தீபாவளி அன்று எண்ணெய் குளியலில் சேர்க்க வேண்டிய பொருட்கள்.!

Advertisement

Diwali Oil Bath Ingredients in Tamil | தீபாவளி எண்ணெய் குளியல் பொருட்கள்  

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தீபாவளி அன்று தேய்த்து குளிக்கும் எண்ணெயில் சேர்க்க வேண்டிய பொருட்கள் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். தீபாளிக்கு நாம் அனைவருமே நல்லெண்ணெய் சேர்த்து குளிப்போம். அப்படி தேய்த்து குளிக்கும் எண்ணெயில் என்னென்ன பொருட்களை சேர்த்து குளிக்க வேண்டும் என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

அதுமட்டுமில்லாமல், ஏன் தீபாவளி பண்டிகையின்போது மட்டும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கின்றோம்.? என்ற சந்தேகமும் நம்மில் பலருக்கும் இருக்கும். எனவே, தீபாவளிக்கு ஏன் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கிறோம் என்று தெரிந்துகொள்ள பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்.?

தீபாவளி அன்று தேய்த்து குளிக்கும் எண்ணெயில் சேர்க்கவேண்டிய பொருட்கள்:

தீபாவளி அன்று தேய்த்து குளிக்கும் எண்ணெயில் சேர்க்கவேண்டிய பொருட்கள்

  • நல்லெண்ணெய் – வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு
  • இஞ்சி – ஒரு சிறிய துண்டு 
  • பூண்டு – 5 அல்லது 6 பற்கள் 
  • சின்ன வெங்காயம் –
  • மிளகு – 1 டீஸ்பூன் 
  • வரமிளகாய் – 1 சிறியது 
  • கறிவேப்பிலை – 2 கொத்து 

எண்ணெய் காய்ச்சும் முறை:

  • முதலில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை தோலுரித்து, தனித்தனியாக, ஒவ்வொன்றாக  சிறிய அம்மி கல்லில் சேர்த்து லேசாக நச்சு/இடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  • அடுத்து, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து சூடு செய்து கொள்ளுங்கள்.
  • அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்வது மிகவும் அவசியம்.
  • எண்ணெய் சூடானதும், அதில் முதலில் மிளகினை சேர்த்து கொள்ளுங்கள். மிளகு பொரிந்ததும், அதனுடன் இஞ்சி சேர்த்து கொள்ளுங்கள்.
  • இஞ்சி சேர்த்த பிறகு, பூண்டு சேர்த்து கொள்ளுங்கள். பூண்டு சேர்த்த பிறகு, வெங்காயம் சேர்த்து கொள்ளுங்கள்.
  • சேர்த்த அணைத்து பொருட்களும் பொன்னிறமாக வந்த பிறகு, காம்புடன் உள்ள வரமிளகாயினை சேர்த்து கொள்ளுங்கள். (மிளகாயினை கிள்ள கூடாது)

தீபாவளி எண்ணெய் குளியல் பொருட்கள்  

  • இறுதியாக, இதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொரிய விட்டு, அடுப்பை அணைத்து விட வேண்டும்.
  • அதன் பிறகு, எண்ணெய் ஆறவைத்து வடிகட்டி, எண்ணெய் நன்கு ஆறியதும், தலையில் தேய்த்து 20 நிமிடம் வைத்து சிகைக்காய் பயன்படுத்தி குளிக்க வேண்டும். முக்கியமாக, இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரில் குளிக்க வேண்டும்.
  • இவ்வாறு நல்லெண்ணெய்யில் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து குளிப்பதால், ஜலதோஷம் பிடிக்காது.

கோடீஸ்வர யோகம் கிடைக்க தீபாவளி அன்று செய்ய வேண்டிய 5 விஷயங்கள் மற்றும் செய்யவே கூடாத விஷயம்.!

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement