இத்தனை நாளா இதை தெரிஞ்சுக்காமலே கொண்டைக்கடலையை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே..!

Advertisement

Multi Purpose of Chickpeas in Tamil

பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களையும் நாம் ஒரே முறையில் தான் பயன்படுத்தி வருவோம். ஆனால் நாம் பயன்படுத்தும் பொருட்களை பல்வேறு வகையில் பயன்படுத்தலாம். அது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அதனால் தான் நமது பதிவின் மூலம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் பல்வேறு பயன்பாட்டை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம்.

அந்த வரிசையில் இன்றைய பதிவில் கொண்டைக்கடலையில் நமக்கு கிடைக்கும் பல வகையான பயன்கள் பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். கொண்டைக்கடலையினால் அப்படி என்ன நமக்கு பல வகையான நன்மைகள் கிடைக்கின்றது என்று தானே சிந்தனை செய்கிறீர்கள். இன்றைய பதிவை முழுதாக படித்தால் உங்களின் மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில் கிடைக்கும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

கொண்டைக்கடலையின் பல்வேறு பயன்கள்:

Kondakadalai benefits in tamil

சமையலில் கொண்டைக்கடலை: 

கொண்டைக்கடலை என்றவுடன் நாம் அனைவருக்குமே முதலில் நினைவிற்கு வருவது அதன் சமையல் பயன்பாடு தான். ஆம் நண்பர்கள் இந்த கொண்டைக்கடலை இந்திய பாரம்பரிய உணவுகள் முதல் மேலை நாட்டு உணவுகளிலும் ஒரு முக்கிய உணவு பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

அதாவது இந்த கொண்டைக்கடலையை பயன்படுத்தி சுண்டல், சாலட், புளிக்குழம்பு, சன்ன மாசாலா மற்றும் கிரேவி ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

இலவங்கப்பட்டையை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன் இதை தெரிஞ்சிக்கோங்க

ஆரோக்கியத்தில் கொண்டைக்கடலை: 

நமது முன்னோர்கள் உணவில் கொண்டைக்கடலையை சேர்த்து கொண்டதுக்கான இரகசியமே இதில் உள்ள பல வகையான ஊட்டச்சத்துக்களால் நமது உடல் மிகுந்த நன்மைகளையும், ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது என்பதால் தான்.

அதாவது இதில் உள்ள கலோரி, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி, இரும்புச் சத்து மற்றும் புரோட்டீன் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

இவை அனைத்துமே நமது உடலுக்கு மிகுந்த நன்மையை அளிக்கும் சத்துக்கள் ஆகும். அதனால் ஒருவர் தினமும் கொண்டைக்கடலையை சாப்பிடுவதால் அவருக்கு கீழ்கண்ட பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

நெய்யை ருசித்து சாப்பிட்டால் மட்டும் போதாது இதுவும் தெரிஞ்சிருக்கனும்

உடலில் உள்ள புரோட்டீன் மற்றும் இரும்புச் சத்து அதிகரிக்கும். மேலும் ​சீரண சக்தியை மேம்படும், இதயம் ஆரோக்கியமாக இருக்கும், உடல் எடை குறையும் மற்றும் ​இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

இது போன்ற பல நன்மைகளை நமது உடலுக்கு இந்த கொண்டைக்கடலை அளிக்கிறது.

அழகை மேம்படுத்துவதில் கொண்டைக்கடலை:

இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை உங்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை ஆகியவற்றை போக்க உதவுகின்றன. மேலும் ஒருவர் தினமும் கொண்டைக்கடலையை சாப்பிடுவதால் அவருக்கு இளமையான சருமம் கிடைக்கும்.

கொண்டைக்கடலையில் உள்ள இரும்பு மற்றும் தாமிரம் உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது இரத்தத்தில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது மற்றும் அதிக ஆக்ஸிஜனை வழங்குகிறது. இதனால் சருமம் இளமையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

கோடைக்காலத்தில் தயிர தினமும் சேத்துக்கிறீங்களா அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்தா எப்படி

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose

 

Advertisement