அன்பின் ஐந்திணை யாவை | ஐந்திணை வகைகள்

Advertisement

அன்பின் ஐந்திணை Drawing Images

நம்முடைய பள்ளி பருவத்தில் தான் இலக்கியத்தை படித்திருப்போம், அதன் பிறகு கல்லூரி பருவத்தில் இலக்கியங்களை UG-யில் தான் படித்திருப்போம். அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். அரசு வேலைக்கு எழுத்து தேர்வு மூலம் தான் போக முடியும். அப்படி அரசு தேர்விற்கு தயாராகிறவர்களுக்கு தமிழ் ஒரு தனிப்பாடமாக வந்திருக்கும். நம் பதிவில் தமிழ் சார்ந்த அனைத்து வினாக்களும் பதிவிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய பதவிகள் அன்பின் ஐந்திணைகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

அன்பின் ஐந்திணைகள் என்னென்ன:

அன்பின் ஐந்திணைகள் என்னென்ன

  • குறிஞ்சி – புணர்தல்
  • முல்லை – இருத்தல்
  • மருதம் – ஊடல்
  • நெய்தல் – இரங்கல்
  • பாலை – பிரிதல்

குறிஞ்சி:

மலையும், மலை சார்ந்த இடத்தை தான் குறிஞ்சி என்பார்கள். இங்கு வாழ்ந்த மக்களை குறவர் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் வேட்டையாடுதல், தினை விதைத்தல் போன்ற தொழில்களை செய்தார்கள். இந்த நிலத்திற்கு உரிய அக ஒழுக்கமாக புணர்தல் காணப்படுகிறது.

முல்லை:

காடும் காடு சார்ந்த இடம் தான் முல்லை எனப்பட்டது. இங்கு வாழ்ந்த மக்களை ஆயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் மந்தை மேய்த்தல், நிலம் காத்தல் போன்ற தொழில்களை செய்து வந்தார்கள். இந்த தொழிலுக்காக தலைவன் எல்லை புறங்களில் வீடு அமைத்து அங்கிருந்து தொழிலை செய்வார்கள். அதுவரைக்கும் தலைவி வீட்டில் கற்ப்பை வழுவாது தலைவனுக்காக காத்துக் கொண்டு இருப்பதால் இந்த நிலத்திற்கு உரிய அக ஒழுக்கம் இருத்தல் எனப்பட்டது.

மருதம்:

வயலும், வயல் சார்ந்த இடம் மருதம் என்றழைக்கப்பட்டது. இந்த நிலத்தில் உள்ள மக்கள் உழவர்கள் என்று அழைத்தார்கள். இவர்கள் உழவு தொழில் தான் செய்தார்கள். இந்த தொழில் எப்போதுமே இருக்காது. சில காலம் வேலை இருக்காது. அப்போது ஆடவர்கள் பரத்தையர் வீடுகளுக்கு சென்று ஆடிப்பாடி மகிழ்வார்கள். இதனால் தலைவன் மீது தலைவி கோபம் அடைவாள். இந்த கோபத்தை பாணர்களாலும், புதல்வர்களாலும், செவிலித்தாய்போன்றவர்களால் தீர்க்கப்படும். அதனால் இந்த நிலத்திற்கு உரிய ஒழுக்கமாக ஊடல் காணப்படுகின்றது.

நெய்தல்:

கடலும் கடல் சார்ந்த இடம் தான் நெய்தல் எனப்பட்டது. இங்கு வாழ்ந்த மக்களை பரதவர் என்று அழைத்தார்கள். இங்குள்ள மக்கள் மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், முது எடுத்தல் போன்ற தொழில்களை செய்தார்கள். இந்த தொழில் செய்யும் தலைவன் வரும் வரை தலைவி வருத்தத்துடன் காத்திருப்பாள். தனால் இந்த நிலத்திற்கு உரிய அக ஒழுக்கமாக இரங்கல் காணப்படுகின்றது.

பாலை:

வறண்ட நிலத்தை பாலைவனம் என்று அழைத்தார்கள். இங்கு வாழும் மக்களை மறவர் என்று அழைத்தார்கள். இந்த நிலத்தில் வாழும் மக்கள் மறவர்கள் களவெடுத்தல், வழிப்பறி செய்தல்போன்ற தொழில்களை செய்தார்கள். இந்த தொழில் செய்யும் தலைவனை தலைவி பிரிந்து வாழும் நிலை காணப்படும். அதனால் இந்த நிலத்திற்கு உரிய ஒழுக்கமாக பிரிதல் இருக்கிறது.

அறிவியல் தமிழ் சொற்கள் 20 வார்த்தைகள்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement