நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு ஹேர் டை
நம் முன்னோர்களின் காலத்தில் வயதானால் கூட நரை முடி இல்லாமல் இருந்தனர். ஆனால் இன்றைய கால கட்டத்தில் இளம் வயதினருக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதனை மறைப்பதற்கா கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த ஹேர் டையை பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்தும் போது சில நாட்களுக்கு மட்டும் தான் கருமையாக இருக்கும். நாளடைவில் முடி வெள்ளையாக தோன்றும். அதனால் இந்த பதிவில் நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு ஹைர் டை தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஹேர் டை தயாரிப்பது எப்படி.?
உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு மருதாணி பவுடரை முதல் நாளே ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும். அதில் தேவையான அளவு டீ டிக்காஷனை ஊற்றி நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ளுங்கள்.
மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!
பின் மறுநாள் இந்த கலவையை தலையில் அப்ளை செய்து 1 மணி நேரம் வரை காத்திருக்கவும் பின் தலையை அலசி முடியை நன்றாக காயவைக்கவும். தலையை அலசுவதற்கு எந்த வித ஷாம்பும் அப்பளை செய்ய கூடாது.
பிறகு ஒரு பவுலை எடுத்து கொள்ளுங்கள் அதில் அவுரி பவுடரை உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு மட்டும் எடுத்து கொள்ளுங்கள். இதனை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். இதனை தலையில் நன்றாக அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவும்.
பின் தலைக்கு எந்த வித ஷாம்பூம் பயன்படுத்தாமல் தலையை அலசவும். இந்த பேக்கை வாரத்தில் இரண்டு முறை மட்டும் செய்து வந்தால் தலைமுடியில் உள்ள அனைத்து நரை முடியும் கருமையாக மாறிவிடும்.
ஹேர் ஸ்ட்ரைட்னிங் பண்ணுவதற்கு இனி கடைக்கு செல்ல தேவையில்லை..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |