White Hair to Black Hair Naturally Tamil
பொதுவாக நரைமுடி என்பது வயது மூப்பு காரணமாக ஏற்படுவது என்பது இயல்பான ஒரு விஷயம் ஆகும். இருப்பினும் பெரும்பாலானவர்கள் தங்களுடைய இளம் வயதிலும் இந்த நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுகின்றன. இளம் வயதில் நரைமுடி பிரச்சனை ஏற்படுவது என்பது அவர்களுடைய இளமை மற்றும் அழகை பாதிக்கிறது என்பதை விட அவர்களுக்கு மனம் ரீதியாகவும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நரைமுடி பிரச்சனையானது உடல் உஷ்ணம், பித்தம், உடலில் ஹார்மோன்ஸ் மாறுவது போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால் தலைமுடிக்கு கருமை நிறத்தை வழங்கக்கூடிய Melanin என்று சொல்லக்கூடிய நிறமி சத்து மிகக்குறைவாக சுரப்பது தான் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
சரி இந்த நரைமுடி கருமையாக மாற்ற உதவும் ஐந்து டிப்ஸை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
பீர்க்கங்காய் எண்ணெய்:
நரைமுடி கருமையாக மாற வேண்டும் என்றால் பீர்க்கங்காயை எண்ணெய் தயார் செய்து தலைக்கு பயன்படுத்தலாம். அதாவது ஒரு பீர்க்கங்காயை எடுத்துக்கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நிழலில் ஒரு வாரம் நன்கு காயவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் 250 மில்லி தேங்காய் எண்ணெயில் காயவைத்த பீர்க்கங்காயை சேர்த்து 5 நாட்கள் ஊறவைக்கவும்.
5 நாட்கள் கழித்து ஒரு இரும்பு கடாயில் அந்த எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் 15 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். பீர்க்கங்காய் நன்கு கருமையாக மாறும் வரை காய்ச்சவும்.
இவ்வாறு காய்ச்சிய பிறகு எண்ணெயை வடிகட்டி தலைக்கு பயன்படுத்தி வர நரை முடி கருமையாக மாறிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1 மணி நேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!
Black Tea Hair Dye:
பொதுவாக பிளாக் டீ தலைமுடிக்கு ஒரு நல்ல கருமையை வழங்க உதவுகிறது பிளாக் டீயில் இருக்கக்கூடிய பாலிபினால் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தலைமுடி கருமையாக மாற்றுவதற்கு மிகவும் உதவி செய்கிறது.
தேவையான பொருட்கள்:
- Black Tea Powder – இரண்டு ஸ்பூன்
- உப்பு – ஒரு ஸ்பூன்
- தண்ணீர் – 1/2 லிட்டர்
செய்முறை:
மேல் கூறப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, நன்றாக கொதிக்கவைத்து நன்கு சுண்ட காய்ச்சி, நன்றாக ஆறியதும் அதனை வடிகட்டி அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக்கொள்ளவும்.
இந்த Black Tea Hair Dye-ஐ நீங்கள் குளிப்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பு தலையில் நன்கு ஸ்ப்ரே செய்து மசாஜ் செய்து 1/2 மணி நேரம் கழித்து நீங்கள் தலை அலசவும்.
இந்த முறையை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால் போதும் உங்கள் நரை முடி கருமையாக மாறிவிடும்.
மருதாணி மற்றும் அவுரி இலை பொடி ஹேர் பேக்:
இந்த மருதாணி மற்றும் அவுரி இலை பொடி தலைமுடிக்கு ஒரு நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். இந்த இரண்டு பொடிகளுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
பயன்படுத்தும் முறை:
இந்த ஹேர் பேக்கை தலையில் பயன்படுத்தும் முறையை பொறுத்தவரை இரண்டு வகைகள் உள்ளது.
அதாவது முதல் நாள் இரவே உங்கள் தலை முடிக்கு தேவையான அளவு மருதாணி பவுடரை ஒரு பவுலில் எடுத்து அதனுடன் தேவையான அளவு வெதுவெதுப்பான நீரை கலந்து ஒரு பேஸ்ட் போல் கலந்துகொள்ளுங்கள்.
12 மணி நேரம் கழித்து அதனுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து தலையில் அப்ளை செய்ய வேண்டும். 1/2 மணி நேரம் கழித்து தலை அலசவும்.
இவ்வாறு செய்வதன் மூலம் 50 சதவீதம் உங்களுக்கு ரிசல்ட் கிடைக்கும்.
அதன் பிறகு அவுரி பவுடர் பயன்படுத்த வேண்டும். ஒரு பவுலில் உங்கள் தேவையான அளவு அவுரி பவுடரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவரை எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதில் வெது வெதுப்பான நீர் சேர்த்து கலந்து 10 நிமிடம் காத்திருக்கவும் பின் இந்த பேக்கை தலையில் நன்றாக அப்ளை செய்து 1 மணி நேரம் காத்திருக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு ஷாம்புபயன்படுத்தாமல் தலை அலசவும்.
இவ்வாறு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் நரை முடி நிரந்தரமாக கருமையாக மாறிவிடும்.
நெல்லிக்காய் எண்ணெய்:
பொதுவாக நெல்லிக்காய் தலை முடி கருமையாக பெரிதும் உதவி செய்கிறது. ஆக 100 மில்லி தேங்காய் எண்ணெயுடன், இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை சேர்த்து நன்றாக காய்ச்சிக்கொள்ளவும்.
பின் எண்ணெய் நன்கு ஆறியது அதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொள்ளவும்.
இவ்வாறு தயார் செய்த எண்ணெயை காலை மற்றும் மாலை என்று இரு வேளையும் தலையில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்து வந்தால் போதும் நரைமுடி அனைத்தும் கருமையாக மாறுவதை நீங்களே உணருவீர்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நரைமுடி கருமையாக மற்றும் தலை முடி அடர்த்தியாக வளர ஹேர் ஆயில் தயாரிப்பு
வெங்காயம்:
வெங்காயம் தலைமுடி சார்ந்த பலவகையான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வினை அளிக்கிறது. ஆக உங்கள் நரைமுடி கருமையாக வேண்டும் என்றால் ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதனை பேஸ்ட் போல் அரைத்து அவற்றில் இருக்கும் ஜூஸை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் இந்த ஜூஸை தலைமுடியின் வேர்க்கால்களில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்யவும்.
இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் போதும் நரை முடி பிரச்சனை கருமையாக மாறிவிடும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |