White Hair to Black Naturally Permanent Oil in Tamil
இன்றைய காலத்தில் சிறிய வயதிலேயே நரை முடி பிரச்சனை மிக எளிதாக வந்துவிடுகிறது. இதற்கு பலவகையான காரணங்கள் இருக்கின்றது என்றாலும். பொதுவான காரணம் என்னவென்றால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது தான். அல்லது வயதாக வயதாக நமது உடலில் சுரக்கும் ஒருவகையான ஹார்மோன் குறைவது என்று சொல்லலாம். சரி வாங்க இந்த நரை முடி பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வளிக்க கூடிய குறிப்பை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது மூலிகை செடிகளில் ஒன்றான துளசியுடன் சில வகையான பொருட்களை செய்து ஹேர் ஆயில் & ஹேர் சிரப் தயார் செய்வதை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். சரி வாங்க இதனை எப்படி தயார் செய்ய வேண்டும். எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேவையான பொருட்கள்:
- துளசி இலை – ஒரு கைப்பிடியளவு
- கிராம்பு தூள் – ஒருஸ்பூன்
- பிரியாணி இலை – 7
- ஆலிவ் ஆயில் – 80ml
வெள்ளை முடி கருமையாக ஆயில் செய்முறை – White Hair to Black Naturally Permanent Oil in Tamil:
ஒரு கைப்பிடியளவு துளசியை பறித்து அதனை சுத்தமாக கழுவி ஈரம் இல்லாமல் நன்கு உலர்த்தி எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அதனை பொடிதாக நறுக்கவும். நறுக்கிய துளசியை ஒரு கண்ணாடி பாட்டிலில் போடவும்.
பின் அதனுடன் ஒரு ஸ்பூன் கிராம்பு தூள் சேர்க்கவும். பிறகு அதனுடன் ஏழு பிரியாணி இலையை சிறிது சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.
இறுதியாக அதனுடன் 80ml ஆலிவ் ஆயில் ஊற்ற வேண்டும்.
இப்பொழுது Double Boil முறையில் எண்ணெயை 30 நிமிடம் சூடுபடுத்த வேண்டும். அதாவது ஒரு பாத்திரத்தில் காட்டன் துணியை விரித்து கொள்ளுங்கள், பின் அவற்றில் தண்ணீர் ஊற்ற வேண்டும் அதில் நாம் ஊற்றி பாட்டிலில் வைத்திருக்கும் ஆயிலை வைக்கவும் அவ்வளவு தான் இப்பொழுது எண்ணெயை 30 நிமிடம் காய்ச்சவும். உங்களுக்கு புரியவில்லை என்றால் மேல் காட்டப்பட்டுள்ள படத்தை பார்க்கவும்.
30 நிமிடம் கழித்த பிறகு அடுப்பை அணைத்து அவற்றில் இருக்கும் பாட்டிலை எடுத்து சூடுபடுத்திய எண்ணெயை நன்கு ஆறவைக்கவும். ஆறியதும் அதனை வடிகட்டி வேறொரு பாட்டிலில் மாற்றிக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஹேர் சிரப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
என்றும் பள பளப்பான சருமத்திற்கு சந்தனத்தை இப்படி பயன்படுத்துங்கள் போதும்.
தேவையான பொருட்கள்:
- துளசி – ஒரு கைப்பிடியளவு
- ரோஸ்மேரி – ஒரு ஸ்பூன்
- பிர்ச் காளான் (Birch mushroom) – ஒரு டேபிள் ஸ்பூன்
- சூடான நீர் – 300 ml
வெள்ளை முடி கருமையாக சிரப் செய்முறை:
ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மூடி போட்டு அந்த பாட்டிலை ஒரு டவலை கொண்டு மூடி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து அதனை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பற்றிலில் ஊற்றிக்கொள்ளவும்.
ஹேர் ஆயில் மற்றும் ஹேர் சிரப் இரண்டையும் பயன்படுத்தும் முறை:
முதலில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் ஆயிலை தலை முடி முழுவதும் நன்றாக அப்ளை செய்யுங்கள். பிறகு 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.
30 நிமிடம் கழித்து தயார் செய்து வைத்திருக்கும் ஹேர் சிறப்பை தலை முடி முழுவது ஸ்ப்ரே செய்ய வேண்டும். ஸ்ப்ரே சிகேத பிறகு 10 நிமிடம் காத்திருங்கள். 10 நிமிடம் கழித்து தலை முடியை எப்பொழுது போல தலை அலசலாம். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வந்தாலே போதும்.
இந்த முறையில் பயன்படுத்தியுள்ள பொருட்கள் அனைத்துமே தலை முடிக்கு நன்மை அளிக்கக்கூடியது. நரை முடியை மிக சீக்கிரமாகவே கருமையாக மாற்றிவிடும்.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
நீங்களே போதும்டா முடி வளர்ந்தது அப்படின்னு சொல்லனுமா அப்போ இந்த வெந்தயம் மட்டும் போதும்..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |