Multi Purpose of Pirandai in Tamil | பிரண்டை இலையின் பயன்கள்
அனைவரும் வீட்டில் செடிகள், மரங்கள் போன்றவற்றை வளர்த்து வருவோம். அப்படி நாம் வளர்த்து வரும் ஒவ்வொன்றுமே நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் அவற்றில் பலவகையான பயன்பாடுகள் இருக்கும். ஆனால் அதில் ஒரு சில விஷயங்கள் மட்டுமே நமக்கு தெரியும். இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றும் நமக்கு பல வகைகளில் பயன்படுகிறது. அந்த வகையில் நம் வீட்டில் வளர்க்கும் பிரண்டை செடி எதற்கெல்லாம் பயன்படுகிறது..? என்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பிரண்டையின் பல்வேறு பயன்கள்:
பிரண்டை செடி:
பிரண்டை செடி திராட்சை குடும்பத்தை சேர்ந்த வற்றாத தாவரமாகும். இதனை வெல்ட் திராட்சை, அடமண்ட் க்ரீப்பர், அஸ்திசம்ஹாரகா மற்றும் ஹட்ஜோட் என்றும் அழைப்பார்கள்.பிரண்டையின் தாவரவியல் பெயர் Cissus Quadrangularis Linn ஆகும். பழங்காலத்தில் இருந்தே பிரண்டை மருத்துவ தாவரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் மேற்கு ஆசியா போன்ற வெப்பமான பகுதிகளில் காணப்படும் புதர் செடியாகும்.
இவற்றின் தண்டு பகுதி தட்டையாகவும், சதைப்பற்றுள்ளதாகவும் மற்றும் முனைகளில் முகடு மற்றும் நாற்கர வடிவத்திலும் இருக்கும்.
இதையும் படியுங்கள்⇒ உங்க வீட்ல ஓமவல்லி செடி இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..
பிரண்டையில் உள்ள சத்துக்கள்:
- வைட்டமின் சி
- வைட்டமின் ஈ
- கால்சியம்
- பாஸ்பரஸ்
- கரோட்டின்
- சைட்டோஸ்டீரால்
பிரண்டை எதற்கெல்லாம் பயன்படுகிறது..?
- இறப்பை புண்
- இறப்பை அழற்சி
- மலசிக்கல்
- புழு தொல்லை
- பசியின்மை
- வாய்வு
- கண் நோய்கள்
- உடல் பருமன்
- இரத்த சோகை
- எலும்பு முறிவு
போன்ற பல பிரச்சனைகளுக்கு பிரண்டை ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது.
இதையும் படியுங்கள் ⇒ உங்க வீட்ல தூதுவளையை பயன்படுத்துவீங்களா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!
உணவில் பிரண்டை:
பிரண்டை ஒரு உண்ணக்கூடிய தாவரமாகும். இதை இந்தியாவின் தென் பகுதிகளில் பிரண்டை துவையல், பிரண்டை ரசம், பிரண்டை ஜூஸ், பிரண்டை சட்னி, பிரண்டை அடை என பலவகைகளில் உணவாக பயன்படுத்தி வருகின்றனர்.
பிரண்டை இலை:
பிரண்டை இலை காயங்கள் மற்றும் தீக்காயங்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
பிரண்டை ஜூஸ் பயன்கள்:
ஒழுங்கற்ற மாதவிடாய், காது நோய்கள் மற்றும் மூக்கில் இரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்த பிரண்டை சாறு பயன்படுகிறது.
உடம்பில் அடிபட்ட வீக்கம் குறைய, பிரண்டை சாறுடன் சிறிதளவு உப்பு மற்றும் புளி சேர்த்து காய்ச்சி மிதமான சூட்டில் வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் வீக்கம் குறையும்.
மருத்துவத்தில் பிரண்டை:
பிரண்டை ஒரு மருத்துவ தாவரமாக இருப்பதால் பழங்காலத்தில் இருந்தே மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவ மேம்பாட்டு பகுதியில் பல்துறை மருத்துவ மருந்தாக இதனை பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலும் சித்த மருத்துவத்தில் பிரண்டை டானிக்காகவும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.
இதையும் படியுங்கள் ⇒ சமையலுக்கு பூண்டை பயன்படுத்தினால் மட்டும் போதாது.! அதில் இந்த விஷயம் தெரியுமாஉங்களுக்கு
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |