முட்டை முடிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதுன்னு தெரியும்.. ஆனால் இந்த விஷயத்தையும் தெரிஞ்சிக்கோங்க..!

Eggs Multipurpose in Tamil

Eggs Multipurpose in Tamil

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் நாம் ஒரே முறையில் தான் பயன்படுத்தி வருவோம். ஆனால் நாம் பயன்படுத்தும் பொருட்களை பல்வேறு வகையில் பயன்படுத்தலாம். அது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. எனவே தான் நமது பதிவின் மூலம் மூலம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் பல்வேறு பயன்பாட்டை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் முட்டையால் நமக்கு கிடைக்கும் பல வகையான பயன்கள் பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். முட்டையால் நமக்கு அப்படி என்ன பல வகையான நன்மைகள் கிடைக்கும் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. இன்றைய பதிவை முழுதாக படித்தால் உங்களின் மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில் கிடைக்கும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

முட்டையின் பல்வேறு பயன்கள்:

 Eggs benifits in Tamil

சமையலில் முட்டை:

பொதுவாக முட்டை என்ற பெயரை கேட்டவுடன் நாம் அனைவரின் மனதிலேயும் எழும் ஒரு பொதுவான சிந்தனை என்றால் அதன் சமையல் பயன்பாடு தான். அதாவது சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே முட்டை என்றால் மிகவும் பிடிக்கும்.

ஆம் நண்பர்கள் இந்த முட்டை நமது இந்திய உணவுகள் முதல் மேலை நாட்டு உணவுகளிலும் ஒரு முக்கிய உணவு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது இதனை பயன்படுத்தி முட்டை வறுவல், ஆம்லெட், ஆஃபாயில், கலக்கி போன்ற பல வகையான உணவுகள் தயாரிக்கப்படுகிறது.

மேலும் பல வகையான உணவுகளில் இது ஒரு முக்கியமான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

இத்தனை நாளா இதை தெரிஞ்சுக்காமலே கொண்டைக்கடலையை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே

ஆரோக்கியத்தில் முட்டை:

நாம் உணவில் முட்டையை சேர்த்து கொண்டதுக்கான இரகசியமே இதில் உள்ள பல வகையான ஊட்டச்சத்துக்களால் நமது உடல் மிகுந்த நன்மைகளையும், ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது என்பதால் தான்.

அதாவது முட்டையில் லுடீன் என்ற மூல பொருட்கள் அதிக அளவு நிறைந்துள்ளதால் கண் பார்வையை மேம்படுத்த இது மிகவும் உகந்ததாக இருக்கின்றது. அதே போல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செலுனியம் என்ற பொருள் முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது.

முட்டையில் ஓமேகா 3 அதிகம் இருப்பதால் இதய பிரச்சனைகள் வராமல் காக்கிறது. அதே போல் முட்டையில் உள்ள வைட்டமின் டி எலும்புகளுக்கு வலிமையை அளிக்கும். இது போன்று நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த முட்டை மிகவும் பயன்படுகிறது.

இலவங்கப்பட்டையை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன் இதை தெரிஞ்சிக்கோங்க

அழகை மேம்படுத்துவதில் முட்டை:

முட்டையின் வெள்ளைக்கரு முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை போக்க உதவி புரிகின்றன.

அதே போல் தலை முடி உதிர்வை நிறுத்துவதற்கு பயன்படுகிறது. அதாவது முடி 70 சதவீதம் கெரட்டின்  புரதத்தால் ஆனது. அதனால் சேத மடைந்த மற்றும் உதிர்ந்த தலை முடிகளை சரி செய்து கொள்ள 2 முட்டைகளை உடைத்து அதனுடன் 1-2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து உங்களின் தலை முடியின் வேர்களில் படுமாறு தடவி தலைக்கு குளிப்பதன் மூலம் தலை முடி உதிர்வை சரி செய்து கொள்ளலாம்.

நெய்யை ருசித்து சாப்பிட்டால் மட்டும் போதாது இதுவும் தெரிஞ்சிருக்கனும்

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose