உங்க வீட்ல கொய்யா மரம் இருக்கா..? அப்படினா இந்த விசயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா.?

Advertisement

Benefits of Guava Tree in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கொய்யாமரத்தில் அடங்கியுள்ள பல்வேறு பயன்களை பார்ப்போம். அதாவது கொய்யாமரத்தின் இலை, பழம், வேர் மற்றும் பட்டை போன்றவற்றின் பயன்களை காண்போம். கொய்யா மரத்தின் அறிவியல் பெயர் Psidium Guajava (சைடியம் குஜாவா) ஆகும். இது அனைத்து மண் வகைகளிலும் வளர கூடியது. மிர்டேசி என்னும் தாவர குடும்பத்தை சேர்ந்தது. நாட்டின் மொத்த பரப்பளவில் 2.5 ஹெக்டரில் கொய்யா சாகுபடி செய்து விற்பனை செய்யப்படுகிறது. கொய்யா மரத்தில் உள்ள இலைகள், கனிகள் , பட்டைகள் போன்றவற்றில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கின்றது. அந்த வகையில் கொய்யா மரத்தின் இலை, பழம் மற்றும் பட்டை போன்றவை எதெற்கெல்லாம் பயன்படுகிறது என்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கொய்யா மரத்தின் நன்மைகள்:

கொய்யா மரத்தில் உள்ள வேர், பட்டை, இலை மற்றும் கனி போன்றவை குடல், வயிறு, பேதி போன்ற உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கொய்யாப்பழத்தில் ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களும் சுவையும் இருப்பதால் இதனை ஏழைகளின் ஆப்பிள் என்றும் அழைக்கிறார்கள்.

தக்காளி செடியை வீட்டில் வைத்து இருப்பவர்களுக்கு இது தெரியாதா..! அப்படினா இப்போ தெரிஞ்சுக்கோங்க..!

Benefits of Guava Tree Leaves in Tamil:

Benefits of Guava Tree Leaves in Tamil

கொய்யா இலை துவர்ப்பு சுவையுடையது.

கொய்யா இலையை கழுவி விட்டு வாயில் போட்டு மென்று வந்தால் வாயில் ஏற்படும் பல்வலி, ஈறு பிரச்சனை மற்றும் வாய்ப்புண் போன்றவை குணமாகும். மேலும் கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டுவந்தால் தொண்டைப்புண் விரைவில் குணமாகும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கொய்யா இலையில் உள்ள சாறை எடுத்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொய்யா இலையை காயவைத்து பொடி செய்தோ அல்லது பச்சையாகவோ தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு டீ செய்து குடித்தால் சுகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

உடம்பில் காயம் ஏற்பட்டால் கொய்யா இலையை அரைத்து காயம் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் காயம் சரியாகிவிடும்.

கொய்யா இலையுடன் இந்த பொருளை தலையில் தடவினால் வளராத முடி கூட வளர ஆரம்பித்துவிடும்..!

கொய்யா இலையில் உள்ள சத்துக்கள்:

  1. புரதம் 
  2. வைட்டமின் பி6
  3. கோலைன்
  4. கால்சியம்
  5. இரும்பு 
  6. மெக்னீசியம்
  7. மாங்கனீசு
  8. பாஸ்பரஸ் 
  9. வைட்டமின் சி 
  10. சோடியம்
  11. துத்தநாகம்
  12. மெக்னீசியம்

Benefits of Guava Fruit in Tamil:

Benefits of Guava Fruit in Tamil

நோய் தடுப்பாற்றலை அதிகரிக்கிறது:

நமது உடலில் நோய் வருவதற்கு பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் மட்டும் காரணம் அல்ல. நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் நோய் ஏற்படுகிறது. கொய்யாவில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயிலிருந்து பாதுகாக்கிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்தது:

கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள குறைந்த கிளைசமிக் குறியீடு நீரிழிவு நோய் வருவதற்கான காரணிகளை தடுக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யாப்பழம் சிறந்த உணவாக இருக்கிறது.

இதயத்திற்கு நல்லது:

கொய்யாப்பழம் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவை மேம்படுத்தி உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது.

மேலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைக்கிறது. எனவே உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு கொய்யாப்பழம் சிறந்த உணவாகும்.

மலச்சிக்கலை தடுக்கிறது:

கொய்யாப்பழத்தில் அதிகமான அளவில் நார்ச்சத்து இருக்கிறது. ஒரு நாளைக்கு நம் உடலுக்கு தேவைப்படும் நார்ச்சத்து அளவில் 12 சதவீதம் கொய்யாப்பழம் தருகிறது. இதனால் மலசிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

கொய்யா மரத்தில் அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் செய்யுங்க..!

கண்களுக்கு நல்லது:

கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால் கண்களில் ஏற்படும் கண்புரையை தடுக்கிறது. மேலும் கண்ணின் பார்வை திறனை அதிகரித்து தெளிவான பார்வையை அளிக்கிறது.

நிறத்தை அதிகரிக்கிறது:

கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இயற்கையாகவே நிறம் அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் கொய்யாப்பழத்துடன் முட்டை கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு நிறம் அதிகரிக்கும்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement