தக்காளி செடியை வீட்டில் வைத்து இருப்பவர்களுக்கு இது தெரியாதா..! அப்படினா இப்போ தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

Multi Purpose For Tomato Plant 

அனைவருடைய வீட்டிலும் தக்காளி செடி கட்டாயமாக இருக்கும். அத்தகைய தக்காளி செடியினை நாம் அழகாக பராமரித்து வருவோம். குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அதில் காய்த்து இருக்கும் தக்காளியினை சமையலுக்கு பயன்படுத்துவோம். இதுநாள் வரையிலுமே இப்படி தான் நாம் செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி தக்காளி செடியில் நமக்கு தெரியாத நிறைய விஷயங்கள் உள்ளது. ஆகையால் இன்றைய பதிவில் தக்காளி செடி முதல் அதில் உள்ள காய் மற்றும் பழம் என அனைத்தினையும் விரிவாக எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ வீட்டில் செம்பருத்தி செடி வைத்திருக்கும் அனைவருக்கும் இது தெரியாத..! அப்போ உடனே தெரிஞ்சுக்கோங்க.. 

தக்காளி செடி:

அனைவருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய தக்காளி செடியானது சோலோனேசியே என்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு வகை செடியாகும். மேலும் இந்த செடியின் அறிவியல் பெயர் சோலானம் லைக்கோபெர்சிக்கம் மற்றும் ஆங்கில பெயர் டொமேட்டோ என்பதாகும்.

இந்த செடி குறிப்பாக 3 முதல் 10 அடி உயரத்தில் வளரும் தன்மை கொண்டது. அதுமட்டும் இல்லாமல் இதனையுடைய தாயகம் என்றால் அது வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா தான்.

தக்காளி செடி எல்லா வகையான மண்ணிலும் வளரும் பண்பு கொண்டது. அனைத்து விதமான சமையலில் இந்த செடியில் இருந்து கிடைக்கக்கூடிய தக்காளி தான் பயன்படுகிறது.

தக்காளி காய் பயன்கள்:

தக்காளி காய்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க தக்காளி காய் உதவுகிறது. எப்படி என்றால் தக்காளி காய் மற்றும் இலைகளை நன்றாக அரைத்து. அதன் பின்பு அதில் சிறிது மஞ்சத்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து காய்ச்சி அதனை வடிகட்டி குடித்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் மூட்டு வலியினையும் சரி செய்கிறது. 

தக்காளியின் மருத்துவ குணங்கள்:

தக்காளியின் மருத்துவ குணங்கள்

தக்காளியில் எண்ணற்ற மருத்துவக்குணங்களும் இருந்தாலும் கூட அதில் 10-க்கும் மேற்பட்ட சத்துக்கள் உள்ளது. அந்த சத்துக்கள் என்னென்ன என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தக்காளியில் உள்ள சத்துக்கள்:

  • வைட்டமின் A
  • வைட்டமின் B
  • வைட்டமின் B6
  • வைட்டமின் C
  • வைட்டமின் K
  • நியாசின்
  • இரும்புச்சத்து
  • நார்ச்சத்து
  • மாவுச்சத்து
  • பொட்டாசியம்
  • பாஸ்பரஸ்
  • கால்சியம்
  • மெக்னீசியம்
  • போலேட்

தக்காளி எதற்கு எல்லாம் பயன்படுகிறது:

எலும்பு பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதற்கு அதிகமாக கால்சியம் மற்றும் வைட்டமின் K  நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். இந்த இரண்டு சத்தும் தக்காளியில் இருப்பதால் இது எறும்பு சம்மந்தபட்ட பிரச்சனைகளுக்கு நல்ல பலனை அளிக்கிறது. 

தக்காளியினை நாம் தினமும் சாப்பிடுவதால் இதில் உள்ள வைட்டமின் A சத்து கண் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாக்கிறது.

அதுபோல தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆனது நம்முடைய உடலில் புற்றுநோய் வராமலும் மற்றும் தேவையில்லாத நச்சு பொருட்களை வெளியேற்றவும் பயன்படுகிறது.

தினமும் தக்காளியை சாப்பிடுவதனால் நமக்கு பசியினை தூண்டவும், இரத்தத்தை சுத்திகரிக்கவும் மற்றும் உடல் எடையினை குறைக்கவும் உதவுகிறது.

ஒரே ஒரு கற்றாழையில் இவ்வளவு விஷயம் இருக்கா.! இத்தனை நாள் தெரியாமே போச்சே..

சருமத்திற்கு தக்காளி:

தக்காளி செடி

ஆண் மற்றும் இருவருக்கும் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை, பருக்கள் மற்றும் கரும்புள்ளி ஆகியவற்றை நீக்கி முகத்தை பளிச்சென்று இருக்க செய்கிறது. அதுமட்டும் இல்லாமல் முகத்தை பாக்டீரியா தொற்றுகளிடம் இருந்து பாதுகாக்கிறது.

அதனால் பெரும்பலான பெண்கள் முகத்திற்கு தக்காளியினை தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இளமையான தோற்றத்தையும் இது அளிக்கிறது.

தக்காளி விதை:

இதனுடைய விதையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் இது உடலில் ஏற்படும் செரிமான பிரச்சனையை சரி செய்ய பயன்படுகிறது.

இந்த தக்காளியினை சமையலில் எல்லா வகையான சாப்பாட்டிற்கும், சாஸ் மற்றும் தக்காளி பவுடர் போன்றவற்றை தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement