வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்க வீட்ல சுண்டைக்காய் செடி இருக்கா..! அப்போ இந்த விஷயத்தை எல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!

Updated On: March 28, 2023 7:50 AM
Follow Us:
Multipurpose of Sundakkai in Tamil
---Advertisement---
Advertisement

Multipurpose of Sundakkai in Tamil

வணக்கம் நண்பர்களே..! நம் பொதுநலம் பதிவின் மூலம் தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சுண்டக்காய் எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். அனைவரது வீடுகளிலும் நிறைய செடிகளை வளர்த்து வருவோம். ஒவ்வொரு பொருளுமே நமக்கு பல வகைகளில் பயன்படுகிறது. ஆனால் நமக்கு தெரியாமல் இன்னும் நிறைய பயன்கள் ஒவ்வொரு காய், பழம், செடி என அனைத்தும் பல நன்மைகளை அளிக்கிறது. அந்த வகையில் சுண்டைக்காயில் நமக்கு தெரியாமல் நிறைய நன்மைகள் உள்ளன. சுண்டைக்காயில் நாட்டு சுண்டைக்காய், காட்டு சுண்டைக்காய் என  இரண்டு வகைகள் உள்ளது. எனவே இவற்றின் பல்வேறு பயன்களை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சுண்டைக்காயின் பல்வேறு பயன்கள்:

Multipurpose of Sundakkai in Tamil

சுண்டைக்காய் செடி:

சுண்டைக்காய் செடியானது ஓரளவு வளரக்கூடிய பெருஞ்செடியாகும். இது இரண்டு முதல் மூன்று மீட்டர் வரை வளரக்கூடியது. இவற்றின் இலைகள் பரந்து விரிந்து சிறிது பிளவுபட்டும் காணப்படும். இச்செடிகள் உள்ள பூக்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும். இவற்றின் காய்கள் கொத்து கொத்தாக காய்க்கும் தன்மை உடையது. சுண்டைக்காய் கசப்பு தன்மை உடையது.

சுண்டை இலை மற்றும் வேரின் பயன்கள்:

 multipurpose of turkey berry in tamil

 சுண்டை செடியின் இலைகள், வேர்கள் மற்றும் காய்கள் அனைத்தும் மூலிகை மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றின் இலைகள் உடலில் ஏற்படும் குருதிபெருக்கங்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. 

சுண்டைக்காய் சாறின் பயன்கள்:

சுண்டைக்காயுடன் மிளகும் கறிவேப்பிலையும் சேர்த்து காய்ச்சி கஷாயம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் மலத்துவாரத்தில் இருக்கும் பூச்சிக்கடி, மூலகிருமி போன்ற பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

சுண்டைக்காயில் உள்ள சத்துக்கள்:

 சுண்டைக்காயில் புரதங்கள், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் அதிகமாக உள்ளது. 

சுண்டைக்காய் எதெற்கெல்லாம் பயன்படுகிறது..?

சமையலுக்கு சுண்டைக்காய்:

 multipurpose of turkey berry in tamil

சமையலில் சுண்டைக்காய் பயன்படுகிறது. சுண்டைக்காய் வத்தக்குழம்பு, சுண்டைக்காய் பொரியல், சுண்டைக்காய் சாம்பார், சுண்டைக்காய் வத்தல் என பல வகைகளில் சமையலுக்கு பயன்படுகிறது.

இவற்றில் கசப்பு தன்மை அதிகமாக உள்ளதால் வயிற்றில் உள்ள குடல் பூச்சிகள் இறந்து விடும்.

நோய்களை தீர்க்கும் சுண்டைக்காய்:

  • ஆஸ்துமா
  • மார்பு சளி
  • வறட்டு இருமல் 
  • மூச்சுக்குழாய் நோய்கள்
  • வயிற்று புழுக்கள்
  • பேதி 
  • மலசிக்கல்
  • காசநோய்
  • உடல் வளர்ச்சியின்மை
  • கல்லீரல் நோய்கள்
  • மண்ணீரல் நோய்கள்
  • சர்க்கரை நோய்

இதுபோன்ற பல நோய்களுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

மூலிகை மருத்துவத்தில் சுண்டைக்காய்:

சுண்டை, அமரக்காய், மலைச்சுண்டை மற்றும் கடுகி என்று மூலிகை மருத்துவத்தில் சுண்டைக்காய் செடியினை பயன்படுத்தி வருகின்றன.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose 

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

multipurpose of ponnanganni keerai in tamil

நீங்கள் பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுபவர்களா..! அப்போ இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா..?

 Multi Purpose of Pirandai in Tamil

உங்க வீட்ல பிரண்டை செடி இருக்கா..! அப்போ இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!

multipurpose of poovarasu maram

உங்க வீட்ல பூவரச மரம் இருக்கா.! அப்போ இந்த விஷயம் தெரியுமா உங்களுக்கு..

Coconut Tree in Tamil

வீட்டில் தென்னை மரம் இருந்தால் மட்டும் போதாது இந்த விஷயமும் தெரிந்திருக்கணும்..!

Multi Purpose of Pomegranate in Tamil

மாதுளை பழத்தை சாப்பிட்டால் மட்டும் போதாது.. இதையும் தெரிச்சிருக்கணும்..!

banana tree multi purpose in tamil

உங்களுடைய வீட்டில் வாழைமரம் இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!

இலவங்கப்பட்டையை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன் இதை தெரிஞ்சிக்கோங்க..!

Eggs Multipurpose in Tamil

முட்டை முடிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதுன்னு தெரியும்.. ஆனால் இந்த விஷயத்தையும் தெரிஞ்சிக்கோங்க..!

Multipurpose of Cauliflower in Tamil

காலிஃப்ளவரின் பல்வேறு பயன்படுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா.?