1100 சதுர அடியில் புது வீடு கட்ட எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா..?

Advertisement

Cost to Build 1100 sq ft House in Tamil

இக்காலத்தில் புதிதாக ஒரு மாடி வீடு கட்டி முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஏன் அப்படி சொல்கிறார்கள் என்றால் புதிதாக ஒரு மாடி வீடு கட்ட வேண்டுமானால் அதற்கு நிறைய செலவாகிறது. இதனை வைத்தே அப்படி சொல்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு நில அளவுகளில் வீடு கட்டும் போது அதற்கு ஆகும் செலவு மாறுபடுகிறது. இதனை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நம் பொதுநலம் பதிவில் தினமும் ஒவ்வொரு சதுர அடியிலும் வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நீங்கள் 1100 சதுர அடியில் வீடு கட்ட போகிறீர்கள் என்றால் அதற்கு எவ்வளவு செலவாகும்..? என்று எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் என்பதையும் இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1100 sq ft House Construction Cost in Tamil:

சிமெண்ட் எவ்வளவு தேவைப்படும்..?

சிமெண்ட்

சிமெண்ட் மொத்தமாக 600 மூட்டை தேவைப்படுகிறது. 1 சிமெண்ட் மூட்டையின் விலை 400 ரூபாய் என கணக்கில் கொண்டால் 600 சிமெண்ட் மூட்டை வாங்குவதற்கு  2,40,000 ரூபாய் செலவாகிறது.

900 சதுர அடியில் ஒரு அழகான புது வீடு கட்ட ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா..?

 

மணல் எவ்வளவு தேவைப்படும்..?

மணல்

ஆற்று மணல் 28 யூனிட் தேவைப்படுகிறது. 1 யூனிட் மணலின் விலை 6,000 ரூபாய் என கணக்கில் கொண்டால் 28 யூனிட் மணல் வாங்குவதற்கு 1,68,000 ரூபாய் செலவாகிறது.

அல்லது நீங்கள் M சாண்ட் மணல் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு 20 யூனிட் தேவைப்படுகிறது. இதற்கு 1 லட்சம் ரூபாய் செலவாகிறது. மேலும் P சாண்ட் 8 யூனிட் தேவைப்படுகிறது. எனவே 8 யூனிட் P சாண்ட் மணல் வாங்குவதற்கு 48 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

3/4 ஜல்லி மற்றும் 1 1/2 ஜல்லி வாங்குவதற்கு எவ்வளவு செலவாகும்..?

ஜல்லி

3/4 ஜல்லி 17 யூனிட் தேவைப்படுகிறது. எனவே 17 யூனிட் 3/4 ஜல்லி வாங்குவதற்கு 62 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

1 1/2 ஜல்லி 6 யூனிட் தேவைப்படுகிறது. எனவே 6 யூனிட் 1 1/2 ஜல்லி வாங்குவதற்கு 21 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

ஸ்டீல் கம்பிகள் வாங்குவதற்கு எவ்வளவு செலவாகும்..?

ஸ்டீல் கம்பிகள்

ஸ்டீல் கம்பிகளில் 8mm, 10mm,12mm மற்றும் 16mm ஸ்டீல் கம்பிகளை பயன்படுத்துவோம். எனவே மொத்தமாக 4700 கிலோ ஸ்டீல் கம்பிகள் தேவைப்படுகிறது. 

1 கிலோ ஸ்டீல் கம்பியின் விலை 75 ரூபாய் என கணக்கில் கொண்டால் 4700 கிலோ ஸ்டீல் கம்பிகள் வாங்குவதற்கு ரூ.3,52,000 செலவாகிறது.

1800 சதுரடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும் தெரியுமா..?

செங்கல் எவ்வளவு தேவைப்படும்..?

செங்கல்

செங்கல் மொத்தமாக 24 ஆயிரம் செங்கல் தேவைப்படுகிறது. 1 செங்கல்லின் விலை 7 ரூபாய் 50 பைசா என வைத்து கொண்டால் 24 ஆயிரம் செங்கல் வாங்குவதற்கு ரூ.1,80,000 செலவாகிறது.

கிராவல் எவ்வளவு தேவைப்படும்..?

கிராவல் மொத்தமாக 27 யூனிட் தேவைப்படுகிறது. எனவே 27 யூனிட் கிராவல் வாங்குவதற்கு 30 ஆயிரம் செலவாகிறது.

எலெக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் பொருட்கள் வாங்குவதற்கு எவ்வளவு தேவைப்படும்..?

1100 சதுர அடியில் புது வீட்டிற்கு எலெக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் பொருட்கள் வாங்குவதற்கு 1,65,000 ரூபாய் செலவாகிறது.

மேலும் பெயிண்டிங் பொருட்கள் வாங்குவதற்கு 77 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

மரப்பொருட்கள் மற்றும் டைல்ஸ் வாங்க எவ்வளவு செலவாகும்..?

மரப்பொருட்களான கதவு, ஜன்னல் மற்றும் பிரேம் ஒர்க் ஆகியவற்றிற்கு ரூ.1,43,000 செலவாகிறது மற்றும் டைல்ஸ், கடப்பா, கிரானைட் போன்றவை வாங்குவதற்கு 88 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

எனவே 1100 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தோராயமாக மொத்தம் ஆகும் செலவு:

1100 sq ft House Construction Cost in Tamil
வீடு அளவு மொத்த பொருட்களின் விலை  வேலையாட்களின் சம்பளம்  1100 சதுர அடியில் வீடு கட்டி முடிக்க ஆகும் மொத்த செலவு
1100 சதுர அடி ரூ.14,98,000/- 7.5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை  21 லட்சம் முதல் 23 லட்சம் ரூபாய் வரை

 

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement

 

Advertisement