கடினமாக உழைத்தும் ஏழையாக இருக்கலாமா? | ஏழைகள் ஏழைகளாகவும் பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் இருப்பது ஏன்?
நம்முடைய உலகில் பணம் வேண்டுமென்றால் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறுவார்கள். பணக்காரன் ஆகா வேண்டும் என்றாலும் சரி உழைக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் நம்மை சுற்றி நிறைய இடத்தில் பாருங்க வெயில், மழை போன்ற காலங்களிலும் கடுமையாக உழைப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இருக்காது. ஏன் இப்படி நடக்கிறது என்று அறிந்து கொள்வோம்.
ஸ்மார்ட் ஒர்க்:
காலையில் இருந்து மாலை வரைக்கும் வேலை செய்வார்கள். அவர்கள் என்ன தான் கடுமையாக உழைத்தாலும் கூட அந்த ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்குமோ அது தான் கிடைக்கும். இதே ஒரு கம்பியூட்டரில் வேலை பார்க்கிறார்கள் என்றால் குறைந்த நேரத்தில் வேலை பார்த்தாலும் அவர்களுக்கான சம்பளம் அதிகமாக கிடைக்கும். அதனால் இங்கே கடுமையான உழைப்பை விட ஸ்மார்ட் தேவையானது.
வாய்ப்பு இல்லாமல் இருப்பது:
கல்வி, வேலை இல்லாமல் இருப்பது, அதே சமயத்தில் கிராமப்புறமாக இருந்தால் அந்த வட்டத்திற்க்குள்ளையே வசிப்பது அவர்களை முன்னேற முடியாது. அவர்கள் கற்று கொள்ள வேண்டும், முன்னேற வேண்டும் என்றாலும் அதற்க்கான வாய்ப்பு என்பது குறைவாக இருக்கும். அதனால் வாய்ப்புகள் இல்லாதது ஒரு காரணமாக இருக்கிறது.
தலைமுறை:
ஒருவர் பணக்காரராக இருக்கிறார் என்றால் அவருடைய சன்னதியை பணக்காரர்களாக இருந்திருப்பார்கள். அதே ஒருத்தர் ஏழையாக இருக்கிறார் என்றால் அவர்களுடைய குடும்பத்தில் உள்ள எல்லாருமே ஏழையாக தான் இருந்திருப்பார்கள். இவர்களுக்கான கல்வி, பணம், போன்றவை இல்லாமல் இருந்திருக்கும். மற்றவர்களிடம் கைகட்டி வேலை பார்ப்பவராக இருப்பார்கள். அவர்கள் என்ன சம்பளம் கொடுக்கிறார்களோ அதனை வாங்கி வந்து குடும்பம் நடத்துவார்கள். இதனால் வெளிவட்டாரத்தில் இவர்களுக்கான மதிப்பு இருக்காது.
முதலீடு:
சில பேர் நல்ல சம்பாதிப்பார்கள். ஆனால் அதனை எப்படி சேமிப்பது என்று தெரியாமல் வருகின்ற பணத்தை செலவு செய்தே கழித்திடுவார்கள். இதனால் அவர்கள் என்ன சம்பாதித்தாலும் அவர்களிடம் பணம் என்பதே இருக்காது.
மேல் கூறிய விஷயங்களை வைத்து பார்க்கும் போது ஒருவன் ஏழை நிலையிலிருந்து பணக்காரனாக வேண்டுமென்றால் கடுமையான உழைப்பு மட்டும் போதாது. ஸ்மார்ட் ஒர்க், வாய்ப்புகள் இருக்க வேண்டும். திறமை இருக்க வேண்டும். பணத்தை முதலீடு செய்ய தெரிந்திருக்க வேண்டும். சமூகத்தில் அங்கீகாரம் இருக்க வேண்டும். இவையெல்லாம் இருந்தால் தான் ஒருவரை பணக்காரராக மாற்ற முடியும்.
ஏழைகள் ஏழைகளாகவும் பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் இருப்பது ஏன்?
பணக்காரர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள், ஏழைகள் பணத்திற்காக வேலை செய்கிறார்கள்.
நான் பணத்திற்காக வேலை செய்ய கூடாது. அவை தான் நமக்காக வேலை செய்ய வேண்டும் என்ற கோட்பாடை வைத்திருக்கிறார்கள். இவர்கள் பல வலியிலிருந்து வருமானத்தை தேடுகிறார்கள். ஏழைகள் என்ன செய்கிறார்கள் அவர்கள் வேலையை மட்டும் நம்பி இருக்கிறார்கள். இந்த வேலை இல்லாத போது அவர்கள் கஷ்டம் அடைகிறார்கள்.
| மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | பொதுநலம்.காம் |














