உங்க வீட்ல கீழாநெல்லி செடி இருக்கா..! அப்போ அதை பற்றி உங்களுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியுமா..?

Keelanelli Plant Multi Purpose 

பொதுவாக நாம் அனைவரும் நம்முடைய வீட்டில் நிறைய வகையான பொருட்களை ஒரு நாளைக்கு பயன்படுத்தும். ஆனால் அந்த பொருட்களை நம்முடைய தேவைக்காக பயன்படுத்துவோமே தவிர அவற்றை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் நினைக்க மாட்டோம். அதுபோல நாம் பயன்படுத்தும் ஒரு பொருளானது ஒன்றிற்கு மட்டும் பயன்படாமல் நிறைய வகையான பயன்பாட்டிற்கு உதவக்கூடியதாக உள்ளது. இப்படி ஒரு பொருள் நிறையவற்றிற்கு பயன்படும் பொருளாக இருந்தால் அதனை நாம் பல்நோக்கு திறன்கொண்டது என்று கூறுவோம். அந்த வகையில் இன்று அனைவருடைய வீட்டிலும் ஒரு செடியாக வளர்க்கக்கூடிய கீழாநெல்லி செடி எதற்கு எல்லாம் பயன்படுகிறது என்று அதனுடைய Multi Purpose-ஐ பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ துளசி செடி வைத்திருப்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா. 

கீழாநெல்லி செடி:

கீழாநெல்லியானது பைலாந்தேசியே என்ற குடும்பத்தினை சேர்ந்த ஒரு வகையான மூலிகை செடி ஆகும். இந்த செடியானது ஒரு வருடம் முழுவதும் வளரக்கூடிய ஒரு தாவரமாக உள்ளது.

மேலும் இந்த செடியானது இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் ஒரு மூலிகை செடியாக இதுநாள் வரையிலும் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இது வெப்பமண்டல பகுதியில் தான் அதிகமாக காணப்படுகிறது.

கீழாநெல்லி இலை:

கீழாநெல்லி இலை

பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய தலைவலிக்கு கீழாநெல்லி இலையானது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையினை சரிசெய்வதற்கு கீழாநெல்லி இலையினை நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இந்த இலையானது நீரிழிவு நோயினை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கும் மற்றும் உடலில் ஏற்படும் அலர்ஜியினை சரி செய்யவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படும் கல் பிரச்சனையினை குணப்படுத்துவதற்கும் கீழாநெல்லியினை பயன்படுத்துகிறார்கள்.

கீழாநெல்லி காய் மற்றும் வேர்:

உடல் வலிமை பெறவும் மற்றும் முகத்தினை அழகாக தெரிய வைக்கவும் கீழாநெல்லியில் கிடைக்கக்கூடிய காய் மற்றும் வேரினை பொடியாக செய்து பயன்படுத்துகின்றனர்.

உங்க வீட்ல ஓமவல்லி செடி இருக்கா.. அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.. 

கீழாநெல்லியில் உள்ள சத்துக்கள்:

கீழாநெல்லி செடி

 • வைட்டமின் C
 • கால்சியம்
 • பொட்டாசியம்
 • கார்போஹட்ரேட்
 • மினரல்ஸ்

கீழாநெல்லி எதற்கு எல்லாம் பயன்படுத்தப்படுகிறது:

 1. நீர் கடுப்பு
 2. கண் பார்வை அதிகரிக்க
 3. உடலில் ஏற்படும் சூடு
 4. மன அழுத்தம்
 5. பல் கூச்சம்
 6. ஈறுகளில் ஏற்படும் பிரச்சனை
 7. மஞ்சள் காமாலை

கீழாநெல்லியானது மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்திற்கும் ஒரு தீர்வினை அளிக்கக்கூடியதாக உள்ளது.

கீழாநெல்லி பொடி:

கீழாநெல்லி பொடி

 • கண் புரை
 • வயிற்று வலி
 • உடம்பில் ஏற்படும் புண்
 • கை மற்றும் காலில் ஏற்படும் வீக்கம்
 • பசியின்மை
 • ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை
 • தொண்டை வலி
 • தொண்டை புண்
 • முடி உதிர்வு

மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்திற்கும் கீழாநெல்லியில் இருந்து கிடைக்கக்கூடிய பொடியினை தான் பயன்படுத்தி அதன் மூலம் சிறந்த பலனை பெற்று ஆரோக்கியமாக வளர்கின்றனர்.

கீழாநெல்லி ஜூஸ்:

வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து விதமான பிரச்சனைக்கும் கீழநெல்லியில் இருந்து கிடைக்கக்கூடிய ஜூஸ் ஆனது உபயோகப்படுத்தப்படுகிறது.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose