத்தில் கொட்டிய இடத்தில் எல்லாம் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement