வெள்ளை முடியை மறைக்க இந்த ஒரு எண்ணெய் மட்டும் போதும்..

Advertisement

வெள்ளை முடியை மறைக்க எண்ணெய்

நம் முன்னோர்களின் காலத்தில் வயதானால் கூட நரைமுடி ஏற்படாமல் இருந்தது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் இளைஞர்களுக்கே வெள்ளை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதனை அவ்வபோது சரியாக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. நிரந்தரமாக சரி செய்ய வேண்டுமென்றால் இயற்கையான முறை தான் சிறந்தது. அதனால் கெமிக்கல் நிறைந்த ஆயில் மற்றும் ஹேர் டையை பயன்படுத்தாதீர்கள். இன்றைய பதிவில் இயற்கையான முறையில் எண்ணெய் தயாரித்து எப்படி பயன்படுத்துவது என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்: 

தேங்காய் எண்ணெய் – `1/4 கப்

கருவேப்பிலை – சிறிதளவு

மருதாணி இலை – ஒரு கைப்பிடி

கரிசலாங்கண்ணி இலை- ஒரு கைப்பிடி

நல்லெண்ணெய் -250 மில்லி லிட்டர்

எள் எண்ணெய்- 250 மில்லி லிட்டர்

வெந்தயம்- 1/4 கப்

மிளகு- 3 தேக்கரண்டி

எண்ணெய் செய்முறை:

வெள்ளை முடியை மறைக்க எண்ணெய்

முதலில் அடுப்பில் கடாய் வைத்து அதில் எள் எண்ணெய் 250 மில்லி லிட்டர் ஊற்ற வேண்டும். பின் அதில் நல்லெண்ணெய் 1/4 கப், தேங்காய் எண்ணெய் 1/4 கப், வெந்தயம் 1/4 கப் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

அடுப்பை குறைவான தீயிலே வைத்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்த பிறகு நுரை பொங்கும் நிலை ஏற்படும். அப்போது கருவேப்பிலை, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி இலை, காய்ந்த நெல்லிக்காய் சேர்த்து கொடுக்க விடவும்.

முக்கியமாக அடுப்பை குறைவான தீயிலே வைத்து கொதிக்க விட வேண்டும். எண்ணெயில் சேர்த்த பொருட்கள் அனைத்தும் சேர்ந்து எண்ணெயின் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும்.

எண்ணெயின் சூடு ஆறிய பிறகு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி சக்கை இல்லாமல் எண்ணெயை மட்டும் எடுத்து கொள்ளவும். இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை தலை முடி முழுவதும் தடவி 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும். இந்த எண்ணெயை நீங்கள் வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து மூன்று மாதத்திற்கு பயன்படுத்தி வந்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement