Young Face Tips in Tamil
ஆண்கள், பெண்கள் என அனைவருமே தன்னை அழகாக காட்டி கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக பலரும் கிரீம்களை அப்ளை செய்வார்கள். சில நபர்களுக்கு வயது குறைவாக தான் இருக்கும், ஆனால் வயதான தோற்றம் போல் காட்சியளிக்கும். இவர்கள் வயதை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அதனால் இந்த பதிவில் உங்களை இளமையாக காட்டுவதற்கான பேஸ் பேக்கை தான் பார்க்க போகிறோம். அவை என்னவென்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பாருங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
என்றும் இளமையாக இருக்க:
முட்டை பேக் செய்முறை:

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி தேன், 1 முட்டையை உடைத்து ஊற்றி கொள்ளவும். இதனை பேஸ்ட்டாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
அப்ளை செய்யும் முறை:
செய்து வைத்துளாள் பேக்கை அப்ளை செய்வதற்கு முன் முகத்தை நன்றாக கழுவ வேண்டும், முகத்தில் உள்ள ஈரத்தை துடைத்து விட்டு செய்து வைத்துள்ள பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருக்கவும். பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மஞ்சள் பேக் செய்முறை:

மஞ்சள் நம் முகத்தில் உள்ள பாக்ட்ரியாக்களை எதிர்த்து போராட உதவுகிறது. முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், அலர்ஜி போன்றவற்றை எதிர்த்து போராடுகிறது.
ஒரு கிண்ணத்தில் 1/2 கப் தயிர், 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட்டாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
| இப்படியும் கூட உதட்டை சிவப்பாகவும் மற்றும் அழகாகவும் வைக்கலாம் ட்ரை பண்ணி பாருங்கள் |
அப்ளை செய்யும் முறை:
இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகத்தை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.
கடலை மாவு பேக் செய்முறை:

ஒரு கிண்ணத்தில் 1/2 கப் கடலை மாவு பேக், 1/2 மைசூர் பருப்பு மாவு சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும்.
அப்ளை செய்யும் முறை:
இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருக்கவும். பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முகத்தை இளமையாக வைத்திருக்க முடியும்.
முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து முகம் என்றும் இளமையாக இருப்பதற்கான குறிப்புகள்..
| இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |














