800 சதுர அடியில் புது வீடு கட்ட எவ்வளவு செலவாகும்..? மற்றும் எவ்வளவு பொருட்கள் தேவைப்படும்..?

800 sq ft house plans budget in tamil

800 sq ft House Plans Budget in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம்.காம் பதிவில் தினமும் இன்றைய சூழலில் புது வீடு கட்ட எவ்வளவு பணம் தேவை மற்றும் என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் 800 சதுர அடியில் புது வீடு கட்ட எவ்வளவு செலவாகும்.? மற்றும் அதற்கு எவ்வளவு பொருட்கள் தேவைப்படும்.? போன்ற விவரங்களை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். எல்லோருக்குமே சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கு எவ்வளவு செலவு ஆகும்..? என்னென்ன பொருட்கள் தேவைப்படும்..? என்பதையும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். ஓகே வாருங்கள் 800 சதுர அடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்..? என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

How Much Does it Cost to Build a 800 sq ft House in Tamil:

சிமெண்ட் எவ்வளவு தேவைப்படும்..?

800 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு மொத்தமாக 600 மூட்டை சிமெண்ட் தேவைப்படும். 1 சிமெண்ட் மூட்டையின் விலை 400 ரூபாய் என்றால் 600 சிமெண்ட் மூட்டையின் விலை தோராயமாக 1,68,000 ரூபாய் செலவாகும்.

1500 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் எவ்வளவு செலவாகும்.!

மணல் எவ்வளவு தேவைப்படும்..?

மணல் 21 யூனிட் தேவைப்படும். 1 யூனிட் மணல் 6,000 ரூபாய் என வைத்து கொண்டால் 21 யூனிட் மணல் வாங்குவதற்கு 1,26,000 ரூபாய் செலவாகும். 

நீங்கள் M சாண்ட் பயன்படுத்தினால் 14 யூனிட் M சாண்ட் மணல் தேவைப்படும். இதற்கு 70 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

P சாண்ட் சிமெண்ட் பயன்படுத்தினால் 7 யூனிட் P சாண்ட் தேவைப்படுகிறது. இதற்கு 42 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

3/4 ஜல்லி மற்றும் 11/2 ஜல்லி எவ்வளவு தேவைப்படும்..?

3/4 ஜல்லி 13 யூனிட் தேவைப்படுகிறது. எனவே 13 யூனிட் 3/4 ஜல்லி வாங்குவதற்கு 48 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.

11/2 ஜல்லி 4 யூனிட் தேவைப்படுகிறது. எனவே 4 யூனிட் 11/2 ஜல்லி வாங்குவதற்கு 14 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.

600 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் மற்றும் தேவையான பொருட்கள்…

ஸ்டீல் கம்பிகள் எவ்வளவு தேவைப்படும்..?

ஸ்டீல் மொத்தமாக 3600 கிலோ தேவைப்படுகிறது. 1 கிலோ ஸ்டீல் கம்பியின் விலை 75 ரூபாய் என கணக்கில் கொண்டால் 3600 கிலோ ஸ்டீல் வாங்குவதற்கு 2,70,000 ரூபாய் செலவாகும்.

செங்கல் எவ்வளவு தேவைப்படும்..?

செங்கல் மட்டும் மொத்தமாக 20 ஆயிரம் செங்கல்கள் தேவைப்படுகிறது. எனவே 1 செங்கல்லின் விலை 7 ரூபாய் 50 பைசா என கணக்கில் கொண்டால் 20 ஆயிரம் செங்கல் வாங்குவதற்கு 1,50,000 ரூபாய் செலவாகும்.

கிராவல் எவ்வளவு தேவைப்படும்..?

கிராவல் மொத்தமாக 20 யூனிட் தேவைப்படுகிறது. 20 யூனிட் கிராவல் வாங்குவதற்கு 24,000 ரூபாய் செலவாகும்.

எலெக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் பொருட்களுக்கு எவ்வளவு செலவாகும்..?

800 சதுர அடி வீட்டிற்கு மொத்தமாக எலெக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் பொருட்கள் வாங்குவதற்கு 1,20,000 ரூபாய் செலவாகிறது. மேலும் பெயிண்ட் பொருட்கள் வாங்குவதற்கு 56 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

மரப்பொருட்களுக்கு எவ்வளவு செலவாகும்..?

மரப்பொருட்களான கதவு, ஜன்னல் மற்றும் பிரேம் போன்றவற்றிற்கு மொத்தமாக 1,05,000 ரூபாய் செலவாகும்.

1200 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவுகள் ஆகும்..! அதற்கு தேவையான பொருட்கள்..!

டைல்ஸ் வாங்குவதற்கு எவ்வளவு செலவாகும்..?

800 சதுர அடி வீட்டிற்கு டைல்ஸ், கிரானைட் மற்றும் கடப்பா வாங்குவதற்கு மொத்தமாக 64 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

800 சதுர அடி வீடு கட்ட ஆகும் மொத்த செலவுகள்:

 மொத்த பொருட்களின் செலவு என்று பார்த்தால் 11,20,500 ரூபாய் செலவாகிறது. மேலும் 800 சதுர அடி வீட்டை கட்டுவதற்கு வேலையாட்களின் செலவு என்றால் 5.5 லட்சம் முதல் 6 லட்சம் வரை ஆகும்.    எனவே 800 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தோராயமாக 14 லட்சம் முதல் 16 லட்சம் வரை செலவாகும். 
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement