Coconut Tree in Tamil | Coconut Tree Uses in Tamil
ஒவ்வொரு பொருளும், காயும், பூக்களும் ஒவ்வொரு சிறப்பு உடையது இதில் அனைத்துமே மருத்துவ குணத்திற்காகவும், அழகிற்காகவும் நிறைய பொருட்களை பயன்படுத்துகிறோம். அப்படி பயன்படுத்தப்படும் பொருட்களில் பல விதமாக பயன்படுத்தலாம் என்றால் ஆச்சரியமாக தானே இருக்கிறது. ஆமாங்க ஒரு பொருள் தான் ஆனால் அதனை பல விதமாக பயன்படுத்தலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் தென்னை மரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
தென்னை மரம் பற்றிய தகவல்கள்:
தென்னை மரம் 20 முதல் 30 மீட்டர் வரை வளர கூடியது. இதனின் ஆயுட்காலம் 60 மஜ்தால் 100 ஆண்டுகள் வரை வாழும். இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் தென்னை மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
தென்னை மரத்தின் பயன்கள்:
தென்னை மரத்தின் வேர்கள்:
தென்னை மரத்தின் வேர்கள் நார்ச்சத்து மிகுந்தவை. இதனை வைத்து துணி துவைப்பதற்கும், பாத்திரம் துலக்குவதற்கு பயன்படுத்தலாம். மெத்தைகள் தயாரிக்கவும் பயன்டுகிறது. ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
தென்னை இலைகள்:
தென்னை இலைகள் கூரை வீடு கட்டுவதற்கும், வீடு கூட்ட பயன்படுத்தும் துடைப்பமாகவும் பயன்படுகிறது. மேலும் பொம்மைகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
உங்களுடைய வீட்டில் வாழைமரம் இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!
தேங்காய் மட்டை:
தேங்காய் மட்டை அடுப்பு எரிப்பதற்கு பயன்படுகிறது. மேலும் மர சாமான்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
தேங்காய்:
தேங்காய் சமையலுக்கு ருசியை அதிகரிப்பதற்கு பயன்படுகிறது. மேலும் தேங்காய்விலிருந்து தேங்காய் பால், தேங்காய் தண்ணீர்,யழனி என குடிப்பதற்கும் பயன்படுகிறது. தேங்காய் காய்ந்து போனால் கொப்பரையாக பயன்படுகிறது. இதனை தேங்காய் எண்ணெய் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.மேலும் இந்துக்கள் சடங்குகளில் தேங்காய் இல்லாமல் இருப்பது இல்லை. அந்த அளவிற்கு தேங்காய் முக்கியமானதாக இருக்கிறது.
சம்பாதிப்பது எப்படி.?
மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் எப்பொழும் Demand இருப்பவை. அதனால் உங்கள் வீட்டில் தென்னை மரத்தை வளர்த்து பணமாக மாற்றி கொள்ளலாம். எப்படியென்றால் தேங்காவை கடையில் வாங்குவோம். அதுபோல ஒரு தேங்காயின் விலை 10 ரூபாயாக உள்ளது. நீங்கள் ஒரு நாளைக்கு 10 தேங்காய் விற்பனை செய்தால் 100 ரூபாய் சம்பாதிக்கலாம்.
அது போல ஒரு வார்கோலின் விலை 30 ரூபாய், ஒரு நாளைக்கு 3 வார்கோல் விற்பனை செய்தால் 90 ரூபாய் சம்பாதிக்கலாம். மேலும் ஒரு யழனி 30 ரூபாய் என்று வைத்து கொள்வோம், ஒரு நாளைக்கு 10 யழனி விற்பனை செய்தால் 300 ரூபாய் சம்பாதிக்கலாம்.
உங்கள் வீட்டில் ஒரு 10 தென்னை மரம் இருந்தால் வீட்டில் இருந்தபடியே 500 ரூபாய் சம்பாதிக்கலாம்.
தேங்காயில் உள்ள சத்துக்கள்:
தேங்காய்களில் குறிப்பாக மாங்கனீசு அதிகமாக உள்ளது, இது எலும்புகளுக்கு அவசியம். ஆரோக்கியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்பின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. செலினியம் என்பது நமது செல்களைப் பாதுகாக்கும் முக்கியமான ஆக்ஸிஜனேற்றியாகும். தேங்காயில் உள்ள கொழுப்பு முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் மற்றும் முடி நரைப்பதைக் குறைக்கும்.
தென்னை மரம் ஏறுவோருக்கான கேரா சுரக்ஷா காப்பீட்டுத் திட்டம்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |