Multipurpose of Coconut in Tamil
நாம் அனைவரும் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களுமே நமக்கு பல்வேறு வகைகளில் பயன்படுகிறது என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. அதனை அறியாமல் நாமும் அப்பொருளை ஒரே முறையில் மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். எனவே ஒவ்வொரு பொருளினுடைய பல்வேறு பயன்பாடுகளை பற்றி அறிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் தினமும் ஒவ்வொரு பொருளின் பல்நோக்கு திறன் பற்றி அறிந்து வருகிறோம். எனவே அந்தவகையில் இன்றைய பதிவில் தேங்காய் எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தேங்காயின் பல்வேறு பயன்பாடுகள்:
தேங்காயில் உள்ள சத்துக்கள்:
- புரதச் சத்து
- மாவுச் சத்து
- கால்சியம்
- பாஸ்பரஸ்
- இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள்
- வைட்டமின் சி
- பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள்
- நார்ச்சத்து
எனவே உடல் இயக்கத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் தேங்காயில் உள்ளன.
வறண்ட சருமத்திற்கு தேங்காய்:
வறண்ட சருமம் உடையவர்கள் தேங்காயை அரைத்து அதில் உள்ள சாற்றினை முகத்தில் அப்ளை செய்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள வறட்சி நீங்கி சருமம் ஈரப்பதமாகவும் மென்மையாகவும் இருக்கும்.
தேங்காய் எண்ணெயை தலைல தடவுனா மட்டும் போதுமா.. இந்த விஷயமும் தெரிஞ்சிருக்கணும்..
முடியின் வளர்ச்சிக்கு தேங்காய்:
தேங்காய் பாலை தலைமுடியில் அப்ளை செய்து குளித்து வருவதன் மூலம் முடி விரைவில் நீளமாக வளரும். அதுமட்டுமில்லாமல், முடியை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது.
ஆன்மீகத்தில் தேங்காய்:
தேங்காய் இல்லாமல் கடவுளுக்கு எந்த ஒரு பூஜையும் செய்ய மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும் அதில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கும். எனவே தேங்காய் ஆன்மீகத்தில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.
உடலை பளபளப்பாகும் தேங்காய் நீர்:
தேங்காய் நீரில் உடலின் பளபளப்பை மீட்டு தருகிறது. மேலும் இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி பெரும். மேலும் இதில் அதிக அளவில் ஊட்டச்சத்து உள்ளதால் தோல் அரிப்பு மற்றும் நோய் தொற்றுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்குகிறது.
உடல் ஆரோக்கியத்தில் தேங்காய் பூ:
தேங்காய் பூவில் மிக அதிக அளவில் ஊட்டச்சத்து இருப்பதால் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இது போன்ற பல நன்மைகளை அளிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.
தேங்காய் பூவில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? என்னப்பா சொல்றீங்க..!
தொழிலில் தேங்காய் நார்:
தேங்காய் நாரின் பயன்பாடுகள் அளவற்றது. தேங்காய் நாரை பயன்படுத்தி கயிறுகள், மெத்தைகள், பாத்திரம் தேய்க்கும் நார் போன்ற பல தயாரிப்புகள் தயாரிக்கப்படுகிறது.
தேங்காய் மட்டை:
கிராமங்களில் தேங்காய் மட்டைகளை காயவைத்து அடுப்பு எரிப்பார்கள். அதுமட்டுமில்லாமல் இது விவசாயத்தில் உரமாகவும் பயன்படுகிறது. மேலும் இதில் உள்ள கொட்டாங்குச்சி அடுப்பு எரிப்பதற்கு மட்டுமின்றி உணவு வைத்து உண்ணக்கூடிய பொருளாகவும் பயன்படுகிறது. அக்காலத்தில் கொட்டாங்குச்சியில் தான் உணவு உண்ணுவார்கள். மேலும் இது ஆப்பை போன்ற பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.
பச்சையாக தேங்காய் சாப்பிடுவீர்களா.. அப்படியென்றால் இதை தெரிந்துகொள்ளுங்கள்..
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |