Henna Tree Multi Purpose
காலம் காலமாக பெண்களுக்கு மருதாணி என்றால் மிகவும் பிடிக்கும். அந்த மருதாணி மரத்தில் உள்ள இலைகளை பறித்து அதனை அரைத்து கையில் மருதாணி வைத்து கொள்வார்கள். அதனால் முந்தைய காலத்தில் வீட்டிற்கு ஒன்று என அனைவருடைய வீட்டிலும் மருதாணி மரம் இருந்து வந்தது. இத்தகைய மருதாணி மரத்தை பற்றி நமக்கு தெரிந்தது என்றால் இவ்வளவு தான். ஆனால் நம்முடைய வீட்டில் இருக்கும் மருதாணி மரத்தில் எண்ணற்ற பல விஷயங்கள் உள்ளது. ஆகையால் மருதாணி மரத்தில் உள்ள Multi Purpose பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் மருதாணி மரம் மட்டும் இல்லாமல் இன்னும் சில மரம் மற்றும் செடிகளின் பல்நோக்கு திறன் பற்றியும் தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
இதையும் படியுங்கள்⇒ வீட்டில் தென்னை மரம் இருந்தால் மட்டும் போதாது இந்த விஷயம் தெரியுமா.
மருதாணி மரம்:
மருதாணியனது லைத்திரேசியே என்ற குடும்பத்தை சேர்ந்தவையாகும். இந்த மரமானது அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடும் தன்மை கொண்டது.
இந்த மரத்தில் உள்ள இலைகள் 2 முதல் 4 மீட்டர் வரை நீளமும் மற்றும் 6 மீட்டர் வரை வளரும் பண்பு கொண்டுள்ளது. மேலும் இந்த மரத்தின் பூர்வீகமானது ஆஸ்திரேலியா, தென்மேற்கு ஆசியா மற்றும் வட அமெரிக்க ஆகும்.
மருதாணியில் உள்ள சத்துக்கள்:
- வைட்டமின் E
- தாதுக்கள்
- புரதச் சத்து
- ஆன்டி ஆக்ஸைடு
மருதாணி பூ:
- உடல் சூடு
- மன அழுத்தம்
- தூக்கமின்மை
- சருமத்தில் ஏற்படும் தேமல்
- உடலில் ஏற்படும் புண்
மருதாணி பூவானது மேலே சொல்லப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வினை அளிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பூவானது மற்ற பூக்களை போல வசம்
மருதாணி இலை பயன்கள்:
மருதாணி இலையானது தலையில் ஏற்படும் நரை முடியினை கருப்பாக மாற்றுவதற்கு பயன்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் வாயில் ஏற்படும் புண் மற்றும் உடலில் ஏற்படும் அதிகப்படியான சூடு போன்றவற்றிக்கு நல்ல பலனை அளித்து அந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு உதவுகிறது.
வெயில் காலத்தில் உடலில் அம்மை நோயினால் ஏற்பட்டு இருக்கும் தழும்பினை மறைய செய்யவும் மருதாணி இலை உபயோகப்படுத்தகிறது.
இந்த இலையில் பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்பு அதிகமாக உள்ளதால் நம்முடைய கை மற்றும் கால்களில் பூஞ்சை தொற்று காரணமாக கிருமி நாசினிகள் எதுவும் வராமல் இருக்க செய்கிறது.
மேலும் இந்த இலையானது பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்த போக்கினை குறைத்துக்கவும் மற்றும் வெள்ளைப்படுதலை குறைக்கவும் பயன்படுகிறது.
உங்களுடைய வீட்டில் வாழைமரம் இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..! |
மருதாணி காய்:
உடலில் ஏற்படும் எரிச்சலுக்கு மருதாணி காய் மருந்தாக இருக்கிறது. எப்படி என்றால் மருதாணி காயில் இருந்து எண்ணெய் தயாரித்து அதனை உடலில் எரிச்சல் ஏற்படும் இடத்தில் தடவினால் போதும் எரிச்சல் குணமாகிவிடும்.
மருதாணி பொடி:
மருதாணி இலையில் இருந்து தயாரிக்கப்பட்ட பொடியானது நரை முடி பிரச்சனை, முடி உதிர்வு மற்றும் முடி நீளமாக வளர என முடி சம்மந்தப்பட்ட நிறைய பிரச்சனைக்கு தீர்வாக உள்ளது.
அதுமட்டும் இல்லாமல் இந்த பொடியினை வைத்து ஹேர் டையாகவும் உபயோகப்படுத்துகிறார்கள்.
மேலும் இந்த மருதாணி இலையினை தான் இன்றைய தலைமுறையினர் கோன் என்று பயன்படுத்துகின்றார்கள்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |