நரை முடி கருப்பாக மாற இந்த எண்ணெய் மட்டும் போதும்..!

Advertisement

White Hair Treatment at Home Naturally 

பொதுவாக மனிதர்கள் மழலை, இளமை மற்றும் முதுமை என மூன்று வகையான பருவங்களை கடந்து வாழ்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் ஒருவரின் திறமை மற்றும் இன்பம் என இவற்றை எல்லாம் அளிப்பது ஒரு மனிதனின் இளமை பருவம் தான். இத்தகைய பருவங்களை எல்லாம் அனுபவித்த பிறகு தான் முதுமை என்னும் நிலை ஏற்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் முதுமை ஆனவுடன் தோல் சுருங்கி முடி நரைத்து காணப்படும். ஆனால் இப்போது எல்லாம் இளம் வயதினருக்கு கூட முடி நரைக்கும் நிலைமை ஏற்படுகிறது. இவ்வாறு முடி ஆனது சிறு வயதிலேயே நரைத்து காணப்பட்டால் அதனை எப்படி சரி செய்வது என்பது தான் அவர் அவரின் யோசனையாக இருக்கும். அதனால் இன்றைய பதிவில் தலையில் இருக்கும் நரை முடியினை எவ்வாறு சரி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நரைமுடி கருமையாக எண்ணெய்:

  • கரிசலாங்கண்ணி இலை- 1 கைப்பிடி அளவு 
  • தேங்காய் எண்ணெய்- 50 மில்லி 

நரைமுடி கருமையாக எண்ணெய்

முதலில் அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் தேங்காய் எண்ணெயினை ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் 1 கைப்பிடி அளவு சுத்தமான கரிசலாங்கண்ணி இலையினை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இப்போது எண்ணெய் தயார்.

பயன்படுத்தும் முறை:

தயார் செய்து வைத்துள்ள எண்ணெயினை தினமும் முடிக்கு பயன்படுத்தி வாருங்கள். மேலும் இதனை வாரம் 1 முறை தலையில் மசாஜ் செய்து தலை குளிப்பதன் மூலம் நரை முடி விரைவில் கருப்பாக மாறிவிடும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளியை இப்படி கூட குணப்படுத்த முடியுமா 

Thalai Mudi Narai Poga:

  1. வெந்தயம்- 2 ஸ்பூன் 

வெந்தயம்

வெந்தயத்தில் நமது முடியினை கருமையாக மாற்றக்கூடிய எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அதனால் இதனை நமது முடிக்கு பயன்படுத்தி வருவதனால் நரை முடி கருப்பாக மாறிவிடும்.

ஆகவே 2 அல்லது 3 ஸ்பூன் வெந்தயத்தை 3 முதல் 5 மணி நேரம் வரை ஊறவைத்து பின்பு இதை பேஸ்ட் போல அரைக்கவும். அவ்வளவு தான் வெந்தய பேஸ்ட் தயார்.

பயன்படுத்தும் முறை:

அரைத்துவைத்துள்ள வெந்தய பேஸ்ட்டினை முடியின் அனைத்து பகுதிகளிலும் தடவி வைத்து விட்டு 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு மாதம் 2 முறை செய்வதன் மூலம் நரை முடி கருப்பாக மாறுவதோடு மட்டும் இல்லாமல் நரை முடி வருவதையும் தடுக்கிறது.

உங்களின் முகம் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு அழகாக இளமையா இருக்கனுமா 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement