இருமுடி கட்ட தேவையான பொருட்கள்.!

Advertisement

Irumudi Katta Thevaiyana Porutkal in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இருமுடி கட்ட என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை கொடுத்துள்ளோம். நம் வீடுகளில் அப்பா, அண்ணா, தம்பி, கணவர் என ஏதேனும் ஒரு நபர் சபரிமலை ஐயப்பன் சுவாமிக்கு மாலை அணிந்து, ஒரு மண்டலம் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க பள்ளிக்கட்டு சபரிமலைக்கு… யாரைக் காண.. சுவாமியைக் காண… என்ற சரண கோஷத்தோடு மலைக்கு செல்வார்கள்.

இருமுடி கட்டும்போது, அதில் குறிப்பிட்ட சில முக்கியமாக பொருட்களை வைக்க வேண்டும். ஆனால், பலருக்கும் இருமுடி கட்ட தேவைப்படும் பொருட்கள் என்னென்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏன் 18 படிகள் உள்ளது.? அந்த 18 படிகளுக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

இருமுடி கட்ட தேவையான பொருட்கள்:

இருமுடி கட்ட தேவையான பொருட்கள்

  • மஞ்சள் பொடி
  • பன்னீர்
  • தேன்
  • சந்தன வில்லைகள்
  • குங்குமம்
  • விபூதி
  • ஊது பத்தி
  • சாம்பிராணி
  • கற்பபூம்
  • பேரீச்சம்பழம்
  • உலர்ந்த திராட்சை
  • முந்திரி, கல்கண்டு
  • அச்சு வெல்லம்
  • அவல்
  • பொரி
  • கடலை
  • மிளகு
  • கல் உப்பு
  • எலுமிச்சம் பழம்
  • வெற்றிலை பாக்கு
  • பாசிப்பருப்பு
  • வளையல்
  • கண்ணாடி
  • சீப்பு
  • ரவிக்கை துணி
  • நெய் 
  • தேங்காய்

இருமுடியில் முன் முடியில் (இருமுடியில் முன்பக்கம் இருக்கும் கட்டு), நெய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வைத்து கட்டப்படும்.  பின் முடியில் சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பும்போது பதினெட்டாம் படிக்கு அருகிலும், வீட்டின் முன்பு உடைக்கவும் இரண்டு தேங்காய்கள் மற்றும் மாலை அணிந்தவருக்குத் தேவையான பொருட்களும் வைத்து கட்டப்பட்டிருக்கும்.

வசதி வாய்ப்பு இல்லாத காலத்தில், பின்முடியில் சமையலுக்கு தேவையான அரிசியும் வழியில் சாப்பிடுவதற்கு தேவையான தின்பண்டங்களையும் கட்டி கொண்டு சுமந்து சென்றிருக்கிறார்கள். இருமுடி கட்டி சென்றதும் நாமல் முடிந்த அன்னதானங்களை வழங்கலாம்.

குருசாமி இருமுடியை தலையில் தூக்கி வைத்ததும், குருசாமியின் பாதங்களை தொட்டு வணங்க வேண்டும். தலையில் இருமுடியை சுமந்ததும், வீட்டு வாசலில் தேங்காய் உடைத்து விட்டு, திரும்பி பார்க்காமல் தலையில் இருமுடி கட்டும், மனதில் ஐயப்பன் நினைவுமாக சபரிமலைக்கு செல்ல வேண்டும்.

இவ்வாறு செய்தால், ஆண்டுதோறும் வீடுகளில் சகல ஐஸ்வர்யமும் நன்மையையும் நிறைந்து ஆண்டவனின் அருள் நிலைத்து இருக்கும்.

ஐயப்பன் மந்திரங்கள்.!

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement