600 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்.? அதற்கு தேவையான பொருட்கள் என்ன.?

Advertisement

600 sq ft House Plans Budget in Tamil | 600 சதுர அடி வீடு கட்ட ஆகும் செலவு  | 600 sq ft House Construction Cost in Tamilnadu

அனைவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் ஆசை இருக்கும். சொந்த வீடு பற்றி பல கனவுகள் இருக்கும். அப்படி சொந்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசை இருக்கும் அனைவருக்கும் இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது நீங்கள் 600 சதுர அடியில் வீடு கட்ட போகிறீர்கள் என்றால் அதற்கு எவ்வளவு பொருட்கள் தேவைப்படும்..? எவ்வளவு பணம் தேவைப்படும் போன்ற விவரங்களை தொகுத்து இப்பதிவில் கொடுத்துள்ளோம். ஆகவே இப்பதிவை முழுவதுமாக படித்து 600 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களின் அளவுகள் மற்றும் செலவுகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

600 சதுர அடியில் வீடு கட்ட தேவைப்படும் பொருட்களின் அளவுகள் மற்றும் செலவுகள்:

சிமெண்ட்:

600 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு மொத்தமாக 320 சிமெண்ட் மூட்டை தேவைப்படுகிறது.

1 சிமெண்ட் மூட்டையின் விலை 400 ரூபாய் என்றால் 320 சிமெண்ட் மூட்டையின் விலை தோராயமா 1,28,000 ரூபாய் ஆகும்.

மணல்:

600 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு மொத்தமாக 15 யூனிட் மணல் தேவைப்படும். 1 யூனிட் மணல் 6,000 ரூபாய் என்றால் 15 யூனிட் மணல் தோராயமாக 90,000 ரூபாய் ஆகும்.

நீங்கள் M சாண்ட் பயன்படுத்தினால் 10 யூனிட் தேவைப்படும். இதற்கு தோராயமாக 50 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

P சாண்ட் பயன்படுத்தினால் 5 யூனிட் தேவைப்படும். இதற்கு தோராயமாக 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

1500 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் எவ்வளவு செலவாகும்.!

1 1/2″ ஜல்லி மற்றும் 3/4″ ஜல்லி:

600 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு 3/4″ ஜல்லி 9 யூனிட் ஜல்லி தேவைப்படும். இதற்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும் மற்றும் 11/2″ ஜல்லி 3 யூனிட் ஜல்லி தேவைப்படும். இதற்கு 10 ஆயிரம் தேவைப்படும்.

எனவே மொத்தமாக ஜல்லியிற்கு தோராயமாக 40 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

ஸ்டீல்:

600 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு மொத்தமாக 2,700 கிலோ ஸ்டீல் தேவைப்படுகிறது. 1 கிலோ ஸ்டீல் 75 ரூபாய் என்றால் 2,700 கிலோ ஸ்டீல் வாங்குவதற்கு தோராயமாக 2 லட்சம் ரூபாய் செலவாகும்.

செங்கல்:

மொத்தமாக 12,500 செங்கல் தேவைப்படுகிறது. 1 செங்கல்லின் விலை 7 ரூபாய் 50 பைசா என வைத்து கொண்டால் 12,500 செங்கல் வாங்குவதற்கு தோராயமாக 93 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

கிராவல்:

கிராவல் மட்டும் மொத்தமாக 15 யூனிட் தேவைப்படும். 15 யூனிட் கிராவல் வாங்குவதற்கு மொத்தமாக தோராயமாக 18 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் மெட்டீரியலுக்கு எவ்வளவு செலவாகும்..?

600 சதுர அடி வீட்டிற்கு எலெக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் மெட்டீரியலுக்கு மொத்தமாக 75 ஆயிரம் ரூபாய் தோராயமாக தேவைப்படும். மேலும் பெயிண்ட் மெட்டீரியலுக்கு 35 ஆயிரம் ரூபாய் தோராயமாக செலவாகும்.

500 சதுர அடியில் வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் மற்றும் செலவுகள் பற்றி தெரியுமா.?.?

மரப்பொருட்கள் மற்றும் டைல்ஸ்:

மரப்பொருட்களான கதவு, ஜன்னல் மற்றும் பிரேம் ஒர்க் போன்றவற்றிற்கு மொத்தமாக 75 ஆயிரம் ரூபாய் தோராயமாக செலவாகும் மற்றும் டைல்ஸ், கிரானைட் மற்றும் கடப்பா போன்றவற்றிற்கு 42 ஆயிரம் ரூபாய் தோராயமாக செலவாகும்.

600 சதுர அடியில் வீடு கட்ட ஆகும் மொத்த செலவுகள்:

 எனவே மொத்த பொருட்களின் செலவு என்று பார்த்தால் 7,86,000 ரூபாய் ஆகும். மேலும் வேலையாட்களின் சம்பளம் மொத்தமாக 4 லட்சம் முதல் 4 1/2 லட்சம் வரை ஆகும். எனவே 600 சதுர அடியில் வீடு கட்ட மொத்தமாக 11.5 லட்சம் முதல் 12 லட்சம் வரை தோராயமாக செலவாகும். 
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement

 

Advertisement