ஒரே ஓசையில் முடியும் சொற்கள் | Ore Osai Udaiya Sorkal

Advertisement

ஒரே ஓசையில் முடியும் சொற்கள் | ஒரே ஓசை சொற்கள்

மாணவ, மாணவிகளுக்கு அன்பான வணக்கங்கள் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது ஒரே ஓசையில் முடியும் சொற்களை பற்றி தான். புதுவகை வகுப்பறையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வீட்டு பாடம் எழுதி வர சொல்வது வழக்கமான விஷயம் தான். அந்த வகையில் தமிழ் ஆசிரியர்கள் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்களை தெளிவாக புரியவிப்பதற்கு தினமும் ஒவ்வொரு விதமான வரிசை சொற்களை எழுதி வர சொல்வார்கள். எதற்க்காக இந்தனை எழுதி வர சொல்கிறார்கள் என்றால் அப்பொழுது தான் தமிழ் மொழியை எழுதும் போதும், படிக்கும் போதும் குழப்பம் இல்லாமல்.. தவறு இல்லாமல் படிக்கவும், எழுதவும் சொவர்களாம். அதற்காக தான் அவ்வாறு வரிசை சொற்களை தமிழ் ஆசிரியர்கள் எழுத சொல்வது வழக்கம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரே ஓசையில் முடியும் சொற்கள் பற்றி படித்தறியலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்யுங்கள் ந ன ண வேறுபாடு சொற்கள் 

ஒரே ஓசையில் முடியும் சொற்கள் | Ore Osai Udaiya Sorkal | ஒத்த ஓசையில் முடியும் சொற்கள்:

  • கட்டம், வட்டம், பட்டம், சட்டம், நட்டம்
  • படம், குடம், தடம்
  • அரம், கரம், மரம், தரம்
  • பால், கால், வால்
  • பல், கல், வில்
  • கயல், முயல், வயல்
  • குட்டை, முட்டை, சட்டை
  • வடை, குடை, சடை, விடை, நடை
  • இலை, வலை, சிலை, கலை
  • அரி, நரி, கரி
  • வண்டு, குண்டு, நண்டு, ஆண்டு, செண்டு, மண்டு
  • அல்லி, மல்லி, பல்லி
  • நாரை, கீரை, தேரை
  • பானை, பூனை, யானை
  • கட்டில், தொட்டில், காட்டில், வட்டில்
  • செடி, கொடி, முடி, தேடி
  • அம்பு, கம்பு, செம்பு, சொம்பு
  • நாய், சேய், காய்
  • ஆடு, மாடு, காடு, தோடு, தேடு, பாடு, வீடு, ஓடு
  • காகம், நாகம், தேகம், மேகம்
  • சட்டி, வட்டி, கட்டி, தொட்டி, பேட்டி, பெட்டி, ரொட்டி
  • அருவி, கருவி, குருவி
  • பந்து, சந்து, வந்து, சிந்து, பொந்து
  • பாடும், வாடும்

இதையும் கிளிக் செய்யுங்கள் மயங்கொலிச் சொற்கள்

மேலும் சொற்கள் வரிசை சொற்களை பார்க்க இந்த கிளிக் செய்யுங்கள்–> சொற்கள்
Advertisement