பூண்டு பயன்கள்
அன்றாட சமையலில் பூண்டு சேர்க்காமல் சமைக்க மாட்டோம். ஏதாவது ஒரு உணவில் ஆவது பூண்டு சேர்த்திருப்போம். சமையலுக்கு சுவையை கூட்டுவது மட்டுமில்லமால் உடலுக்கும் ஆரோக்கியத்தை தர கூடியது. இப்படிப்பட்ட பூண்டில் நமக்கு தெரியாமல் பல விஷயங்கள் ஒளிந்திருக்கிறது. அது என்னென்ன விஷயம் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
பூண்டின் பயன்கள்:
பூண்டை உணவில் சேர்ப்பதன் மூலம் செரிமான பிரச்சனை வராமல் இருக்கும். மேலும் இவை குடலில் உள்ள கெட்ட பாக்ட்ரியாக்களை அழித்து நல்ல பாக்ட்ரியாக்களை பாதுக்காக்கிறது.
பூண்டு ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகிறது. டிஎன்ஏ பாதிப்பை தடுக்கிறது. பூண்டில் உள்ள ஜிங்க் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைட்டமின் சி நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டிருப்பதால் இது கண் மற்றும் காது நோய்த்தொற்றுகலிலிருந்து பாதுகாக்கிறது.
பூண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், பூண்டு நுரையீரல், புரோஸ்டேட், சிறுநீர்ப்பை, வயிறு, கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் வயிற்றில் புண்கள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.
இப்படி உள்ள பூண்டை மட்டும் வாங்கவே கூடாதாம்..
Garlic uses for skin:
காலையில் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டு அத்துண்டன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தது வந்தால் வயதான தோற்றம் ஏற்படாமல் இளமையாகவே வைத்து கொள்ள உதவுகிறது.
பூண்டில் உள்ள கிருமிநாசினிகள் மற்றும் பாக்ட்ரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பரு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. பூண்டு பற்கலிருந்து சாற்றை எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை பருக்கள் உள்ள இடத்தில் மீது தடவ வேண்டும்.கரும்புள்ளிகளை மறைக்க பூண்டு உதவுகிறது. ஒரு பவுலில் தக்காளி சாறு, இதனுடன் பூண்டு சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
Garlic uses for Hair:
முடி உதிர்வு பிரச்சனைக்கு பூண்டு சிறந்த பலனை கொடுக்கிறது. பூண்டை நச்சு அதிலிருந்து சாற்றை எடுத்து கொள்ளவும். இந்த சாற்றை தலை முடியின் வேர்களில் தடவ வேண்டும். இவை கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்தி முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது.
பொடுகு பிரச்சனைக்கு சிறந்த பலனை கொடுக்கிறது. பூண்டு பற்களை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். ஆறியதும் தலை முடி முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் பொடுகு பிரச்சனை தீர்ந்துவிடும்.
How to use garlic for cooking:
பூண்டை சமையலுக்கு பல விதமாக பயன்படுத்தலாம். பூண்டு சட்னியாக அரைத்து கொள்ளலாம். பூண்டு குழம்பு வைக்கலாம். எந்த பிரியாணி செய்தாலும் பூண்டு பேஸ்ட் சேர்த்தால் தான் ருசியாக இருக்கும். பூண்டில் ஊறுகாய் செய்யலாம். பூண்டை ரசமாகவும் வைத்து சாப்பிடலாம்.
உங்கள் வீட்ல பல வருஷமா புளிமரம் இருக்கு சரி… ஆனா அந்த மரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா ..?
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |