1500 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் எவ்வளவு செலவாகும்.!

Advertisement

1500 sq ft House Construction Cost in Tamil | 1500 சதுர அடி வீடு கட்ட ஆகும் செலவு

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவு மட்டும் இருந்தால் போதாது. அதற்கான திட்டத்தையும் இட வேண்டும். நீங்கள் எவ்வளவு சதுர அடியில் வீடு கட்ட போகிறீர்கள் என்பதை முதலி பார்க்க வேண்டும். அடுத்து எடுத்துக்காட்டாக நீங்கள் 1000 சதுர அடியில் வீடு கட்ட போகிறீர்கள் என்றால் அதற்கு எவ்வளவு பொருட்கள் தேவைப்படும், இந்த பொருட்களை வாங்குவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையம் தெரிந்து கொண்டால் வீடு கட்டுவதற்கு ஈசியாக இருக்கும். சுருக்கமாக சொன்னால் பட்ஜெட் போட்டு வீடு கட்ட வேண்டும். வாங்க இந்த பதிவில் 1500 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் மற்றும் அதற்கான செலவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1500 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் | 1500 sq ft House Construction Cost in Tamilnadu:

Basement Cost:

  • சிமெண்ட் மொத்தமாக 333 மூட்டை தேவைப்படும். ஒரு மூட்டை 420 ரூபாய் என்றால் 139860 ரூபாய் செலவாகும்.
  • மணல் 1/2 யூனிட் தேவைப்படும். இதற்கான செலவு 99,000 ரூபாய் தேவைப்படும்.
  • 1 1/2 ஜல்லி 9 யுனி தேவைப்படும். இதனுடைய விலை 28,800, 3/4 ஜல்லி 12 யூனிட் தேவைப்படுகிறது. இதனுடைய விலை 42,000 ரூபாய்.
  • செங்கல் 10130 கல் தேவைப்படும். இதனுடைய விலை 81040
  • கம்பி 2475 கிலோ தேவைப்படுகிறது. 19,800 ரூபாய் தேவைப்படும். மேல் கூறப்பட்டுள்ள செலவு மட்டும் 6,88,700 செலவாகும்.
  • வேலை செய்வதற்கான ஆட்களுக்கு 2,70,000 ரூபாய் தேவைப்படும்.  பொருட்களின் செலவு மற்றும் ஆட்களின் கூலி என மொத்தமாக சேர்த்து 9,58,700 ரூபாய் பேஸ்மெண்ட் போடுவதற்கு செலவாகும்.  

500 சதுர அடியில் வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் மற்றும் செலவுகள் பற்றி தெரியுமா.?.?

Total Cost:

  • பேஸ்மெண்ட் போட்ட பிறகு அதன் பிறகு வீடு கட்டுவதற்கான மொத்த செலவுகளை தெரிந்து கொள்வோம் வாங்க..
  • சிமெண்ட் 790 மூட்டை தேவைப்படும். ஒரு மூட்டையின் விலை 420 ரூபாய் என்றால் 790 மூட்டையின் விலை 3,31,800 ரூபாய் தேவைப்படும்.
  • மணல் 50 யூனிட் தேவைப்படும். இதற்கான தேவைப்படுகின்ற தொகை 2,28,000 ரூபாய் தேவைப்படுகின்றது.
  • 3/4 ஜல்லி 23 யூனிட் தேவைப்படும். இதற்கு 87,400 ரூபாய் செலவாகும். 1 1/2 ஜல்லி 8 1/2 யூனிட் தேவைப்படும். இதற்கு 29750 ரூபாய் செலவாகும்.
  • கம்பி 6000 கிலோ தேவைப்படும். இதற்கான செலவு 4,80,000 ரூபாய் தேவைப்படும்.
  • செங்கல் 32,625 கல் தேவைப்படும். இதனை வாங்குவதற்கு 2,61,000 ரூபாய் தேவைப்படும். கிராவல் 30 யூனிட் தேவைப்படுகிறது. இதற்கான செலவு 35250 ரூபாய் தேவைப்படும். 
  • எலெக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை செய்வதற்கு 1,88,000 ரூபாய் தேவைப்படும்.
  • பெயிண்ட் அடிப்பதற்கு 94,000 ரூபாய் தேவைப்படும். ஆசாரி வேலை செய்யும் பொருட்களுக்கு 1,88,000 ரூபாய் செலவாகிறது.
  • டைல்ஸ் வாங்குவதற்கு 1,13,000 ரூபாய் செலவாகும். மேல் கூறப்பட்டுள்ள செலவுகளை சேது மொத்தமாக 20,36,200 ரூபாய் செலவாகும்.
  •  வேலை செய்வதற்கான ஆட்களுக்கு 10,50,000 ரூபாய் தேவைப்படும்.அடுத்து பொருட்களின் செலவு ஆட்களின் கூலி என சேர்த்து மொத்தமாக 30,86,200 ரூபாய் தேவைப்படும்.  

Roof Materail Cost:

  • ரூப் கான்கிரிட் போடுவதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செலவுகளை தெரிந்து கொள்வோம் வாங்க..
  • சிமெண்ட் 130 மூட்டை தேவைப்படும், இதனை வாங்குவதற்கு 63,000 ரூபாய் தேவைப்படும்.
  • மணல் 1 யூனிட் தேவைப்படும். இதற்கான  செலவு 18,750 ரூபாய்.
  • கம்பி 1500 கிலோ தேவைப்படும், இதற்கான செலவு 1,20,000 ரூபாய் தேவைப்படுகிறது. எலெட்ரிக்கல் வேலை செய்வதற்கு பைப்பின் விலை 15,000 ரூபாய் தேவைப்படும்.
  •  மேல் கூறப்பட்டுள்ள செலவுகளை மொத்தமாக சேர்த்தால் 2,36,750 ரூபாய் செலவாகும்.  
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement