ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் பட்டியல் 2025.!

Advertisement

2 பேருக்கு எவ்வளவு மளிகை பொருட்கள் தேவை | Monthly Grocery Budget For 2 Person in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் பட்டியல் பற்றி கொடுத்துளோம். பொதுவாக அனைவரின் வீட்டிலும் மாதம் மாதம் பொருட்கள் வாங்குவார்கள்.  அதாவது குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவார்கள். ஆனால் அதனை யாருக்கும் சரியான அளவுகள் வாங்கவேண்டும் என்று எண்ணம் இருக்காது. தேவை என்றால் வாங்கிக் கொள்ளலாம் என்று ஒரு அலட்சியம். ஒரு சிலர் வீட்டில் 3 நபர்கள் இருப்பார்கள். ஒரு சிலர் வீட்டில் 5 நபர்கள் இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு மாதம் என்ன பொருட்கள் தேவைப்படும் என்று யாருக்கும் தெரியாது. ஆகவே இந்த பதிவின் வாயிலாக ஒரு மாதத்திற்கு 2 பேருக்கு எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் என்பதை பற்றி என்பதை பற்றி பார்க்கலாம்.

மளிகை பொருட்கள் விலை பட்டியல் 2025

Monthly Grocery Budget For 2 Person in Tamil:

சாப்பாட்டு அரிசி – 10 கிலோ

இட்லி அரிசி – 10 கிலோ

பச்சரிசி – 3/4 கிலோ

பாசுமதி அரிசி- 1 கிலோ

துவரம் பருப்பு- 1/2 கிலோ

கடலை பருப்பு- 1/2 கிலோ

வெள்ளை உளுந்து பருப்பு- 1/2 கிலோ

பச்சை பயிறு- 200 கிராம்

தட்ட பயிறு- 200 கிராம்

நிலக்கடலை- 200 கிராம்

பொட்டு கடலை- 200 கிராம்

பட்டாணி- 200 கிராம்

கொண்ட கடலை- 200 கிராம்

கோதுமை மாவு- 1 கிலோ

அரிசி மாவு- 1/2 கிலோ

கடலை மாவு- 1/4 கிலோ

நல்லெண்ணெய்- 1/2 லிட்டர்

சமையல் எண்ணெய்- 1 லிட்டர்

தேங்காய் எண்ணெய்- 1/4 லிட்டர்

தீபம் எண்ணெய்- 1/4 லிட்டர்

நெய்- 200 மில்லி

மஞ்சள் தூள்- 50 கிராம்

மிளகாய் தூள்- 200 கிராம்

மல்லி தூள்- 200 கிராம்

சாம்பார் தூள்- 100 கிராம்

கரமசாலா- 50 கிராம்

மட்டன் மசாலா- 50 கிராம்

சிக்கன் மசாலா- 50 கிராம்

இட்லி பொடி- 50 கிராம்

கடுகு- 100 கிராம்

வெந்தயம்- 50 கிராம்

சீரகம்- 50 கிராம்

மிளகு- 25 கிராம்

காய்ந்த மிளகாய்- 200 கிராம்

புளி- 1/4 கிலோ

கல் உப்பு- 1 கிலோ

சால்ட் உப்பு- 1 கிலோ

சேமியா- 200 கிராம்

ரவை- 1/4 கிலோ

பட்டை- 10 ரூபாய் பாக்கெட்

கிராம்பு- 10 ரூபாய் பாக்கெட்

பிரிஞ்சி இலை- 10 ரூபாய் பாக்கெட்

கசகசா- 10 ரூபாய் பாக்கெட்

டீத்தூள்- 200 கிராம்

காபி தூள்- 200 கிராம்

சர்க்கரை- 1 1/2 கிலோ

நாட்டு சர்க்கரை- 1/2 கிலோ

வெல்லம்- 1/2 கிலோ

திராட்சை- 20 ரூபாய் பாக்கெட்

முந்திரி- 20 ரூபாய் பாக்கெட்

ஏலக்காய்- 20 ரூபாய் பாக்கெட்

பேரிட்சை பழம்- 20 ரூபாய் பாக்கெட்

பாதம்- 20 ரூபாய் பாக்கெட்

கேசரி பவுடர்- 10 ரூபாய் பாக்கெட்

சோடா உப்பு- 10 ரூபாய்

பிஸ்கட்- 3 பாக்கெட்

ஸ்நாக்ஸ் – 3 பாக்கெட்

சூடம்- 20 ரூபாய்

சாம்பிராணி- 25 கிராம்

பத்தி- 25 ரூபாய்

திரிநூல்- 10 ரூபாய்

துணி சோப்- 2

குளியல் சோப்- 2

துணி பவுடர்- 1/4 கிலோ

ஷாம்பு- 10 ரூபாய்

பவுடர்- 50 கிராம்

பேஸ்ட்- 50 கிராம்

ப்ரெஷ்- 1 அல்லது 2

பாத்ரூம் கிளீனர்- 1

விம் ஜெல்- 1

இதனை தவிற உணவு பொருட்கள்:

  • நூடுல்ஸ் – 2 சிறிய பாக்கெட்
  • சேமியா – 2 பாக்கெட்
  • ரவா – 1/4 கிலோ

இந்த பொருட்கள் வைத்திருந்தால் இட்லி மாவு இல்லாமல் இருக்கும் போது செய்து சாப்பிடலாம்.

காய்கறிகள்:

காய்கறிகள் எப்போதும் ஒரே மாதிரியாக வாங்குவது இல்லை. ஆனால் வாரத்தில் 1 நாட்கள் அல்லது 2 நாட்கள் அசைவ உணவுகள் செய்வீர்கள். ஆகவே அதிகபட்சமாக 1000 ரூபாய்க்குள் இரண்டுமே ஒரு மாதத்திற்கு வரும்.

குறிப்பு:

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், எப்போதும் ஒரே மாதிரியான உணவுகளை செய்து சாப்பிடாமல் இங்கு வாங்கிய பொருட்களை கொண்டு செய்து சாப்பிடுவது நல்லது. அப்போது தான் அனைத்து பொருட்கள் மிச்சம் ஆகாமல் எந்த பொருட்களும் தட்டுப்பாடு இல்லாமலும் இருக்கும்.

மளிகை பொருட்கள் பட்டியல் 

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement