விளக்கு பூஜை தேவையான பொருட்கள் | Vilakku Poojai Thevaiyana Porutkal in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.இப்பதிவில் விளக்கு பூஜைக்கு தேவையான பொருட்கள் பற்றி கொடுத்துள்ளோம். திருவிளக்கு பூஜை என்பது, இந்து மதத்தில் இடம்பெறும் வழிபாட்டு முறை ஆகும். இறைவனை ஒளி வடிவமாக எண்ணி செய்யப்படும் வழிபாடு ஆகும். திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்வது மிகவும் நல்ல பலன்களை அளிக்கும். இதனால் பெரும்பாலான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்வார்கள்.
திருவிளக்கு பூஜை மேற்கொள்வதற்கு முக்கியமாக ஒரு சில பொருட்கள் தேவைப்படும். ஆனால், நம்மில் பலருக்கும் திருவிளக்கு பூஜைக்கு என்னென்ன பொருட்கள் பயன்படும் என்பது தெரிவதில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளலாம் விதமாக இப்பதிவு அமையும்.
Vilakku Poojai ku Thevaiyana Porutkal:
- திருவிளக்கு (குத்து விளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கு)
- துணை விளக்கு ஒன்று
- வாழை இலை
- வெற்றிலை பாக்கு
- நிவேதன பொருட்கள் (பழம், அவல்,பொறி, கற்கண்டு)
- திருநீறு
- குங்குமம்
- சந்தனம்
- உதிரி பூ
- ஊதுபத்தி
- துளசி
- கற்பூரம்
- ஊதுபத்தி வைக்கும் தட்டு
- கற்பூரத்தட்டு
- எண்ணெய்
- திரி
- தீப்பெட்டி
- ஒரு செம்பு தீர்த்தம் (கலசம்)
- அரிசி
- மஞ்சள்
- சாம்பிராணி
- கோலமிடுவதற்கு பச்சரிசி மாவு
- தாம்பாளம்
- அமர்ந்து கொள்வதற்கு சிறிய விரிப்பு
திருவிளக்கு பூஜை தெரிந்துகொள்ள வேண்டியவை:
- திருவிளக்குகளை நன்றாக கழுவி துடைத்து சுத்தமான தாம்பாளம் அல்லது பலகையில் மட்டுமே வைக்க வேண்டும்.
- திருவிளக்கு பூஜையில் எவர்சில்வர் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது. பித்தளை, வெண்கல விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- உடைந்த, கீறல் விழுந்த விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.
- குத்துவிளக்கில் எட்டு இடங்களில் பொட்டு வைக்க வேண்டும்.
- கிழக்கு,மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் மட்டுமே விளக்கு ஏற்ற வேண்டும்.
- விளக்கு பூஜையில் பசுநெய் , நல்லெண்ணெய் ,ஆமணக்கு எண்ணெய் ஆகிய எண்ணெய்களை பயன்படுத்துவார்கள்.
- கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது.
- விளக்கேற்ற பயன்படுத்தும் திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.
வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றி வழிபட்டால் நல்லது நடக்கும்..?
திருவிளக்கு வழிபாட்டின் சிறப்புகள்:
- திருவிளக்கு பூஜை ஆனது, பெரும்பாலும் கன்னி பெண்களாலும் சுமங்கலி பெண்களாலும் நடத்தப்படுகிறது.
- பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டால் தூய்மையும், தெய்வத்தன்மையும் உண்டாகும்.
- அஷ்டலட்சமி வீட்டில் வாசம் செய்வாள்.
- சகல விதமான துன்பங்களும், வறுமையும் நீங்கும்.
- பேய், பிசாசு, பில்லி, சூனியம் அணுகாது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |