நெல்லிக்காயை வைத்திருந்தால் மட்டும் போதாது.! இந்த விஷயம் தெரியாம இருந்தா எப்படி.?

Amla Benefits in Tamil

Amla Benefits in Tamil

பள்ளி படிக்கும் போது நெல்லிக்காய் சீசன் வந்தாலே தள்ளுவண்டியில் போட்டு விற்பார்கள். அதை வாங்கி சிறிதளவு உப்பு வைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். பலருக்கும் நெல்லிக்காய் பிடித்தமான காயாக இருக்கும். நெல்லிக்காய் புளித்தாலும் ரசித்து சாப்பிடுவோம். அப்படிப்பட்ட நெல்லிக்காயில் பல விஷயங்கள் ஒளிந்திருக்கிறது. அது என்னென்ன விஷயங்கள் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

100 கிராம் நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள்:

 1. ஆற்றல் 58 கிலோ கலோரிகள்
 2. ஃபைபர் 3.4%
 3. புரதங்கள் 0.5%
 4. கொழுப்பு 0.1%
 5. கார்போஹைட்ரேட் 13.7 கிராம்
 6. கால்சியம் 50%
 7. இரும்பு 1.2 மி.கி
 8. கரோட்டின் 9 மைக்ரோகிராம்
 9. தியாமின் 0.03 மிகி
 10. ரிபோஃப்ளேவின் 0.01 மிகி
 11. நிசீன் 0.2 மிகி
 12. வைட்டமின் 600 மி.கி

வீட்டில் தென்னை மரம் இருந்தால் மட்டும் போதாது இந்த விஷயம் தெரியுமா. 

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்:

 amla multi purpose in tamil

நெல்லிக்காய் சளி பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறது. நெல்லிக்காய் பொடியுடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை  சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் இருமல் பிரச்சனை சரி ஆகிவிடும்.

 நெல்லிக்காயில் உள்ள கரோட்டின் பார்வையை மேம்படுத்தும்.  நெல்லிக்காயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் கண்புரை பிரச்சினைகள், உள்விழி பதற்றம்  கண்கள் சிவத்தல், அரிப்பு மற்றும் நீர் வடிதல் போன்ற பிரச்சனையை தடுக்கும்.  

நெல்லிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் மலசிக்கல் மற்றும் உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஒரு துண்டு நெல்லிக்காய் சாப்பிட்டால் அப்படி என்ன நன்மை கிடைக்க போகிறது..?

அழகுக்கு எப்படி வேலை செய்கிறது:

 amla multi purpose in tamil

நெல்லிக்காயில் இரும்பு சத்து மற்றும் கரோட்டீன் இருப்பதால் முடி வளர்ச்சியை அதிகப்படுத்த உதவுகிறது. மேலும் நரை முடிக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.

தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து  வந்தால் வயதான தோற்றத்தை கொடுக்காமல் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

மேலும் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைத்து, பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது.

ஆம்லா எந்த சீசனில் கிடைக்கும்:

நெல்லிக்காய் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கிடைக்கும்.

சமையலில் எப்படி பயன்படுகிறது:

 amla multi purpose in tamil

நெல்லிக்காயில் ஊறுகாய் செய்து சாப்பிடலாம்.

நெல்லிக்காய் மிட்டாய் செய்யலாம்.

தேன் நெல்லிக்காய் செய்து சாப்பிடலாம்.

உங்க வீட்ல மருதாணி மரம் இருக்கு சரி.. ஆனா இதுல இப்படி ஒன்னு இருக்குறது தெரியுமா..?

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

SHARE