450 சதுர அடியில் அழகான புது வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும் மற்றும் அதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் தெரியுமா..?

450 sq ft house construction cost in tamil

450 sq ft House Construction Cost 2023 

ஒரு புது வீடு கட்டுவது என்பது நாம் எடுத்து உடன் முடிக்கும் ஒரு செயல் அல்ல. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் புது வீடு கட்ட வேண்டும் என்ற உடன் அதில் நிறைய யோசனை மற்றும் ஆசை இருக்கும். அப்படிப்பட்ட வீட்டினை கட்டி முடிப்பதற்கு அடிப்படை என்றாலே நிறைய பொருட்கள் தேவைப்படும். அந்த பொருட்கள் வீட்டின் சதுர அடியினை பொறுத்து மாறுபடுவதால் எவ்வளவு பொருட்கள் வேண்டும் என்று சிலருக்கு தெரியாமல் இருக்கும். அதனால் தான் நம்முடைய Measurement பதிவில் தினமும் ஒரு குறிப்பிட்ட சதுர அடிக்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் எவ்வளவு என்று கூறி வருகிறோம். அந்த வகையில் இன்று 450 சதுர ஒரு அழகான வீடு கட்டுவதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் செலவுகள் பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ 500 சதுர அடியில் வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் மற்றும் செலவுகள் பற்றி தெரியுமா..

வீடு கட்ட தேவையான பொருட்கள்:

வீடு கட்ட வேண்டும் என்றாலே அதற்கு மணல், சிமெண்ட், ஜல்லி, மரப்பொருட்கள், ஜன்னல் மற்றும் கதவு, எஃகு, மின்சாரதிற்கு தேவையான பொருட்கள், பெயிண்ட் மற்றும் அதற்கு தேவையான இதர பொருட்கள், தண்ணீர் வசதி அமைப்பதற்கான பொருட்கள் போன்ற அனைத்து பொருட்களும் பொதுவான ஒன்று.

இந்த பொருட்கள் அனைத்தும் பொதுவான ஒன்றாக இருந்தாலும் கூட அளவு மற்றும் செலவு என்பது வேறுபாடும். ஆகையால் அதனை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

450 sq ft வீடு கட்ட தேவையான சிமெண்ட்:

சிமெண்ட்

450 sq ft அளவில் உள்ள வீடு கட்டுவதற்கு 180 மூட்டை சிமெண்ட் தேவைப்படும். ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை தோராயமாக 400 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.

அப்படி என்றால் 180 மூட்டை சிமெண்ட் வாங்க 72,000 ரூபாய் தேவைப்படும்.

450 sq ft வீடு கட்ட தேவையான மணல்:

மணல்

வீடு கட்ட வேண்டும் என்றால் பொதுவாக அதற்கு P சாண்ட் மற்றும் M சாண்ட் என்ற இரண்டு வகையான மணல்கள் தேவைப்படுகிறது.

  • P சாண்ட் மணல்- 2 1/4  யூனிட்
  • M சாண்ட் மணல்- 9 யூனிட்

P சாண்ட் மணல் 1 யூனிட் ஆனது 5,000 ரூபாய் என்று தோராயமாக விறக்கப்டுகிறது. அப்படி என்றால் மொத்தமாக 2 1/2 யூனிட் P சாண்ட் மணல் வாங்குவதற்கு 11,250 ரூபாய் தேவைப்படுகிறது.

அதுபோல M சாண்ட் மணல் 1 யூனிட்டின் விலை 3,800 ரூபாய் விற்கப்படுகிறது. ஆகையால் 9 யூனிட் M சாண்ட் மணல் வாங்குவதற்கு 34,200 ரூபாய் தேவைப்படும்.

450 sq ft வீடு கட்ட தேவையான செங்கல்:

செங்கல்

செங்கல் என்று பார்த்தால் 450 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தோராயமாக 9,350 செங்கல் தேவைப்படும். 1 செங்கல் கல்லின் விலை 11 ரூபாய் என்று விறக்கப்படுவதால் 1,02,850 ரூபாய் தேவைப்படும்.

450 sq ft வீடு கட்ட தேவையான கம்பி:

கம்பி

அதுபோல கம்பி என்று பார்த்தால் 2 1/4 டன் தேவைப்படுகிறது. 1 டன் கம்பியின் விலை 75,000 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுவதால் மொத்தமாக 2 1/4 டன் கம்பி வாங்குவதற்கு 1,68,750 ரூபாய் தேவைப்படும்.

450 sq ft வீடு கட்ட தேவையான ஜல்லி:

ஜல்லி

வீடு கட்டுவதற்கு பொதுவாக 3/4 அளவு மற்றும் 1 1/2 அளவு என இரண்டு வகையான ஜல்லிகள் தேவைப்படுகிறது.

3/4 அளவில் (20 mm aggregate) உள்ள ஜல்லியில் 4 1/2 யூனிட்  உங்களுக்கு தேவைப்படும். 1 யூனிட்டின் விலை 3,000 ரூபாய் என்று விற்கப்படுகிறது. அப்படி என்றால் 4 1/2 யூனிட் ஜல்லி வாங்குவதற்கு தோராயமாக 13,500 ரூபாய் தேவைப்படும்.

அதுபோல 1 1/2 அளவில் (40 mm aggregate) ஜல்லியானது மொத்தம் 1 3/4 யூனிட் தேவைப்படும். 1 யூனிட் ஜல்லியின் விலை 2,800 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுவதால் 1 3/4 யூனிட் ஜல்லி வாங்குவதற்கு தோராயமாக 3,500 ரூபாய் தேவைப்படும்.

மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் தோராயமான மதிப்பில் கணக்கிடப்பட்டுள்ளது. ஏனென்றால் உங்களுடைய விருப்பதிற்கு ஏற்றவாறு வாங்கும் போதும் பொருட்களின் விலையில் ஏற்றம் இறக்கம் இருக்கும்.

ஆகவே நீங்கள் தோராயமாக 450 சதுர அடியில் வீடுகட்டுவதற்கு தோராயமாக 6,50,000 ரூபாய் கையில் வைத்து கொள்ள வேண்டும். இவற்றை இல்லாமல் இன்னும் வீட்டிற்க்கு தேவையான இதர பொருட்கள் உள்ளதால் அதற்கு ஏற்றவாறு செலவு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்⇒ உங்களிடம் 800 சதுரடி இடம் இருக்கா..  அதில் வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும் என்று பார்க்கலாம் வாங்க.. 

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement