கரிசலாங்கண்ணி பயன்கள்
நம் வீட்டில் இருக்கின்ற செடி, மரம் எல்லாமே பல வகைகளில் பயன்படுகின்றன. ஆனால் நமக்கு தான் அதை பற்றி தெரியவில்லை. எடுத்துக்காட்டாக கருவேப்பிலையை சமையலில் தாளிப்பதற்கு மட்டும் தன் பயன்படுகிறது என்று நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் கருவேப்பிலையை பல முறைகளில் பயன்படுத்தலாம். அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
கரிசலாங்கண்ணி வகைகள்:
கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உள்ளது, ஒன்று மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி என்று இரு வகைகள் உள்ளது. இவை இரண்டையும் பூக்களின் நிறத்தை வைத்து கண்டுபிடிக்கலாம்.
கரிசலாங்கண்ணி மருத்துவ பயன்கள்:
இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணி சாற்றை 100 மில்லி என தினந்தோறும் குடித்து வந்தால் இரத்த சோகை பிரச்சனை நீங்கி விடும்.
குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணி சாறு இரண்டு 8 சொட்டு தேன் கலந்து குடித்தால் சளித்தொல்லை நீங்கி விடும். மேலும் அடிக்கடி குழந்தைக்கு சளி பிடிக்கிறது என்றால் அந்த பிரச்சனையும் குறைந்துவிடும்.
உங்க வீட்ல வல்லாரை கீரை இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!
மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி:
மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து கொள்ளவும். இதனை நெல்லிக்காய் அளவு எடுத்து பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7-10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் பளி, காரம் நீக்கி பத்தியம் இருக்க வேண்டும்.மஞ்சள் பூவடைய இலை 10, வேப்பிலை 6, கீழாநெல்லி துளசி 4 மூன்றையும் சேர்த்து நன்றாக மென்று காலை மற்றும் மாலை என் இரண்டு வேலையும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மோர் அரிசக் கஞ்சி சாப்பிடலாம். 10-20 நாளில் காமாலை சோகை நீர் சுரவை வீக்கம், கண், முகம் வெளுத்தல் ஆகியன குணமாகும். ஊளைச் சதை குறையும், சிறுநீர்த் தடை, எரிச்சல், கை,கால், பாதம் வீக்கம் குணமாகும்.
Karisalankanni For Hair Growth in Tamil:
தலை முடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி இலைகளை அரைத்து தலை முடி தடவி 20 நிமிடம் கழித்து தளி தேய்த்து குளிக்க வேண்டும். தலை முடி வளர்வதோடு மட்டுமில்லாமல் நரை முடிக்கும் சிறந்த தீர்வாக இருக்கும்.Karisalankanni For Skin in Tamil:
தோல் சம்மந்தப்ட்ட பிரச்சனைக்கு கரிசலாங்கண்ணி சிறந்த தீர்வை தருகின்றது. ஏனென்றால் இவற்றில் பாக்ட்ரியா எதிர்ப்பு பண்பை கொண்டுள்ளது. கரிசலாங்கண்ணி இலைகளை அரைத்து அதில் உள்ள சாற்றை மட்டும் எடுத்து பாத வெடிப்பை சரி செய்யலாம்.
துளசி செடி வைத்திருப்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா.
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |