நிலை வைக்க தேவையான பொருட்கள்

Advertisement

நிலை வைக்க தேவையான பொருட்கள்

பொதுவாக இந்துக்கள் பண்டிகைகளில் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் பூஜை பொருட்கள் மாறுபடும். இதனை பற்றி அனைவருக்கும் தெரியுமா என்று கேட்டால் நிச்சயம் தெரியாது. என்னென்ன பூஜைக்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதனை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு தான் தெரிந்து கொள்வார்கள். அப்படி இருக்கும் இருக்கும் பட்சத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் மனை போடுவது, நிலை பதிக்கும் போது, கான்கிரீட் போடும் போது, பூஜைகள் நடத்தப்படும். இதற்கு தேவைப்படும் பொருட்களை பற்றி அறிந்திருக்க மாட்டீர்கள். உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் நிலை வைக்க தேவையான பொருட்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

நிலையில் கட்டிட வேலைக்கு தேவையான பொருட்கள்:

  • மணல்
  • கல் (Gravel, Crushed Stones)
  • சிமெண்ட் மற்றும் கான்கிரீட்
  • அளவீட்டு கருவிகள் (Measuring Tape, Leveling Instrument)
  • செருகு கம்பிகள் (Peg, Stakes)

நிலை வைக்கும் பூஜையில் பயன்படுத்தப்படும் மங்கல பொருட்கள் என்னென்னவை:

நிலை வைக்கும் பூக்களில் கீழே உள்ள பொருட்களை வைப்பதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றலை ஈர்க்கவும், செல்வ வளத்தை அதிகரிக்க கூடியதாகவும் இருக்கும்.

  • குங்குமம், சந்தனம், விபூதி
  • கற்பூரம்
  • திரி தீபம் (விளக்கு, எண்ணெய், திரி)
  • பூக்கள் (மல்லி, அரளி, துளசி முதலானவை)
  • மாவிலை, அருகம்புல், வாழை இலை
  • தர்பை காசியம்
  • பஞ்சபாத்திரம், உட்சத்தி
  • மஞ்சள், சிறிதளவு பால், தேன், பஞ்சாமிர்தம்
  • மாவிலை தோரணம்

நிலை வாசலில் பதிக்க வேண்டிய பொருள்கள்

வீட்டு நிலை வைக்கும் பூஜை செய்யும் முறை:

முதலில் நிலை வைக்கும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். பிறகு பூஜைக்கு தேவையான குங்குமம் ,மஞ்சள், விளக்கு, பூக்கள், பழங்கள், சந்தனம் , அகல் விளக்கு போன்றவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். வீட்டில் கிழக்கு நோக்கி நிலையை வைக்க வேண்டும். அதன் பிறகு கீழே வாழை இலை வைத்து அதில்வெற்றிலை, சீவல் வாழைப்பழம் வைக்க வேண்டும். இதனுடனே அவல் பொட்டுக்கடலையும் வைக்க வேண்டும்.

அதன் பிறகு விளக்கை ஏற்ற வேண்டும். நிலையில் பூக்களை மாட்டி விட வேண்டும். அதன் பிறகு நிலையில் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். அதன் பிறகு நிலைக்கு தீபாரதனை காட்டுவார்கள்.

நிலையை வைப்பதற்கு முன்னடி அடியில் காசு, தானியம், அவல் போன்ற பொருட்களை பதித்து விட்டு அதன் மேலே நிலையை தூக்கி வைப்பார்கள்.

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement

 

Advertisement