கோடைக்காலத்தில் தயிர தினமும் சேத்துக்கிறீங்களா..? அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்தா எப்படி.?

Advertisement

Curd Multipurpose in Tamil

இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி இருக்கும். அப்படி என்ன பயனுள்ள தகவல் என்று தானே சிந்தனை செய்கிறீர்கள். அது என்ன தகவல் என்றால் தயிரில் உள்ள பல வகையான பயன்கள் பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம்.

தயிரில் அப்படி என்ன பல வகையான நன்மைகள் உள்ளது என்று தானே சிந்தனை செய்கிறீர்கள். இன்றைய பதிவை முழுதாக படித்தால் உங்களின் மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில் கிடைக்கும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தயிரின் பல்வேறு பயன்கள்:

Curd benifits in Tamil

சமையலில் தயிர்:

பொதுவாக தயிர் என்றாலே நாம் அனைவரின் மனதிலேயும் முதலில் நினைவிற்கு வருவது அதன் சமையல் பயன்பாடு மட்டும் தான். இந்திய பாரம்பரிய சமையல்கள் முதல் மேலை நாட்டு சமையல்களிலும் உணவுகளிலும் இந்த தயிர் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக இதனை தயிர் சாதம், மோர்க்குழம்பு, தயிர் வடை, தயிர் பச்சடி மற்றும் பிரியாணி ஆகியவற்றில் ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதில் சிறிதளவு தண்ணீர் கலந்தும் குடிப்பார்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> வேர்க்கடலையை சாப்பிட்டால் மட்டும் போதாது இது கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்

ஆரோக்கியத்தில் தயிர்:

பொதுவாக இதனை உணவில் எடுத்து கொள்வதன் இரகசியமே இதில் உள்ள பல வகையான ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கின்றது என்பதால் தான்.

அதாவது இதில் கலோரி, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

இவை அனைத்துமே நமது உடலுக்கு மிகுந்த நன்மையை அளிக்கும் சத்துக்கள் ஆகும். அதனால் ஒருவர் தினமும் தயிரை சாப்பிடுபவதால் அவருக்கு கீழ்கண்ட பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இத்தனை நாளா இதை தெரிஞ்சுக்காமலே இஞ்சியை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே

அதாவது மூட்டு வலி, எலும்பு தேய்மானம் உள்ள ஒருவர் தினமும் தயிர் சாப்பிடுபவதால் அவரின் அனைத்து பிரச்சனைகள் நீங்கும். மேலும் தயிரை சாப்பிடுவதால் மன அழுத்தம், சோர்வு மற்றும் எதிர்மறை சிந்தனைகள் வராது.

தயிரில் இயற்கையான முறையில் ப்ரோபயோடிக்ஸ் என்னும் அமிலம் உள்ளது. இது தயிரில் வாழும் பாக்டீரியாக்களினால் சுரப்பதால் இது குடலுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கின்றது.

அழகை மேம்படுத்துவதில் தயிர்:

தயிரை நேரடியாக தலையில் அப்ளை செய்தாலே பொடுகு, தலை வறட்சி போன்ற பிரச்னைகளை சரி செய்யலாம். மேலும் தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலத்தினால் நமது சருமத்தில் உள்ள அனைத்து துவாரங்களும் மறையும்.

மயோ கிளினிக்கின் படி லாக்டிக் அமிலம் என்பது ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் ஆகும். இது முகப்பருக்கள் வருவதை தடுக்கின்றது.

அதாவது வெள்ளரியை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கூழ் போல் அரைத்து அதனுடன் தயிர் சம அளவு கலந்து பயன்படுத்த வேண்டும். இதனை  வாரத்தில் ஒரு நாள் பயன்படுத்தினால் முகப்பருக்கள் நீங்கி விடும்.  இது அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றது.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டில் வெற்றிலை செடியை வளர்க்கிறீர்களா அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose 
Advertisement