வெள்ளை முடியை கருப்பாக மாற்ற பாட்டி வைத்தியம்
இன்றைய காலத்தில் இளம் வயதினருக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம், உணவு முறை, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் வெள்ளை முடி ஏற்படுகிறது. இதனை மறைப்பதற்காக கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் அவ்வப்போது வேண்டுமானால் வெள்ளை முடி கருப்பாக மாறும். ஆனால் நாளடைவில் வெள்ளை முடி வந்துவிடும். அதனால் இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பபாக மாற்ற பாட்டி சொன்ன வைத்தியத்தை இன்றைய பதிவில் பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நரை முடியை கருப்பாக மாற்ற பாட்டி வைத்தியம்:

தேவையான பொருட்கள்:
- தேங்காய் எண்ணெய்-100
- செம்பருத்தி பூ- ஒரு கப்
- கருவேப்பிலை-ஒரு கப்
- கருஞ்சீரகம்- 3 தேக்கரண்டி
எண்ணெய் செய்முறை:
செம்பருத்தி பூவை நிழலில் காய வைத்து எடுத்து கொள்ளவும். கருவேப்பிலையை கழுவி விட்டு அதனையும் நிழலில் காய வைத்து எடுத்து கொள்ளவும்.
முதலில் அடுப்பில் இரும்பு கடாய் வைத்து அதில் தேங்காய் ஊற்றி எண்ணெய் சூடானதும், அதில் கருவேப்பிலை, செம்பருத்தி பூ, கருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க விடவும்.
சேர்த்த பொருட்கள் எல்லாம் எண்ணெயில் கலந்து நிறம் மாறும், அப்போது அடுப்பை அணைத்து விடவும். முக்கியமாக அடுப்பை குறைவான தீயிலே வைத்து கொதிக்க விடவும். எண்ணெயானது ஆறியதும், வடிக்கட்டியை பயன்படுத்தி சக்கை இல்லாமல் எண்ணெயை மட்டும் வடிக்கட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து எடுத்து கொள்ளவும்.
இந்த எண்ணெயை நீங்கள் தேங்காய் எண்ணெய் தடவுவது போல் தினமும் தடவி வர வேண்டும். இதன் மூலம் நரை முடி கருப்பாக மாறும், நரை முடி வராமல் தடுக்கும், முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும். பொடுகு பிரச்சனை இருந்தால் அவற்றையும் சரி செய்யும்.
நரைமுடி கருப்பாக மாற எண்ணெய்: 2
- கருவேப்பிலை- ஒரு கைப்பிடி அளவு
- மருதாணி இலை – ஒரு கைப்பிடி அளவு
- அவுரி இலை- ஒரு கைப்பிடி அளவு
- செம்பருத்தி இலை- ஒரு கைப்பிடி அளவு
- கரிசலாங்கண்ணி இலை- ஒரு கைப்பிடி அளவு
- வெந்தயம் – 3 தேக்கரண்டி
மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இதனை சிறிய சிறியதாக உருட்டி வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ளவும். இதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து 2 நாட்களுக்கு ஊற விடவும். அதன் பிறகு இந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும்.
கரும்புள்ளி மறைய பாட்டி சொன்னது இது தான் ட்ரை பண்ணி பாருங்க..
| இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |














