போலி நண்பர்களை கண்டுபிடிப்பது எப்படி.?

Advertisement

How to Identify Fake Friends in Life in Tamil

பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் நண்பர்கள் என்று இருப்பார்கள். ஒருவருக்கு ஒரு நண்பரும் இருக்கலாம், பல நண்பரும் இருக்கலாம். இந்த நண்பர்கள் அனைவரும் எல்லாருக்கும் உதவ கூடியவர்களாக இருப்பார்கள். சில நண்பர்கள் உதவி என்று கேட்டாலும் செய்ய மாட்டார்கள். நிறைய நபர்களுக்கு நடந்திருக்க கூடிய விஷயமாக இருக்கும். அதாவது சில பேர் கூடவே இருப்பார்கள், அவர்களை பற்றி குறை கூறுவார்கள். இப்படி பல விதமாக இருப்பார்கள். இப்படி இருப்பவர்களில் போலி நண்பர்களை கண்டறிவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

நம்பிக்கை:

உங்களின் நண்பர்கள் உங்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறார்களா என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது சில பேர் உங்களிடம் நன்றாக பேசுவார்கள். ஆனால் உங்களை பற்றி மற்றவர்களிடம் குறை கூறுவார்கள். அவர்களிடம் ஒருபோதும் நட்பு வைக்காதீர்கள். நீங்கள் ஒரு விஷயத்தை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று ரகசியமாக இருக்கட்டும் என்று அவர்களிடம் மட்டும் கூறுவீர்கள். ஆனால் அவர் மற்றவர்களிடம் அந்த விஷயத்தை கூறி விடுவார்கள். அப்டி இருந்தால் அவர்கள் உங்களின் நண்பர் இல்லை என்று புரிந்து கொள்ளுங்கள்.

தேவைக்காக பழகுவது:

போலி நண்பர்களை கண்டறிவது எப்படி

சில நபர்களுக்கு அவர்களின் தேவைக்காக உங்களை வைத்து கொள்வார்கள். அதுவே உங்களுக்கு ஒரு தேவை என்று கூறி பாருங்கள் அவர்கள் காணாமல் போகிவிடுவார்கள். அதனால் யாரேனும் உங்களின் தேவைக்காக பழகுறார்கள் என்றால் அவர் உங்களிடம் போலியாக இருக்கிறார்கள்.

சுயநலம்:

போலியாக நண்பர்கள் பெரும்பாலும் சுயநலம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் அவர்களை பற்றி உயர்த்தி பேசி கொண்டே இருப்பார்கள். உங்களின் கருத்துக்களை கேட்க மாட்டார்கள். உங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க மாட்டார்கள்.

பொறாமை:

நீங்கள் ஒரு விஷயத்தில் ஏதும் சாதித்து விட்டால் அதனை பாராட்டாமல் அதனை கண்டு பொறாமைப்படுபவர்கள் உண்மையான நண்பர்களாக இருக்க மாட்டார்கள். நீங்கள் ஒரு விஷயம் சிறப்பாக செய்தாலும் அதனை மட்டம் தட்டி பேசுவார்கள். உங்களின் வெற்றியை கண்டு  மகிழ்ச்சி அடையாமல் பொறாமைப்படும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

செயல்கள் வெற்றி அடைய:

போலியாக இருக்கும் நண்பர்கள் சூழ்நிலைகளை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வார்கள். உங்களிடம் பொய் பேசும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதற்கு உங்களை பயன்படுத்தி கொள்வார்கள்.

மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  பொதுநலம்.காம் 

 

Advertisement