900 sq ft House Construction Cost
வீடு என்பது நம் அனைவரும் பாதுகாப்பாக வசிப்பதற்கு முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆரம்ப காலத்தில் எல்லாம் வீடு என்றால் அது கூரை அல்லது ஓட்டு வீடாக தான் இருந்தது. ஆனால் இப்போது எல்லாம் இதற்கு எதிர்மாறாக தான் உள்ளது. இன்றைய காலத்தை பொறுத்தவரை பெரும்பாலான வீடுகள் மாடி வீடாக தான் உள்ளது. அத்தகைய மாடி வீட்டினையும் கட்டி முடிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒன்று உள்ளது. அதுவும் அதற்கு எவ்வளவு ஜல்லி, மணல் மற்றும் சிமெண்ட் வேண்டும் என்ற கணக்கு பார்த்து வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். சிலருக்கு எவ்வளவு பொருட்கள் வேண்டும் என்று கூட தெரியாமல் போகிவிடுகிறது. அதனால் தான் இன்று 900 சதுர அடியில் வீடு கட்ட என்னென்ன பொருட்கள் வேண்டும் மற்றும் அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ 1500 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் எவ்வளவு செலவாகும்.
900 சதுர அடியில் வீடு கட்ட தேவையான பொருட்கள்:
பொதுவாக வீடு கட்ட வேண்டும் என்றால் அதற்கு மணல், சிமெண்ட், ஜல்லி, மரப்பொருட்கள், ஜன்னல் மற்றும் கதவு, எஃகு, மின்சாரதிற்கு தேவையான பொருட்கள், பெயிண்ட் மற்றும் அதற்கு தேவையான இதர பொருட்கள், தண்ணீர் வசதி அமைப்பதற்கான பொருட்கள் போன்ற அனைத்து பொருட்களும் பொதுவான ஒன்று.
மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் வீடு கட்ட தேவைப்படும் அடிப்படையான பொருட்கள் ஆகும். ஆனால் அந்த பொருட்கள் எவ்வளவு தேவைப்படும் என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வீடு கட்ட தேவையான மணல் (900 sq ft):
வீடு கட்ட வேண்டும் என்றால் அதற்கு M சாண்ட் மற்றும் P சாண்ட் என்ற இரண்டு வகையான மணல்கள் தேவைப்படும்.
M சாண்ட் மணல் 8 யூனிட் தேவைப்படும். 1 யூனிடின் விலையானது 3,800 ரூபாய் ஆகும். எனவே M சாண்ட் மணல் 8 யூனிட் வாங்குவதற்கு தோராயமாக 30,400 ரூபாய் தேவைப்படுகிறது.
அதுவே P சாண்ட் மணலானது 4 1/2 யூனிட் தேவைப்படுகிறது. 1 யூனிட் மணலின் விலை 5,000 ரூபாய் என்பதால் தோராயமாக 22,500 ரூபாய் தேவைப்படும்.
வீடு கட்ட தேவையான சிமெண்ட் (900 sq ft):
900 sq ft அளவில் உள்ள இந்த வீடு கட்டுவதற்கு 360 மூட்டை சிமெண்ட் தேவைப்படும். ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை தோராயமாக 400 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.
அப்படி என்றால் 360 மூட்டை சிமெண்ட் வாங்க 1,44,000 ரூபாய் தேவைப்படும்.
வீடு கட்ட தேவையான கம்பி (900 sq ft):
இத்தகைய வீடு கட்டுவதற்கு கம்பி என்றால் பார்த்தால் 4 1/2 டன் தேவைப்படும். 1 டன் கம்பியின் விலை 75,000 ரூபாய் என்று விற்கப்படுகிறது. அப்படி என்றால் 4 1/2 டன் கம்பியின் விலை தோராயமாக 3,37,500 ரூபாய் தேவைப்படும்.
வீடு கட்ட தேவையான செங்கல் (900 sq ft):
900 sq ft அளவில் உள்ள வீட்டினை கட்ட தேவையான செங்கல் என்று பார்த்தால் 19,800 செங்கல் தேவைப்படும். ஒரு செங்கலின் விலை 11 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. அப்படி என்றால் தோராயமாக செங்கல் வாங்குவதற்கு 2,17,800 ரூபாய் தேவைப்படும்.
வீடு கட்ட தேவையான ஜல்லி (900 sq ft):
பொதுவாக வீடு கட்டுவதற்கு 3/4 அளவு மற்றும் 1 1/2 அளவு என இரண்டு வகையான ஜல்லிகள் தேவைப்படுகிறது.
உங்களுக்கு 3/4 அளவில் (20 mm aggregate) உள்ள ஜல்லியில் 9 யூனிட் தேவைப்படும். 1 யூனிட்டின் விலை 3,000 ரூபாய் என்று விற்கப்படுகிறது. அப்படி என்றால் 9 யூனிட் ஜல்லி வாங்குவதற்கு தோராயமாக 27,000 ரூபாய் தேவைப்படும்.
அதுபோல 1 1/2 அளவில் (40 mm aggregate) ஜல்லியானது மொத்தம் 3 1/2 யூனிட் தேவைப்படும். 1 யூனிட் ஜல்லியின் விலை 2,800 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே 3 1/2 யூனிட் ஜல்லி வாங்குவதற்கு தோராயமாக 9,800 ரூபாய் தேவைப்படும்.
இத்தகைய பொருட்களை நீங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வாங்கும் போது இதனுடைய விலையானது ஒன்றுடன் ஒன்று வேறுபடும். ஆகையால் நீங்கள் 900 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தோராயமாக 16,00,000 ரூபாய் கையில் வைத்து கொள்ள வேண்டும். இவற்றை இல்லாமல் இன்னும் வீட்டிற்க்கு தேவையான இதர பொருட்கள் உள்ளதால் அதற்கு ஏற்றவாறு செலவு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்⇒ உங்களிடம் 800 சதுரடி இடம் இருக்கா.. அதில் வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும் என்று பார்க்கலாம் வாங்க..
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |