ஒரே ஒரு கற்றாழையில் இவ்வளவு விஷயம் இருக்கா.! இத்தனை நாள் தெரியாமே போச்சே..

Advertisement

கற்றாழையின் மருத்துவ பயன்கள்

இன்றைய கால கட்டத்தில் கற்றாழை இல்லாத வீடுகளே இல்லை. ஒவ்வொரு வீட்டில் வாசலில் கற்றாழை உள்ளது. நாம் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு பொருளுமே பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதனை தெரிந்து கொள்ளாமல் தான் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றோம். கற்றாழையை மருத்துவத்திற்காக மட்டுமில்லை பல விஷயத்திற்காக பயன்படுத்தலாம். அது என்னென்ன விஷயங்களுக்காக கற்றாழையை பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

கற்றாழையில் உள்ள சத்துக்கள்:

கற்றாழையில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கற்றாழையின் மருத்துவ பயன்கள்:

கற்றாழையின் மருத்துவ பயன்கள்

கற்றாழையில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளத. அதை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம்.

கற்றாழையின் உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை சாப்பிடுவதன் மூலம் உடல் சூட்டை குறைக்கிறது.

 செரிமான பிரச்சனை, மலசிக்கல் பிரச்சனையை சரி செய்வதற்கும் கற்றாழை சிறந்த தீர்வாக இருக்கிறது. இதற்கு தினமும் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சாப்பிட்டு வந்தால் போதுமானது.  

கற்றாழை பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை, கருப்பை பிரச்சனை போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக கற்றாழை இருக்கிறது. அதனால் கற்றாழை உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாக அமையும்.

அழகுக்கு கற்றாழை:

அழகுக்கு கற்றாழை

 கற்றாழை முக அழகிற்கும் சிறந்த ஒன்றாக இருக்கிறது. அதில் முகப்பருவை நீக்குவதற்கும், கரும்புள்ளிகளை நீக்குவதற்கும், முகம் வெள்ளையாக மாறுவதற்கும், பளபளப்பாக இருப்பதற்கும் என பல நன்மைகளை அள்ளி தருகிறது. 

கற்றாழையில் எண்ணெய் தயாரித்து தலைக்கு பயன்படுத்துவதால் தலை முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும். தலையில் பொடுகு பிரச்சனை இல்லாமல் இருப்பதற்கும் கற்றாழையில் சிறிதளவு தயிர் சேர்த்து கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து தலை தேய்த்து குளிக்கலாம்.

கற்றாழை முகத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் என்றும் இளமையான தோற்றத்தை கொடுக்கவும் உதவுகிறது.

கண் திருஷ்டி நீங்க கற்றாழை:

கற்றாழையை இன்றைய காலத்தில் அனைவரும் வீட்டில் வாசலிலும் உள்ளது. காரணம் கண் திருஷ்டியை நீக்கும் சக்தியை கொண்டது என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கவும், பணவரவு அதிகரிக்கும்  என்றும் ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement