வெற்றியை அடைவதற்கு மூன்று பயங்களை விட்டுவிட வேண்டும்

Advertisement

To Achieve Success you Need to Let Go of Three Fears 

நம்மில் அனைவருக்குமே வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வெற்றியை அடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இது போன்ற எண்ணம் இருந்தாலும் அதனை நம்மால் செய்ய முடியுமா என்ற கேள்விகளும் இருக்கும். அதன் கூடவே பயமும் இருக்கும். பயம் என்பது ஒரு மனிதனை வாழவே விடாது. செய்யும் செயல்களிலும் கவனம் இருக்காது. அதனால் பயத்தை விட்டு விட வேண்டும். நம்மை வெற்றியை அடையாமல் இருப்பதற்கு மூன்று பயங்கள் இருக்கிறது. அவை என்னென்ன என்று அறிந்து கொள்வோம் வாங்க..

செய்ய முடியுமா என்ற சந்தேகம்:

ஏதவாது நீங்கள் புதிதாக இரு செயல் செய்ய போகிறீர்கள் என்றால் சந்தேகம் வரும். இந்த சந்தேகம் வந்தாலே நம்மால் வேலையில் கவனம் செலுத்த முடியாது. நம்மால் செய்ய முடியாது என்ற உணர்வும் வந்து விடும். அதனால் முதலில் உங்களை நம்ப வேண்டும்.உங்களுடைய பலத்தை அறிந்து கொள்ளுங்கள். அப்போது தான் வெற்றியை அடைய முடியும்.

போலி நண்பர்களை கண்டுபிடிப்பது எப்படி

தோல்வியை கண்டு பயப்படுவது:

நீங்கள் செய்யும் செயல் ஆனது வெற்றியையும் அடையலாம், தோல்வியையும் அடையலாம். ஆனால் எது எப்படி இருந்தாலும் மனம் தளராமல் இருக்க வேண்டும். அது போல இந்த வேலை செய்வதால் தோல்வி வந்து விடுமோ என்ற பயமும் இருக்க கூடாது. ஓருவேளை தோல்வியை அடைந்தால் அனுபவம், வெற்றியை அடைந்தால் மகிழ்ச்சியாக இருங்கள்.

சந்தேகம்:

நீங்கள் செய்யும் வேளைகளில் இப்படி நடந்தால் என்ன செய்வது, அப்படி நடந்தால் என்ன செய்வது என்ற கேள்விகள் வரும். இந்த சந்தேகம் வருவதற்கு காரணமே அந்த செயலை பற்றிய திறன் இல்லாததால் தான் இது போன்ற சந்தேகம் வருகின்றது. அதனால் இப்படி சந்தேகம் அடைவதை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக அந்த செயலை பற்றிய திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.

மேல் கூறியுள்ள மூன்று பயங்களை விட்டு விட வேண்டும். அப்போது தான் செயலில் வெற்றியை அடைய முடியும்.

மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  பொதுநலம்.காம் 
Advertisement