Winter Face Care Tips At Home in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! மார்கழி மாதம் ஆரம்பமாகிவிட்டது. அப்போ பனிக்காலம் தொடங்கிவிட்டது என்று அர்த்தம். இந்த நேரத்தில் காலையில் தூங்கி எழுந்து வெளியில் வருவதற்கே அவ்வளவு பயமாக இருக்கும். அவ்வளவு ஏன் காலை தரையில் வைப்பதற்கே அவ்வளவு பயமாக இருக்கும். காரணம் குளிர் தான். ஆனால் இதில் பெண்களுக்கு வேறு கவலை தான் அதிகாமாக இருக்கும். என்னவென்றால், பொதுவாக பெண்களுக்கு முகம் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதிலும் இந்த பனிக்காலத்தில் சருமத்தில் வறட்சி அதிகமாக காணப்படும். இதனை சரி செய்வதற்கு கடைகளில் கிடைக்கும் கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துவோம். இதனால் சருமத்திற்கு மேலும் பல பாதிப்புகள் தான். அதனால் தான் நம் பதிவில் இன்று பனிக்காலத்தில் சரும வறட்சியை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பனிக்காலத்தில் சருமத்தை பராமரிக்க டிப்ஸ்:
பொதுவாக இந்த பனிக்காலத்தில் பலருக்கும் முகத்தில் வறட்சி அதிகமாக காணப்படும். சிலருக்கு முகத்தில் வெள்ளை வெள்ளையாக இருக்கும். இதுபோன்ற பிரச்சனையை சரி செய்வதற்கு வாழைப்பழம் ஓன்று போதும்.
வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக காணப்படுகிறது. அது நம் சருமத்தில் உள்ள Free Radicals -யை எதிர்த்து போராடுகிறது. மேலும் இது நம் சருமத்திற்கு ஈரப்பதம் கொடுத்து சரும வறட்சியில் இருந்து பாதுகாக்கிறது. அதேபோல இதனுடன் நாம் எடுத்து கொள்ளும் பொருள் தான் தேன். இதுவும் சரும வறட்சியை தடுத்து, சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்து கொள்கிறது.
பனிக்காலத்தில் முகத்தை பளபளப்பாக தேனுடன் இதையும் சேர்த்து அப்ளை செய்யவும்
பேஸ் பேக் செய்முறை:
- வாழைப்பழம் – 1
- தேன் – 1 ஸ்பூன்
முதலில் ஒரு கிண்ணத்தில் உங்கள் முகத்திற்கு தேவையான அளவு வாழைப்பழத்தை நறுக்கி எடுத்து கொள்ளுங்கள். பின் அதை நன்றாக பேஸ்ட் போல மசித்து எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல பிசைந்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் பேஸ் பேக் ரெடி..!
அப்ளை செய்யும் முறை:
இப்போது இந்த பேஸ் பேக்கை உங்கள் முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளுங்கள். பின் முகத்தை ஈரப்பதம் இல்லாமல் துடைத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து, 30 நிமிடம் வரை அப்படியே வைத்து கொள்ளுங்கள். 30 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளுங்கள். இதுபோல வாரத்திற்கு 3 முறை அல்லது தொடர்ந்து செய்து வந்தால், இந்த பனிக்காலத்திலும் உங்கள் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ளலாம்.
முடி வளர்ச்சிக்காக பாட்டி சொன்ன வைத்தியம் என்னான்னு தெரிஞ்சுக்கோங்க..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |