Curry Leaves For Multipurpose in Tamil
நண்பர்களே உங்கள் வீட்டில் கருவேப்பிலை மரம் வளர்த்தீர்கள் என்றாலும் சரி அதேபோல் சமையலுக்கு பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி இதை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள். காய்கறிக்கடைக்கு சென்றால் இந்த ஒரு பொருளை இலவசமாக கொடுப்பார்கள். ஆனால் அதில் உள்ள அருமைகள் தெரியாமல் நாம் இருக்கிறோம். இந்த கருவேப்பிலை இல்லாமல் எந்த சமையலும் செய்யமாட்டோம்..! அதில் உள்ள அருமைகளை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..! அதேபோல் இந்த கருவேப்பிலை எத்தனை வகையில் நமக்கு உதவி செய்கிறது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
கருவேப்பிலை பற்றிய தகவல்:
கறிவேப்பிலை அல்லது கருவேப்பிலை என்றும் Curry Leaves என்றும் அழைக்கப்படுகிறது. இது போன்ற செடிகளில் நிறைய மருத்துவ பயன்கள் உள்ளது. இதனை இலங்கை மற்றும் இந்தியா போன்ற இடங்களில் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய அனைத்து பாகங்களும் மருத்துவத்திற்கும் சமையலுக்கும் பயன்படுகிறது.
இது பார்ப்பதற்கு வேப்ப இலைகள் போல் இருக்கும். கறிவேப்பிலை அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த இலைகள் தனித்தனி இலைகளாக அல்லாமல், கொத்து கொத்தாகவே காணப்படும். ஒவ்வொரு கொத்திலும் 10-20 இலைகள் இருக்கும். இதனுடைய உயரம் சுமார் 4 முதல் 6 மீட்டர் வரை வளரும்.
இதையும் படியுங்கள்⇒ ஒரே ஒரு கற்றாழையில் இவ்வளவு விஷயம் இருக்கா.! இத்தனை நாள் தெரியாமே போச்சே
கருவேப்பிலை நன்மைகள்:
கறிவேப்பிலையில் அதிகளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளது.
- தொப்பை குறையும்
- இரத்த சோகைக்கு
- சர்க்கரை நோய்க்கு
- இதயத்தை பாதுகாக்க
- செரிமான பிரச்சனைக்கு
- சளி தொல்லைக்கு
- முடி நன்றாக வளர்வதற்கு
- முடி கருமையாக மாறுவதற்கு
- கல்லீரலை பாதுகாக்க
இதை தவிர கருவேப்பிலை நிறைய பிரச்சனைக்கு உதவி செய்கிறது.
சமையலுக்கு எவ்வாறு பயன்படுகிறது:
- கருவேப்பிலை துவையல்
- கருவேப்பிலை சட்னி
- கருவேப்பிலை எண்ணெய்
- கருவேப்பிலை பொடி
- கருவேப்பிலை சாதம்
இந்த பொருள் இல்லாமல் அதிகளவு சமையல் செய்யமாட்டார்கள். முக்கியமாக ரசம், சாம்பார் இது இல்லாமல் வைக்கவே மாட்டார்கள். எதை தாளிப்பு செய்வதாக இருந்தாலும் கருவேப்பிலை இல்லாமல் செய்யமாட்டார்கள்.
உங்களுடைய வீட்டில் வாழைமரம் இருக்கா அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |