உங்கள் வீட்டில் மாமரம் இருக்கா..? அப்படியென்றால் இந்த விஷயம் தெரிந்திருக்க வேண்டுமே..!

mamarathin payangal in tamil

மாமரம் பயன்கள்  | Mamaram Payangal in Tamil

உங்கள் வீட்டில் மாமரம் இருக்கா என்று கேட்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. அதேபோல் அதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. நம்மில் சிலர் நினைப்பது என்னவென்றால் அது பழம் காய் மட்டுமே நமக்கு அளிக்கிறது என்று. ஆனால் அதில் நிறைய வகையான சத்துக்கள் உள்ளன. அதனை நிறைய விதமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

அதனை பற்றி  இந்த பதிவின் மூலம் உங்களுக்கு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. அதேபோல் யார் வீட்டில் மாமரம் இருக்கோ அவர்கள் அனைவரும் இந்த செய்திகளை தெரிந்துகொண்டு அதனை பயன்பெறும் வகையில் மாற்றிக்கொள்வது நல்லது..!

மாம்பழம் பற்றிய தகவல்:

மா மரத்தின் வரலாறு வெண்கல யுகத்திற்கு முந்தையது. அல்லது கிட்டத்தட்ட 4,000 ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த மாமரம் தெற்கு ஆசியாவை, குறிப்பாக கிழக்கு இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புத்த துறவிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு தான் இது போர்த்துகீசியர்களால் ஆப்பிரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டது.

 ஆங்கில வார்த்தையான ‘மாம்பழம்’ என்பது பழத்தின் மலையாளப் பெயரின் தழுவல் ஆகும். இது “மாங்கா” ஆகும்.  இந்த மாம்பழம் அனகார்டியேசி அல்லது முந்திரி குடும்பத்தைச் சேர்ந்த மாம்பழத்தின் அறிவியல் பெயர் Mangifera indica ஆகும்.  

மாம்பழத்தின் வகைகள்:

இந்தியாவில் அதிகளவு காணப்படும் மாம்பழங்களை பற்றி பார்க்கலாம் வாங்க..! பங்கன பள்ளி, அல்போன்சா மாம்பழம், பாதாமி மாம்பழம், தசேரி மாம்பழம், கேசர் மாம்பழம், மல்கோவா மாம்பழம், மல்லிகா மாம்பழம், ராஸ்புரி மாம்பழம், செந்தூரம் மாம்பழம் போன்ற பழங்கள் உள்ளன. இந்தியாவில் சுமார் 1500 வகையான மாம்பழம் மரங்கள் வளர்க்கப்படுகிறன்றன. ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு தனி சுவையை கொண்டுள்ளது.

அடுத்த முறை காற்றில் அசையும் மா மரத்தை நீங்கள் கடந்து செல்லும் போதோ அல்லது அதன் குளிர் நிழலின் கீழ் நிற்கும் போதோ அதனுடைய பயனை நமக்கே தெரியாமல் பயன்பெறுகிறோம். அதனை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்..!

வீட்டில் தென்னை மரம் இருந்தால் மட்டும் போதாது இந்த விஷயம் தெரியுமா.?

மாம்பழத்தை தவிர வேறு எது உங்களுக்கு உதவுகிறது தெரியுமா..?

மாங்கொட்டை பருப்பு பயன்கள்:

மாங்கொட்டை பருப்பு பயன்கள்

மாம்பழ விதையிலிருந்து கிடைக்கும் மாம்பழ வெண்ணெயை சருமத்தில் தடவினால் வெயில்காலத்தில் ஏற்படும் தீ காயங்கள் ஆறும். தீ காயங்கள் ஏற்படமால் தவிர்க்க உதவுகிறது. 

தழும்புகளை குணப்படுத்தவும், சுருக்கங்களைக் குறைக்கவும் முடியும். இது முடிக்கு மாய்ஸ்சரைசராகவும் பயன்படுத்தலாம். மாம்பழ விதை சாற்றை உட்கொள்வது உடல் எடையை குறைக்கவும், உடல் பருமனை குறைக்கவும் உதவியாக உள்ளது.

மாம்பழச் சாறு:

மாம்பழத்தை பறித்தவுடன் அதில் வரும் பால் அதனை எடுத்து தேனீ கொட்டிய இடத்தில் தேய்த்தால் வீக்கம் குறையும். வலியும் குறையும்.

மாமரம் பசை:

மரத்தில் சிறிய சிறிய பசை போல் காணப்படும். அதனை எடுத்து பித்த வெடிப்புகளில் அப்ளை செய்தால் குணமாகும். அதேபோல்  சிரங்கு நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம்.

மாமரம் பட்டை:

இந்த மாமரத்தில் பட்டையானது நிறைய விதமாக பயன்படுகிறது. காய்ந்த மா பட்டையை எடுத்து காயவைத்து பொடி செய்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

மேலும் விறகு எரிக்கவும் அதேபோல் ஹோமம் வளர்க்கவும் இதை பயன்படுத்துகின்றனர்.

மாமரம் இலை பயன்கள்:

மாமரம் இலை பயன்கள்

மாம்பழம் பற்றி உங்களுக்கு தெரியும் ஆனால் மாயிலையின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? தெரிந்துகொள்வோம் வாங்க..!

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  பனைமரம் பற்றி சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா 

இரத்த அழுத்தத்தை குறைகிறது:

மேலும் இதன் விளைவாக, ஒரு நாளைக்கு சில முறை மா இலைகளைக் கொண்டு தேநீர் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

நீரிழிவு நோயை தவிர்க்கும்:

இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் இருக்கும் இளஞ்சிவப்பு மா இலைகளில் டானின்கள் மற்றும் அந்தோசயினின்கள் நிறைந்துள்ளன. இந்த மா இலைகளின் சாறு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

வாய் பிரச்சனைக்கு உதவுகிறது:

மோசமான வாய்வழி சுகாதாரம் அல்லது ஈறுகளின் நோய்கள் வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். ஆகவே மா இலைகளை சுத்தம் செய்து, தண்ணீர் சிறிது மஞ்சள் நிறமாக மாறும் வரை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதில் சிறிது உப்பு கொண்டு வாய் கொப்பளித்து வருவதன் மூலம் ஈரல்கள் பிரச்சனை இருக்காது.

மாம்பழம் இலையை வெதுவெதுமான நீரில் முதல் நாள் இரவே ஊறவைத்து காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

Mamarathin Payangal in Tamil:

Mamarathin Payangal in Tamil

மாமரத்தின் நன்மைகளை பற்றி இங்கு பார்ப்போம். சிலருக்கு இதனுடைய நன்மைகள் தெரியும் சிலருக்கு இதனை பற்றி தெரியாது..? தெரியாதவர்கள் படித்து  தெரிந்துகொள்ளவும்..! தெரிந்தவர்களுக்கு இது நியாபகம் படுத்தும் ஒரு பதிவாக இருக்கும் வாங்க அதனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம்..!

  • இரத்த சோகையை தடுக்கும்
  • செரிமானத்தை மேம்படுத்துகிறது
  • உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
  • கண் பார்வையை மேம்படுத்தும்
  • இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது

மாமரத்தின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்கு ஆகும். அதனுடைய தலைமுறைக்கும் நம்முடைய தலைமுறைக்கும் அதனுடைய பயன்களை அளிக்கிறது. மாமரத்தை பற்றி பேசினால் மனிதர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்கிறது. அது மருத்தவ ரீதியாகவும் உதவுகிறது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  உங்களுடைய வீட்டில் வாழைமரம் இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com