Ghee Multipurpose in Tamil
இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி இருக்கும். அப்படி என்ன பயனுள்ள தகவல் என்று தானே சிந்தனை செய்கிறீர்கள். அது என்ன தகவல் என்றால் நெய்யினால் நமக்கு கிடைக்கும் பல வகையான பயன்கள் பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம்.
நெய்யினால் அப்படி என்ன நமக்கு பல வகையான நன்மைகள் உள்ளது என்று தானே சிந்தனை செய்கிறீர்கள். இன்றைய பதிவை முழுதாக படித்தால் உங்களின் மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில் கிடைக்கும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
நெய்யின் பல்வேறு பயன்கள்:
சமையலில் நெய்:
பொதுவாக நெய் என்றவுடனே நாம் அனைவரின் மனதிலேயும் முதலில் நினைவிற்கு வருவது அதன் சமையல் பயன்பாடு மற்றும் அதன் நறுமணமும் மட்டும் தான். இந்திய பாரம்பரிய சமையல்கள் முதல் மேலை நாட்டு சமையல்களிலும் உணவுகளிலும் இந்த நெய் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.
அதாவது இதனை சமையலில் பல வகையில் பயன்படுகிறது. அதாவது பல வகையான இனிப்பு உணவுகள், பொங்கல், நெய் சாதம் போன்ற பல உணவுகளில் இந்த நெய் ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
ஆரோக்கியத்தில் நெய்:
பொதுவாக இதனை உணவில் எடுத்து கொள்வதன் இரகசியமே இதில் உள்ள பல வகையான ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கின்றது என்பதால் தான்.
அதாவது இதில் உள்ள கலோரி, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> கோடைக்காலத்தில் தயிர தினமும் சேத்துக்கிறீங்களா அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்தா எப்படி
இவை அனைத்துமே நமது உடலுக்கு மிகுந்த நன்மையை அளிக்கும் சத்துக்கள் ஆகும். அதனால் ஒருவர் தினமும் நெய்யை சாப்பிடுவதால் அவருக்கு கீழ்கண்ட பலன்கள் எல்லாம் கிடைக்கும்.
செரிமான சக்தி அதிகரிக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, கல்லீரல், சீரான ஹார்மோன்கள் மற்றும் கருவுறுதலுக்கு தேவைப்படும் வைட்டமின்கள் கிடைக்கிறது.
மேலும் இதில் உள்ள ப்யூட்ரிக் அமிலம் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
அழகை மேம்படுத்துவதில் நெய்:
நெய்யை நேரடியாக நமது தோல்களில் தடவுவதால் உங்களின் தோல் என்றும் இளமையாக காட்சி அளிக்கும். மேலும் ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டிருந்தால் அந்த இடத்தில் நெய்யினை நேரடியாக அப்ளை செய்வதால் அந்த காயங்கள் விரைவில் ஆறும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இத்தனை நாளா இதை தெரிஞ்சுக்காமலே இஞ்சியை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே
நெய் உடலின் மெட்ட பாலிசத்தை மேம்படுத்துகிறது, இது எடை இழப்புக்கு உதவுகிறது. நெய்யை உட்கொள்வதால் உடலில் உள்ள மற்ற கொழுப்புகள் எரிந்து உடல் எடை குறையும்.
மேலும் இதனை தினமும் முகத்தில் அப்ளை செய்வதால் முகம் நன்கு பொலிவு பெறும். அதே போல் இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஒரு நிறமிகளுக்கு எதிராக செயல்படும் என்பதால் கருமையாக உள்ள உதடுகளில் இதனை அப்ளை செய்து மசாஜ் செய்து வருவதன் மூலம் உங்களின் உதடுகள் விரைவில் சிவப்பாக மாறிவிடும்.
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |