Hibiscus Tree Multi Purpose
பூச்செடிகளை பார்த்தால் யாருக்கு தான் பிடிக்காது அனைவருக்கும் பூச்செடிகள் மீது ஈர்ப்பு இருக்கும். அதனால் நாம் நம்முடைய வீட்டில் நமக்கு பிடித்த மாதிரியான பூச்செடிகளை வளர்த்து வருவோம். அதில் பூக்கள் பூத்தவுடன் நாம் அதனை பறித்து தலையில் வைத்து கொள்வோம் அப்படி இல்லை என்றால் சாமிபடங்களுக்கு வைத்து விடுவோம். நமக்கு தெரிந்தது என்றால் இவற்றை மட்டும் தான். ஆனால் ஒரு சில செடி மற்றும் மரங்களை பார்த்தோம் என்றால் அதில் உள்ள இலை, பூ, காய் என அனைத்தும் எண்ணற்ற நன்மைகளை அளிக்கும். இவ்வாறு ஒரு பொருள் நிறைய விஷயங்களுக்கு மூலப்பொருளாக பயன்படுவதை தான் Multi Purpose என்று கூறுவோம். அத்தகைய Multi Purpose கொண்ட செம்பருத்தி மரம் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இதையும் படியுங்கள்⇒ ஒரே ஒரு கற்றாழையில் இவ்வளவு விஷயம் இருக்கா.! இத்தனை நாள் தெரியாமே போச்சே..
செம்பருத்தி செடி:
செம்பருத்தி செடியானது மால்வேசியே என்ற குடும்ப இனத்தை சேர்ந்தவை ஆகும். இத்தகைய செம்பருத்தி செடியில் 300-க்கும் அதிகமான பூக்கள் பூக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் இது மற்ற செடிகளை போல இல்லாமல் அனைத்து காலத்திலும் பூக்கள் பூக்கும் தன்மை கொண்டது.
இந்த செடியானது இலங்கை மற்றும் இந்தியா போன்ற நகரங்களில் மட்டுமே அதிகாமாக காணப்படுகிறது.
செம்பருத்தியின் வகைகள்:
- மஞ்சள் செம்பருத்தி
- ஒற்றை செம்பருத்தி
- வெள்ளை செம்பருத்தி
- அடுக்கு செம்பருத்தி
- ஆரஞ்சு செம்பருத்தி
செம்பருத்தி பூ:
கார்போஹைட்ரேட், வைட்டமின் C, கால்சியம், இரும்புச்சத்து, கொழுப்பு, புரதம், தியாமின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் செம்பருத்தி பூவில் அடங்கியுள்ளது.- அல்சர்
- சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்
- தலைமுடி உதிர்வு
- உடலில் இரும்புசத்து குறைபாடு
- உடலில் உள்ள கெட்ட கொழுப்பு
- இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை
- பெண்கள் கர்ப்பப்பை பிரச்சனை
- வயிற்று மற்றும் வாய் புண்
மேலே சொல்லப்பட்டுள்ள பிரச்சனைகள் மட்டும் இல்லாமல் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, மயக்கம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி பூ நல்ல பலனை அளிக்கிறது.
உங்களுடைய வீட்டில் வாழைமரம் இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..! |
செம்பருத்தி இலை:
சிலருக்கு தலையில் முடி கொட்டி வழுக்கை தலை போன்று காணப்படும். அப்படி இருக்கும் போது செம்பருத்தி இலையின் சாற்றினை பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் போதும் முடி மீண்டும் முளைத்து விடும்.
உடலில் உஷ்ணம் அதிகமாக காணப்படும் போது செம்பருத்தி இலையினை அரைத்து தேய்த்து குளித்தால் போதும் உடலில் உள்ள உஷ்ணம் முழுமையாக குறைந்து விடும்.
செம்பருத்தி எண்ணெய் பயன்கள்:
தலைமுடிக்கு சிறந்த தீர்வினை அளிக்கக்கூடியது என்றால் அது செம்பருத்தி பூ மற்றும் இலை தான். இவை இரண்டிலும் இருந்து தயாரிக்கப்பட்டது தான் செம்பருத்தி எண்ணெய்.
இந்த செம்பருத்தி எண்ணெயினை தலைக்கு தடவுதன் மூலம் தலையில் உள்ள பொடுகு, பேன், ஈர் ஆகிய அனைத்தும் நீங்கி முடியை கருப்பாகவும் அடர்த்தியாகவும் இயற்கையாகவே வளர செய்யும்.மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |