How many cents is 1200 square feet?
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. ஒரு இடத்தை அளக்க மெசர்மென்ட் என்பது மிகவும் அவசியமான மற்றும் முக்கியமான ஒன்றாகும். ஒரு இடத்தை அளப்பதற்கு மெசர்மென்ட் பற்றி தெரிந்திருந்தால் மட்டுமே அந்த இடம் எத்தனை சதுர அடி, எத்தனை சென்ட், எத்தனை கிரவுண்ட் என்று அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் 1200 சதுர அடி எதனை சென்ட் வரும் என்பதை குறித்து தான் இன்றைய பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
1200 சதுர அடி எத்தனை சென்ட்? – How many cents is 1200 square feet?
இந்த 1200 சதுர அடி எத்தனை சென்ட் என்பதை அறிவதற்கு முன் ஒரு சதுர அடி என்றால் என்ன என்பதை பற்றி அறியலாம்.
ஒரு அடி என்பது எவ்வளவு என்று பொதுவாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஒரு அடி ஸ்கேலில் 30 செண்டிமீட்டர் இருக்கும் அது தான் ஒரு அடி ஆகும். ஒரு சதுர அடி என்பது ஒரு அடி ஸ்கேலை நான்கு பக்கமும் வைத்தீர்கள் என்றால் அவற்றின் நடுவில் இருக்கும் பகுதி தான் ஒரு சதுர அடி ஆகும். உதாரணத்திற்கு கீழ் உள்ள படத்தை பார்க்கவும்.
ஒரு சென்ட் எப்படி கணக்கிடப்படுகிறது?
முன்பெல்லாம் நமது முன்னோர்கள் இடத்தை அளக்க டேப்பை பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக செயினை தான் பயன்படுத்தியுள்ளனர், அந்த செயினின் அளவு அதிகபட்சம் 20 மீட்டர் வரை தான் இருந்துள்ளது. மீட்டர் என்பது நமது தமிழ் மெசர்மென்டில் கிடையாது. அடி (Feet) என்று தான் மெசர்மென்ட் செய்து வந்தோம். ஆக 20 மீட்டர் என்பது 66 அடி என்று கணக்கிடப்பட்டு. ஒரு மீட்டர் என்பது 3.3 அடி என்று நமக்கு தெரியும். ஆக தோராயமாக ஒரு சென்டின் அளவு 66 அடி என்று கணக்கிடப்பட்டது. நமக்கு சதுர அடி வேண்டும் என்பதற்காக 66Χ66 என்று பெருக்குகிறோம் அவ்வாறு பெருக்கும் போது நமக்கு 4,356 சதுர அடி வரும்.
இந்த 4,356 சதுர அடியை 10 சென்ட் என்று சொல்வார்கள். ஆக ஒரு சென்ட் எப்படி கணக்கிட வேண்டும் என்றால் 4,356/10 என்று வகுத்தால் நமக்கு 435.6 என்று வரும் அது தான் ஒரு சென்ட் ஆகும் அல்லது 435.6 சதுர அடி என்றும் சொல்லலாம். சரி வாங்க இப்பொழுது 1,200 சதுர அடி எத்தனை சென்ட் என்று அறிவோம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1200 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவுகள் ஆகும்..! அதற்கு தேவையான பொருட்கள்..!
1200 சதுர அடி எத்தனை சென்ட்?
இந்த 1200 சதுர அடியை 435.6 சதுர அடியாள் வகுத்தால் அதன் மூலம் கிடைக்கும் அளவு தான் 1200 சதுர அடிக்கான விடை ஆகும். அதாவது 1200/435.6=2.7 என்று வரும் ஆக 1200 சதுர அடி எத்தனை சென்ட் என்றால் 2.7 சென்ட் ஆகும்.
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |