Drumstick Tree Multi Purpose
வணக்கம் வாசகர்களே..! பொதுவாக அனைவரின் வீட்டிலும் மரங்கள் செடிகள் என்று கட்டாயம். அப்படி இருக்கும் மரங்களில் முருங்கை மரமும் ஓன்று. அந்த காலத்தில் முருங்கை மரம் இல்லாத வீடுகளே பார்க்க முடியாது. அனைவரின் வீட்டிலும் ஒன்றுக்கு மூன்று முருங்கை மரங்கள் கூட இருந்தன. ஆனால் இன்றைய நிலையில் நாம் முருங்கை கீரையை கூட காசு கொடுத்து கடையில் தான் வாங்குகிறோம். ஆனால் அதில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அதுபோல ஒரு பொருள் பல விஷயத்திற்கு பயன்படுகிறது என்றால் அதை தான் நாம் Multi Purpose என்று சொல்கிறோம். அந்த வகையில் முருங்கை மரத்தின் Multi Purpose என்ன என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
என்ன சொல்றீங்க வேப்பமரத்துல இவ்ளோ விஷயம் இருக்கா இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே |
முருங்கை மரம் பற்றிய வரலாறு:
முருங்கை மரம் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். முருங்கை மரம் Moringa oleifera என்று அழைக்கப்படுகிறது. இந்த மரம் இந்திய துணைக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட மொரிங்காசியே குடும்பத்தை சேர்ந்த வேகமாக வளரும் மற்றும் வறட்சியைத் தாங்கும் மரமாகும்.
இது ஒரு இலையுதிர் மரமாகும். முருங்கை மரம் 10-12 மீட்டர் (33-39 அடி) உயரத்தையும் 45 சென்டிமீட்டர் (18 அங்குலங்கள்) தண்டு விட்டத்தையும் கொண்டுள்ளது. அதுபோல இந்த மரத்தின் ஒவ்வொரு பாகங்களும் எதற்கு எல்லாம் பயன்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
முருங்கை கீரை:
முருங்கை மரத்தின் இலைகளை தான் நாம் கீரைகள் என்று சொல்கின்றோம். முருங்கை கீரையில் இரும்பு, புரதம், தாமிரம், கொழுப்பு, தாதுக்கள், கார்போஹைட்ரேட்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்மின் பி காம்ப்ளக்ஸ், சுண்ணாம்புச் சத்து போன்ற பல சத்துக்கள் காணப்படுகின்றன. இது பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
உங்கள் வீட்டில் மாமரம் இருக்கா..? அப்படியென்றால் இந்த விஷயம் தெரிந்திருக்கவேண்டுமே..! |
முருங்கைக்காய்:
முருங்கைக் காயில் இருக்கும் சத்துக்கள் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
முருங்கை காய் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது. நாம் வாரத்திற்கு 2 முறையாவது முருங்கைக் காயை உணவாக எடுத்து கொண்டால் சிறுநீர் மற்றும் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
முருங்கை விதைகள்:
முருங்கைக் காயின் உட்புறத்தில் இருக்கும் விதைகளை வெயிலில் காயவைத்து அதை பொடியாக செய்து தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் எந்த நோய்களும் நம்மை நெருங்காது.
முருங்கை விதையில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. அதனால் இது பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 உங்களுடைய வீட்டில் வாழைமரம் இருக்கா அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க
முருங்கை பூ:
முருங்கை பூவில் பல ஆரோக்கியம் தரும் சத்துக்கள் இருக்கிறது. இந்த பூவை தினமும் பசும் பாலில் சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று 2 வேளையும் குடித்து வர கண் சம்மந்தமான கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
மேலும் இந்த முருங்கை பூவை நிழலில் காயவைத்து பொடியாக செய்து அதை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர வயதானவர்களுக்கு கூட கண் பார்வை அதிகரிக்கும்.
முருங்கை வேர்:
முருங்கை மரத்தின் வேரை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் காலை, மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும். மேலும் முருங்கை வேரின் சாறுடன் சம அளவு பால் சேர்த்து அருந்தினால் விக்கல், இரைப்பு, உள் உறுப்புகளில் வீக்கம், முதுகுவலி போன்ற கோளாறுகள் நீங்கும்.
முருங்கை பட்டை:
இந்த் மரத்தின் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் குப்பைமேனி இலைச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். பின் இதை சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் அவை அனைத்தும் விரைவில் குணமாகும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |